த பிரிடேட்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த பிரிடேட்டர்
The Predator
இயக்குனர்ஷேன் பிளாக்
தயாரிப்பாளர்ஜான் டேவிஸ்
கதை
 • ஃப்ரெட் டெக்கர்
 • ஷேன் பிளாக்
மூலக்கதைபிரிடேட்டர் பாத்திரங்கள் -
ஜிம் தாமஸ்
இசையமைப்புஹென்றி ஜேக்மேன்
நடிப்பு
 • பாய்ட் ஹோல்ப்ரூக்
 • டிரெவன்டே ரோட்ஸ்
 • ஜேக்கப் ட்ரம்ப்லே
 • கீகன்-மைக்கேல் கீ
 • ஒலிவி மன்
 • தாமஸ் ஜேன்
 • அல்ஃபி அலென்
 • ஸ்டெர்லிங் கே. பிரவுன்
ஒளிப்பதிவுலாரி ஃபாங்
படத்தொகுப்புஹாரி பி. மில்லர் III
கலையகம்டேவிஸ் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்[1]
வெளியீடுசெப்டம்பர் 2018 (2018-09)(TIFF)
செப்டம்பர் 14, 2018 (அமெரிக்கா)
கால நீளம்101 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

த பிரிடேட்டர் (The Predator) என்பது வெளிவர இருக்கும் அமெரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும். இப்படமானது பிளாக் மற்றும் ஃப்ரெட் டீக்கர் ஆகியோர் எழுத, ஷேன் பிளாக்கால் இயக்கப்பட்டது. இது பிரிடேட்டர் (1987), பிரிடேட்டர் 2 (1990), பிரிடேட்டர்ஸ் (2010) ஆகிய பிரிடேட்டர் திரைப்படங்களின் வரிசையில் நான்காவதாக வெளிவரும் திரைப்படமாகும். முதன்மைப் படத்தில் பிளாக் ஒரு துணை பாத்திரத்தை ஏற்றிருந்தார், அதே நேரத்தில் முதல் மூன்று வரிசை படங்களின் தயாரிப்பாளராக இருந்த ஜான் டேவிஸ் மீண்டும் இப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.

இப்படத்தில் பாய்ட் ஹோல்ப்ரூக், ட்ரெவண்டே ரோட்ஸ், ஜேக்கப் ட்ரம்ப்லே, கீகன்-மைக்கேல் கீ, ஒலிவிய மன், தாமஸ் ஜேன், ஆல்ஃபீ ஆலன், ஸ்டெர்லிங் கி. பிரவுன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு 2017 சூன் மாதம் முடிவடைந்தது. அதனையடுத்து 2018 செப்டம்பர் 14[3] அன்று 20ஆம் சென்சுரி ஃபாக்சால் ஐபாஸ் மற்றும் டால்பி சினிமா மற்றும் தரநிலை வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுகிறது.

கதைச்சுருக்கம்[தொகு]

நவீன மிண்ணணு விளையாட்டுப் பொருட்களை இயக்கும் ஒரு சிறுவன் ஒருவனின் செயலானது, புவிக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் வேற்றுகிரகவாசிகளான பிரிடேட்டர் விண்கலத்துக்கான அழைப்புச் சமிக்ஞையாகி அது விபரீதமாகிறது. மரபணு மாற்றம்கொண்ட புதிய பிரிடேடர்களும், பிரமாண்ட பிரிடேடர்களுமாக புவியை கைப்பற்றவும், அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிக்கவும் வருகின்றன. இதற்கு எதிராக ராணுவ வீரர் குழுவுடன் அறிவியல் ஆசிரியை ஒருவரும் இணைந்து, மனித இனத்தை காக்க போர் செய்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Film releases". Variety Insight. பார்த்த நாள் May 11, 2018.
 2. "The Predator at the Toronto International Film Festival". tiff. பார்த்த நாள் August 9, 2018.
 3. "Fox Moves Release of James Cameron’s ‘Alita: Battle Angel’". Variety (February 13, 2018). பார்த்த நாள் February 14, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]