உள்ளடக்கத்துக்குச் செல்

நுணாவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுணாவில்[1] யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் கல்வயலும், கிழக்கு எல்லையில் சாவகச்சேரி நகரமும், தெற்கில் மறவன்புலவும், மேற்கில் கைதடியும் உள்ளன. இவ்வூர் நுணாவில் மேற்கு, நுணாவில் மத்தி, நுணாவில் கிழக்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - கண்டி வீதி இவ்வூரின் ஊடாகச் செல்கிறது. இவ்வீதிக்கு இணையாகச் சென்ற தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரினூடாகச் சென்றது. கொல்லங்கிராய் (கொல்லா புரி) நுணாவிற் குளம், மணங்குணாய், ஆனைக்கோட்டை, தாளையடி, கல்வயல், மணற்பிட்டி எனப் பல குறிச்சிகளைக் கொண்டு நுணாவில் விளங்குகிறது.

ஆலயங்கள்

அவற்றுள் சில:[2][3]

  • நுணாவில் மேற்கு கொல்லங்கிராய் வீரகத்தி விநாயகர் ஆலயம்[4]
  • நுணாவில் மேற்கு மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலயம்[4]
  • நுணாவில் கிழக்கு கற்குழி கந்தசாமி கோயில்[5]
  • நுணாவில் மத்தி கந்தசுவாமி (வைரவர்) ஆலயம்[6][7]
  • நுணாவில் மேற்கு வீரபத்திரர் ஆலயம்
  • நுணாவில் மேற்கு காண்டைக்காடு ஞானவைரவர் தேவஸ்தானம்[8]
  • நுணாவில் மத்தி பத்திரகாளி அம்பாள் ஆலயம்
  • நுணாவில் குளம் முருகன் ஆலயம்
  • நுணாவில் குளம் கண்ணகை அம்மன் கோயில்[9]
  • நுணாவில் மேற்கு விளைவேலி மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயம்[10]

இங்கு பிறந்தவர்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Nu'naavil". TamilNet. March 18, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686. 
  2. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  3. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 613-614". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  4. 4.0 4.1 கவிஞர் வி. கந்தவனம் (1971). நுணாவிலூர். நுணாவிலூர்த் தமிழ் மன்றம், சாவகச்சேரி.
  5. உதயன் 2001.05.13 - பக். 12.
  6. உதயன் 2002.02.03 - பக். 10.
  7. உதயன் 2002.06.02 - பக். 6.
  8. வலம்புரி 2010.03.17 - பக். 4.
  9. உதயன் 2001.10.18 - பக். 10.
  10. "Accu-vēli, Kaṅku-vēli, Viḷai-vēli, Nel-vēlik-kuḷam". TamilNet. August 20, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30049. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுணாவில்&oldid=4404015" இலிருந்து மீள்விக்கப்பட்டது