வெண் காது தையல்சிட்டு
வெண் காது தையல்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசிடிகோலிடே
|
பேரினம்: | ஆர்த்தோமசு
|
இனம்: | O. cinereiceps
|
இருசொற் பெயரீடு | |
Orthotomus cinereiceps சார்ப்பி, 1877 |
வெண் காது தையல்சிட்டு (White-eared tailorbird)(ஆர்த்தோடோமசு சினெரெப்சிசு ) என்பது முன்னர் "பழைய உலக சிலம்பன்" கூட்டங்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு பறவை சிற்றினமாகும். ஆனால் இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பிலிப்பீன்சு தீவுகளான பசிலன் மற்றும் மேற்கு மிண்டனாவில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]ஈபேர்டு இப்பறவையை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது. வெண்காது தையல்சிட்டு "ஒரு சிறிய, நீளமான, நீண்ட வால் கொண்ட பறவை. இது மேற்கு மிண்டானா மற்றும் பாசிலனில் உள்ள தாழ் நிலம் மற்றும் அடிவாரக் காடுகளில் அடர்ந்த அடிவளர்ச்சி பகுதிகளில் காணப்படுகிறது. இதன் முதுகு மற்றும் இறக்கைகளில் ஆலிவ்-பச்சை நிறத்திலும், ஆலிவ்-பழுப்பு நிற வாலுடனும், வெளிர் சாம்பல் வயிற்றுடன், கருப்பு நிற மார்புடன், வெள்ளை காது புள்ளியுடன் காணப்படும். பெண் பறவைக்கு வெள்ளை தொண்டை திட்டு உள்ளது. இது செம்பழுப்பு தொண்டை தையல்சிட்டு போன்றது. குரல் சலிப்பானது.[2]
துணைசிற்றினங்கள்
[தொகு]இந்த சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
- ஆர்த்தோடோமசு சினெரெப்சிசு சினெரெப்சிசு பசிலன் தீவில் காணப்படுகிறது
- ஆர்த்தோடோமசு சினெரெப்சிசு அப்சுகுரியர் சம்பொவாங்கா தீபகற்பம், கோட்டாபடோ, மிசாமிசு கீழ்திசை பகுதிகள்
வாழ்விடமும் காப்பு நிலையும்
[தொகு]வெண் காது தையல்சிட்டு முதன்மை மற்றும் இரண்டாம் நிலை காடுகளிலும், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர்கள் வரையிலான காடுகளில் காணப்படுகிறது.[3]
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வெண் காது தையல்சிட்டு பறவையின் சிதைந்த வாழ்விடங்களை பொறுத்துக்கொள்ளும் தன்மையின் காரணமாக தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Orthotomus cinereiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T22715012A94436464. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715012A94436464.en. https://www.iucnredlist.org/species/22715012/94436464. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "White-eared Tailorbird". Ebird.
- ↑ 3.0 3.1 Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife Guides International. pp. 268–269.