வி. தண்டாயுதபாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. தண்டாயுதபாணி
தனிநபர் தகவல்
பிறப்பு அழிஞ்சுக்குப்பம், வேலூர் மாவட்டம்
இறப்பு 21, நவம்பர் 1920
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கமலவேணி
பிள்ளைகள் கமலகாந்த், கிசோர், பிரமோத்பாபு
இருப்பிடம் வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வி. தண்டாயுதபாணி (V. Dhandayuthapani) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார்.

இவர் வேலூர் மாவட்டம் குடியதம் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்ற இவர் காமராசரால் ஈர்க்கபட்டு இதேகாவில் இணைந்து தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் நிறுவன காங்கிரசு கட்சியின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 1977 முதல் 1980வரை இருந்தார். பின்னர் மீண்டும் இந்திரா காங்கிரசில் இணைந்த இவர் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்தார். இதன்பிறகு 1991 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

இறப்பு[தொகு]

சென்னை ஆழ்வார் பேட்டையில் வசித்துவந்த இவர் உடல் நலக் குறைவினால் தன் 79வது வயதில் 2020 நவம்பர் 21 அன்று இறந்தார்.[2]

வகித்த பதவிகள்[தொகு]

மக்களவை உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 வேலூர் நிறுவன காங்கிரசு

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1991 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு 64.41

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தண்டாயுதபாணி&oldid=3257717" இருந்து மீள்விக்கப்பட்டது