வ. ந. நவரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வ. ந. நவரத்தினம்
V. N. Navaratnam

நாஉ
சாவகச்சேரி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1956–1983
முன்னவர் வி. குமாரசாமி, அஇதகா
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 5, 1929(1929-06-05)
நுணாவில், சாவகச்சேரி, இலங்கை
இறப்பு சனவரி 29, 1991(1991-01-29) (அகவை 61)
டொரண்டோ, கனடா
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
தமிழர் விடுதலைக் கூட்டணி
வாழ்க்கை துணைவர்(கள்) இரகுபதி நவரத்தினம்
படித்த கல்வி நிறுவனங்கள் திரிபேக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
இலங்கை சட்டக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் சைவ சமயம்

வல்லிபுரம் நல்லதம்பி நவரத்தினம் (V. N. Navaratnam, 5 சூன் 1929 - 29 சனவரி 1991) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நவரத்தினம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரியில் 1929 சூன் 5 இல் பிறந்தார்.[1][2][3] சாவகச்சேரி திரிபேர்க் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1][2] பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டவறிஞராக வெளியேறினார்.[1][2] 1954 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.[1][2]

அரசியலில்[தொகு]

நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] மார்ச் 1960,[5] சூலை 1960,[6] 1965,[7] 1970[8] தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1958 இனக்கலவரங்களை அடுத்து[9] நவரத்தினம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் 1958 சூன் 4 ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டனர்.[10] 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தை நவரத்தினம் முன்னின்று நடத்தினார்.[11][12]

1972 மே 14 இல் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தன.[13][14][15][16] தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1972 அக்டோபரில் தனது நாடாளுமன்ற இருக்கையைத் துறந்ததை அடுத்து நவரத்தினம் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவரானார்.[1][2] தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நவரத்தினம் இருந்து செயல்பட்டார்.[17] 1976 மே 21 இல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த போது நவரத்தினம் ஏனைய தமிழ்த் தலைவரக்ளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார்.[18][19] செல்வநாயகம், பொன்னம்பலம் உட்படப் பல முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களது வழக்கை நடத்தில் 1977 பெப்ரவரி 10 இல் விடுதலை பெற்றுக் கொடுத்தனர்[20][21]

1977 தேர்தலில் நவரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[22] தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நவரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[23].

பிற்காலம்[தொகு]

கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் புலம் பெயர்ந்து சிறிது காலம் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த நவரத்தினம், பின்னர் நிரந்தரமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். மூன்று நாடுகளிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவருக்கு சிறீ நமச்சிவாயா, சிறீ வல்லிபுரானந்தன், மைத்ரேயி, சிறீ சண்முகானந்தன் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[1] 1991 சனவரி 29 இல் கனடாவில் மாரடைப்பினால் காலமானார்.[1][2][24]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ச. ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 121. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "V. N. Navaratnam Dies in Toronto". Tamil Times X (3): 26. 15 பெப்ரவரி 1991. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php/Tamil_Times_1991.02?uselang=en. பார்த்த நாள்: 2015-02-16. 
  3. "Directory of Past Members: Navaratnam, Vallipuram Nallathamby". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2501. 
  4. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF. 
  5. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF. 
  6. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF. 
  7. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF. 
  8. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF. 
  9. Wilson, A. Jeyaratnam (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: a Political Biography. University of Hawaii Press. பக். 89. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977?uselang=en. 
  10. Vittachi, Tarzie (1958). Emergency '58 the Story of the Ceylon race Riots. André Deutsch. பக். 90. http://www.noolaham.org/wiki/index.php/Emergency_%2758_the_Story_of_the_Ceylon_race_Riots?uselang=en. 
  11. "20 February 1961". Peace and Conflict Timeline. http://pact.lk/20-february-1961/. 
  12. Sri Kantha, Sachi (20 பெப்ரவரி 2011). "Satyagraha of February 1961 in Eelam". Ilankai Tamil Sangam. http://sangam.org/2011/02/Satyagraha_1961.php?uid=4252. 
  13. Ross, Russell R.; Savada, Andrea Matles, தொகுப்பாசிரியர்கள் (1990). Sri Lanka: A Country Study. அமெரிக்கக் காங்கிரசு நூலகம். பக். 51. http://cdn.loc.gov/master/frd/frdcstdy/sr/srilankacountrys00ross/srilankacountrys00ross.pdf. 
  14. Chattopadhyaya, Haraprasad (1994). Ethnic Unrest in Modern Sri Lanka: An Account of Tamil-Sinhalese Race Relations. M. D. Publications. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85880-52-2. https://books.google.com/books?id=MRU6QKPBTFQC. 
  15. Amarasinghe, Samanga (2011). Independence to Referendum. Lulu Enterprises. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-105-01908-1. https://books.google.com/books?id=iV6AAwAAQBAJ. 
  16. Rajasingham, K. T.. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. https://web.archive.org/web/20020213084644/http://atimes.com/ind-pak/DA19Df06.html. பார்த்த நாள்: 2015-02-16. 
  17. Wilson, A. Jeyaratnam (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism, 1947–1977: a Political Biography. University of Hawaii Press. பக். 132. http://www.noolaham.org/wiki/index.php/S.J.V.Chelvanayakam_and_the_Crisis_of_Sri_Lankan_Tamil_Nationalism,_1947-1977?uselang=en. 
  18. டி. பி. எஸ். ஜெயராஜ் (9 சூன் 2002). "Life and times of Sivasithamparam". த சண்டே லீடர். Archived from the original on 2016-03-03. https://web.archive.org/web/20160303235135/http://www.thesundayleader.lk/archive/20020609/issues.htm. 
  19. Rajasingham, K. T. (26 ஆகத்து 2005). "Amirthalingham Era – A book review". ஏசியன் டிரிபியூன். Archived from the original on 2016-03-27. https://web.archive.org/web/20160327120243/http://www.asiantribune.com/news/2005/08/26/amirthalingham-era-%E2%80%93-book-review. 
  20. ம. ஆ. சுமந்திரன் (28 அக்டோபர் 2012). "13A: To be or not ...". சிலோன் டுடே. Archived from the original on 2016-03-29. https://web.archive.org/web/20160329181215/http://www.ceylontoday.lk/78-15546-news-detail-13a-to-be-or-not-.html. 
  21. Rajasingham, K. T.. "Chapter 24: Tamil militancy - a manifestation". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-05-03. https://web.archive.org/web/20090503231851/http://www.atimes.com/ind-pak/DA26Df04.html. பார்த்த நாள்: 2015-02-16. 
  22. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF. 
  23. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு. Archived from the original on 2011-06-17. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html. 
  24. "V.N. Navaratnam Dies in Toronto". Tamil Times X (3): 26. 15 February 1991. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ந._நவரத்தினம்&oldid=3570384" இருந்து மீள்விக்கப்பட்டது