வென்னா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வென்னா ஏரி
Venna Lake
Boats On Venna Lake.jpg
படகுகள்(boats)
அமைவிடம்மஹாபலீஸ்வர், மகாராட்டிரம்
ஆள்கூறுகள்17°56′02″N 73°39′54″E / 17.934009°N 73.665026°E / 17.934009; 73.665026ஆள்கூறுகள்: 17°56′02″N 73°39′54″E / 17.934009°N 73.665026°E / 17.934009; 73.665026
வடிநில நாடுகள் இந்தியா

வென்னா ஏரி (Venna Lake) முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழும் இந்த ஏரி, இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிர மாநிலத்தின் மஹாபலீஸ்வர் என்ற இடத்தில் உள்ளது. மேலும் இந்த ஏரியை, சாத்தாரா மன்னரான அப்பா சாகிப் (Appa Sahib (Raja Shahaji of Satara) மன்னரால் கி. பி 1842 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

மன்னர் அப்பா சாகிப்
சாத்தாரா மாவட்டம்

வென்னா ஏரியினை சுற்றிலும் மரங்கள் காணப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரிகள் செய்யலாம், அல்லது ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் குதிரை சவாரி செய்யலாம். ஏரியின் கரையில் சிறு சிறு உணவகங்கள் உள்ளன. வென்னா ஏரியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மகாபலேசுவர் நகர சந்தையும் எஸ்.டி பேருந்து நிலையும் அமையப்பெற்றுள்ளது. இங்கு வரும்பொழுது சுற்றுலா பயணிகள் கால்நடை பயணமாக சந்தை மற்றும் பேருந்து நிலையம் செல்வதையும் விரும்புகின்றனர்.[சான்று தேவை]

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாங்களின் சுற்றுலா செல்லும் இடங்களின் பட்டியலில் வென்னா ஏரியை சேர்த்துக்கொள்கின்றனர். இந்த ஏரியின் வழியாக கடந்து செல்லும் அதிகமான பேருந்துகள், மற்றும் தனியார் வாகனங்கள் பயணிகள் வேண்டுகோளாக கேட்கும் பட்சத்தில் இங்கு நிறுத்தப்படும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Venna Lake". www.mahabaleshwarinfo.com (ஆங்கிலம்) (© 2016 MahabaleshwarInfo.com). பார்த்த நாள் 2017-07-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வென்னா_ஏரி&oldid=2722113" இருந்து மீள்விக்கப்பட்டது