கா. பாலதண்டாயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. பாலதண்டாயுதம் (K. Baladhandayutham)(ஏப்ரல் 2, 1918 - மே 31, 1973) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் மாக்கினம்பட்டி கிராமத்தினைச் சார்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 5வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமையகம், பாலன் இல்லம் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

1973 மே 31 அன்று 55 வயதில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 விமான விபத்தில் இவர் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2030.htm. 
  2. "CPI to inaugurate plush HQ on South Boag road today | Chennai News - Times of India". https://timesofindia.indiatimes.com/city/chennai/cpi-to-inaugurate-plush-hq-on-south-boag-road-today/articleshow/37927620.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._பாலதண்டாயுதம்&oldid=3299587" இருந்து மீள்விக்கப்பட்டது