உள்ளடக்கத்துக்குச் செல்

மன்மோகினி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமார் 1880இல் எடுக்கப்பட்ட மன்மோகினிதேவியின் புகைப்படம்

மகாராணி குமான் சானு மன்மோகினி தேவி (Maharani Khuman Chanu Manmohini Devi) திரிபுராவின் வீர் சந்திர மாணிக்கியாவை மூன்றாவது மகாராணி மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இவர் சமகால அரச புகைப்படக் கலைஞராக இருந்தார். மகாராஜாவுடன் சேர்ந்து தன்னை பல புகைப்படங்கள் எடுத்துள்ளார்.[1] and was considered the first Indian woman who mastered the art of photography.[2][3][4][5]

சுயசரிதை

[தொகு]
1880 இல் மகாராஜாவுடன் மன்மோகினி தேவியின் புகைப்படம், இந்தியாவில் ஒரு இணையின் முதல் சுய புகைப்படமாகும்.

இவர் மகாராஜா வீர் சந்திர மாணிக்கியாவின் முதல் மனைவி ராணி நிங்தெம் சானு பானுமதியின் மருமகள் ஆவார். தனது 13 வயதில் மகாராஜாவை மணந்தார். மத் சௌமுகானியில் உள்ள நிலத்தை மகாராஜா தன் பங்காகக் கொடுத்தார். தற்போது திரிபுராவில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு அருகில் ஒரு கோவிலையும் மண்டபத்தையும் நிறுவினார். [6]

தனது கணவரின் வழிகாட்டுதலின் கீழ் அரச புகைப்படக் கலைஞரானார். மேலும் அரண்மனையில் புகைப்படக் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்தார். அங்கு இவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தியாவின் புகைப்படச் சங்கத்தின் - மே 1890 இதழ் இவர்களின் புகைப்படங்களை "அகர்தலா அரண்மனையின் கேமரா கிளப்" என்ற தலைப்பில் வெளியிட்டது. மன்மோகினி இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞராகக் கருதப்படுகிறார்.[7]

சான்றுகள்

[தொகு]
  1. Sinha, Gayatri (7 September 2019). "Maharaja Ram Singh II of Jaipur was a radical pioneer of photography" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/art/maharaja-ram-singh-ii-of-jaipur-was-a-radical-pioneer-of-photography/article29350664.ece. 
  2. Bureau (12 April 2018). "DID YOU KNOW India's 1st female photographer was probably from Northeast India!" (in en). The Northeast Today. https://www.thenortheasttoday.com/did-you-know/did-you-know-indias-1st-female-photographer-was-probably-from-northeast-india. 
  3. "A Woman In 19th Century Bengal Paved The Way For The First Female Photographers In India" (in en). homegrown.co.in. 11 December 2019. https://homegrown.co.in/article/804002/a-woman-in-19th-century-bengal-paved-the-way-for-the-first-female-photographers-in-india. 
  4. "Did you know Kolkata produced the first professional female photographer of India?". Get Bengal. 8 December 2019. https://www.getbengal.com/details/did-you-know-kolkata-produced-the-first-professional-female-photographer-of-india. 
  5. Kumar, K. G. Pramod; G, Pramod Kumar K. Posing for Posterity: Royal Indian Portraits (in ஆங்கிலம்). Lustre Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-878-2.
  6. Bureau (2 October 2018). "History of Manipuri Queens in Tripura & their contribution towards development of state" (in en). The Northeast Today. https://www.thenortheasttoday.com/blogs/blog-history-of-manipuri-queens-in-tripura-their-contribution-towards-development-of-state. 
  7. Sengupta, Debjani (1988). "Zenana Studio: Early Women Photographers of Bengal, from Taking Pictures: The Practice of Photography by Bengalis, by Siddhartha Ghosh". The Trans-Asia Photography Review 4 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:2158-2025. https://quod.lib.umich.edu/t/tap/7977573.0004.202/--zenana-studio-early-women-photographers-of-bengal?rgn=main;view=fulltext. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகினி_தேவி&oldid=3802595" இலிருந்து மீள்விக்கப்பட்டது