வீர் சந்திர மாணிக்கியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா பீர் சந்திர தேவ வர்ம மாணிக்கிய பகதூர்
திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1862-1896
முன்னையவர்இசான் சந்திர மாணிக்கியா
பின்வந்தவர்ராதா கிசோர் மாணிக்கியா
Consortஈசுவரி ராசேசுவரி மகாதேவி , நிங்தெம் சானு பானுமதி
மன்மோகினி தேவி
மரபுமாணிக்கிய வம்சம்
மதம்இந்து சமயம்

மகாராஜா பீர் சந்திர மாணிக்கிய பகதூர் (Bir Chandra Manikya Bahadur) 1862 முதல் 1896 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்.

வரலாறு[தொகு]

நவீன அகர்தலா நகரத்தின் கட்டிடக் கலைஞராக வீர் சந்திர மாணிக்கியா கருதப்படுகிறார். 1862 இல், இவர் அகர்தலா நகரமயமாக்கலைத் தொடங்கினார். 1871 இல் அகர்தலா நகராட்சியை நிறுவினார். 1890 இல் திரிபுராவின் முதல் மேற்கத்திய பள்ளியான உமாகந்தா அகாதமியை நிறுவினார்.

ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞரான இவர், தனது அரண்மனையில் ஆண்டுதோறும் புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தார்.[1] இவர் இறந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக, இவரது புகைப்படம் கா கர்கானா, அரண்மனையின் உள்ளே, மதோ நிவாசில் வைக்கப்பட்டுள்ளது.[2]

பிரபலங்களுடானான தொடர்பு[தொகு]

தாகூர் குடும்பம் துவாரகநாத் தாகூர் காலத்திலிருந்தே திரிபுராவின் இளவரசர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது. ஆனால் வீர் சந்திராவின் ஆட்சிக் காலத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையேயான உறவு மிக நெருக்கமாக இருந்தது. இரவீந்திரநாத் தாகூர் அரசருடன் நட்புறவு கொண்டிருந்தார். இரவீந்திரநாத் தாகூரின் மூன்று முக்கியமான படைப்புகள் - முகுதா (1885), ராஜரிஷி (சுமார். 1885 ), மற்றும் விசர்ஜனா (1890) திரிபுராவின் அரச குடும்பத்துடனான அவரது தொடர்பால் நேரடியாக ஈர்க்கப்பட்டது. சுனில் கங்கோபாத்யாயா எழுதிய பிரதோம் ஆலோ என்ற புதினத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வீர் சந்திர மாணிக்கியாவும் ஒருவர்.[3]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Old photographs - people in India". பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.
  2. "Maharaja Ram Singh II of Jaipur was a radical pioneer of photography". https://www.thehindu.com/entertainment/art/maharaja-ram-singh-ii-of-jaipur-was-a-radical-pioneer-of-photography/article29350664.ece. 
  3. https://www.indiatoday.in/magazine/society-and-the-arts/books/story/20010305-book-review-of-sunil-gangopadhyay-first-light-775635-2001-03-04

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர்_சந்திர_மாணிக்கியா&oldid=3802080" இலிருந்து மீள்விக்கப்பட்டது