வீக்சைட்டு
வீக்சைட்டு Weeksite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | K2(UO2)2Si6O15•4(H2O) |
இனங்காணல் | |
படிக இயல்பு | {010} இல் ஊசிமுதல் தட்டையான, நீளமான படிகங்களாகத் தோன்றுகிறது, இழைக் கொத்துகளாகவும் போலி நாற்கோணகப் படிகங்களாகவும் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | தனித்துவ பட்டகம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1 - 2 |
கீற்றுவண்ணம் | Yமஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 4.1 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.596 nβ = 1.603 nγ = 1.606 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
பலதிசை வண்ணப்படிகமை | X = நிறமற்றது; Y = வெளிர் மஞ்சள்-பச்சை; Z = மஞ்சள்-பச்சை |
2V கோணம் | அளக்கப்பட்டது: 60° |
பிற சிறப்பியல்புகள் | ![]() |
மேற்கோள்கள் | [1][2][3] |
வீக்சைட்டு (Weeksite) என்பது K2(UO2)2Si6O15·4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் யுரேனியம் சிலிக்கேட்டு கனிமமாகும். பொட்டாசியம் யுரேனைல் சிலிக்கேட்டு என்று அழைக்கப்படும் இதன் கடினத்தன்மை மோவின் அளவுகோலில் 1-2 என மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் கனிமவியலாளர் அலைசு மேரி தௌசு வீக்சு (1909–1988) என்பவர் நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. [2][3]
வீக்சைட்டு பார்ப்பதற்கு மற்ற யுரேனியம் தாதுக்களான கார்னோடைட்டு மற்றும் சிப்பைட் போன்றவற்றைப் போல இருக்கிறது. இவை இரண்டும் பொதுவாக மணற்கற்கள் அல்லது சுண்ணாம்புக் கற்கள் போன்ற மற்ற பாறைகளில் உருவாகும் ஆக்கிரமிப்புகளாகும்.
அமெரிக்காவின் உட்டா மாநிலம் யூவாப் மாகாணத்தின் தாமசு மலைத்தொடரில் இருக்கும் தோபாசு மலையில் வீக்சைட்டு முதன்முதலில் 1960 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
அமுதக்கல் எனப்படும் அணிகற்களின் நரம்புகளுக்குள்ளும், இரியோலைட்டு மற்றும் அக்ளோமொரேட்டுகள் எனப்படும் பாறைகளுக்குள்ளும், மணற்கல் மற்றும் சுண்ணாம்புக் கற்களில் ஆக்கிரமிப்புகளாகவும் வீக்சைட்டு காணப்படுகிறது. அமுதக்கல், சால்செதோனி, கால்சைட்டு, கிப்சம், புளோரைட்டு, யுரேனினைட்டு, தோரோ கும்மைட்டு, யுரேனோஃபேன், போல்ட்டுவூதைட்டும் கார்னோடைட்டு, மார்கரிட்டாசைட்டு ஆகிய கனிமங்கள் வீக்சைட்டுடன் சேர்ந்து காணப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Weeksite mineral information and data". Mindat.org. 2011-06-19. 2012-02-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 Webmineral data for weeksite