உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிர் நீலப் புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிர் நீலப் புள்ளி. புவியானது ஒரு சிறு புள்ளி போல, வலது பக்க பழுப்பு கற்றையின் நடுவில் தெரிகின்றது.

வெளிர் நீலப் புள்ளி (Pale Blue Dot) எனப்படுவது, 1990ம் ஆண்டு வொயேச்சர் 1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் பிரபல ஒளிப்படம் ஆகும். இது பூமியில் இருந்து ஆறு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வைத்து, நமது சூரிய குடும்பத்தின் மொத்த கோள்களையும் படம் பிடிக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும். இதில் புவியானது எல்லையற்ற வெளியின் ஊடாக ஒரு மிகச் சிறிய புள்ளியைப்போல் (0.12 படவணு அளவில்) காணக் கிடைக்கின்றது.[1]

இந்தப் படத்தின் பெயரான வெளிர் நீலப் புள்ளி என்பதை, பிரபல வானியல் எழுத்தாளர் கார்ல் சேகன் தனது புத்தகமான "வெளிர் நீலப் புள்ளி: விண்வெளியில் மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை" என்பதன் தலைப்பாக வைத்திருக்கின்றார்[2].

பின்னணி

[தொகு]


வொயேகர் 1 என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள், 8 மாதங்கள், 23 நாட்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8x1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது[3]. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள்[4]. இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும்[5].

நாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேகர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து வொயேஜர் 1 ஏவப்பட்டது. வொயேகர் 1 தனது சூரியக் குடும்ப ஆய்வை 1980 நவம்பர் 20 முடித்துக் கொண்டது. வியாழன் கோளை 1979 இலும், சனிக் கோளை 1980 இலும் இரு ஆய்வு செய்தது. இந்த இரண்டு பெரும் கோள்களினதும், அவற்றின் நிலாக்களினதும் முதலாவதும் விரிவானதுமான படங்களை பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1981ல் வொயேகர் 1 தனது ஆய்வுகளை சனிக் கோளில் முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில், கடைசியாக ஒரு முறை புவியின் ஒளிப்படத்தை எடுக்கும் யோசனையை கார்ல் சேகன் முன்வைத்தார்[6]. இவ்வாறு எடுக்கப்படும் புவியின் படம், அளவில் மிகவும் சிறியதாகவும், அறிவியல் நோக்கில் பயனற்றதாகவும் இருக்குமெனினும்., தொலைநோக்கில் புவியுன் அமைவு பற்றிய அண்டவியல் ஆய்வில் பயன்படக்கூடும் எனவும் அவர் வாதிட்டார். இவரது கூற்றுக்கு சில நாசா விஞ்ஞானிகள் ஆதரவு அளித்த போதிலும் சூரியனின் பின்னனியில் எடுக்கப்படும் புவிவின் ஒளிப்படும் வொயேகர் விண்கலத்தின் தகவல் தொடர்பை துண்டிக்கக் கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படது. இறுதியில் நாசா தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ட்ரூலி ஒளிப்படம் எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்[7][8].வெளிர் நீலப் புள்ளி, குறுகிய கோணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஆகும். நாசாவின் கிழை மையமான தாரை உந்துகை ஆய்வகம் (Jet Propulsion Laboratory) வெளியிட்ட மற்றொரு படம், இரண்டு அகண்ற கோண ஒளிப்படங்களின் கோர்வையாக உள்ளது. இது சூரியன், வெள்ளி மற்றும் பூமியின் இருப்பை ஒரே படத்தில் காட்டுகின்றது[9].

ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறளின் தாக்கம்

[தொகு]

இந்த புகைப்படத்தில் புவியானது நீல நிற புள்ளியாக தெரிவதன் காரனம், ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறல் விளைவே ஆகும். முனைப்பாக்கத்தின் தாக்கம், புவியில் இருக்கும் மேகங்களின் பரப்பு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கடல், வனம், பாலைவனம் மற்றும் பனிப்படலம் ஆகியவற்றின் பரப்பை கொண்டு மாறுபடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andrew, Revkin (October 24, 2007). "Dot Earth: The Domain We All Share". த நியூயார்க் டைம்ஸ். http://dotearth.blogs.nytimes.com/2007/10/24/on-the-dot/?scp=3&sq=%22Pale+Blue+Dot%22&st=nyt. பார்த்த நாள்: சூலை 28, 2011. 
  2. Sagan, Carl (1994). Pale Blue Dot: A Vision of the Human Future in Space (1st ed.). New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-43841-6. வாசிப்புக்கு Library x3m.us பரணிடப்பட்டது 2018-07-29 at the வந்தவழி இயந்திரம்
  3. Voyager 1, Where are the Voyagers - NASA Voyager 1
  4. An Earthly View of Mars space.com கடைசியாக பார்க்கப்பட்டது 31.05.2013 31.05.2013
  5. Particles point way for Nasa's Voyager, பிபிசி, சூன் 15, 2012.
  6. It's our dot : For Carl Sagan, planet Earth is just a launch pad for human explorations of the outer universe[தொடர்பிழந்த இணைப்பு] pqasb.pqarchiver.com கடைசியாக பார்க்கப்பட்டது 31.05.2013
  7. Sagan, Carl (September 9, 1990). The Earth from the frontiers of the Solar system - The Pale, Blue Dot கடைசியாக பார்க்கப்பட்டது 31.05.2013
  8. Pale Blue Dot:A Vision of the Human Future in Space. பக்கம் 4-5
  9. PIA00450: Solar System Portrait - View of the Sun, Earth and Venus photojournal.jpl.nasa.gov கடைசியாக பார்க்கப்பட்டது 31.05.2013

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலதிக வாசிப்புக்கு

[தொகு]
  • Sagan, Carl; Head, Tom (2006). Conversations with Carl Sagan (1st ed.). United States of America: The University Press of Mississippi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57806-736-7.
  • Sagan, Carl; Freeman J., Dyson; Jerome, Agel (2000). Carl Sagan's Cosmic Connection: An Extraterrestrial Perspective. Cambridge University Press. pp. XV, 302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-78303-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிர்_நீலப்_புள்ளி&oldid=3403026" இலிருந்து மீள்விக்கப்பட்டது