வெண்பிடரி புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண்பிடரி புறா
White-naped pigeon
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கொலம்பா
இனம்:
C. albinucha
இருசொற் பெயரீடு
Columba albinucha
சசீ, 1911

வெண்பிடரி புறா (White naped pigeon)(கொலம்பா அல்பினுச்சா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது ஒரு மாறுபட்ட வரம்பைக் கொண்டுள்ளது: ஒருபுறம் கமரூன் மலைகளிலும், மறுபுறம் ஆல்பர்டைன் பிளவு மலைக்காடுகளிலும் காணப்படுகிறது.

வெண்பிடரி புறாவின் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட அழிவால் அச்சுறுத்தப்படுகிறது.

நிலை[தொகு]

காங்கோ மக்களாட்சிக் குடியரசின் சில பகுதிகளில் உள்ளூரில் பொதுவானது என விவரிக்கப்பட்டாலும், வெண்பிடரி புறா பொதுவாக வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்ட ஒரு அரிதான பறவையாகும். இது எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல், இப்புற வாழும் காடுகளின் வாழ்விடத்தை அகற்றுவதாகும், இருப்பினும் இது இரண்டாம் நிலை வனப்பகுதியில் வாழக்கூடியது. காபி தோட்டங்களில் இந்த புறா வாழ்வது பதிவாகியுள்ளது. இதன் எண்ணிக்கையின் போக்கு தெரியவில்லை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதன் பாதுகாப்பு நிலையை "அச்சுறு நிலையை அண்மித்த இனமாக" மதிப்பிட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Columba albinucha". IUCN Red List of Threatened Species 2016: e.T22690164A93263106. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690164A93263106.en. https://www.iucnredlist.org/species/22690164/93263106. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பிடரி_புறா&oldid=3775969" இலிருந்து மீள்விக்கப்பட்டது