வி. எஸ். சந்திரலேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வி. எஸ். சந்திரகலா
பிறப்பு சூலை 25, 1947 (1947-07-25) (அகவை 76)
திண்டுக்கல்
நாடு:இந்தியர்
பணி தமிழ்நாடு ஜனதா கட்சி தலைவர்

வி. எஸ். சந்திரலேகா (பிறப்பு 25 ஜூலை 1947), இந்திய ஆட்சிப் பணியாளரும் அரசியல்வாதியும் ஆவார். அவர் ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவின் தலைவராக இருந்தார். இது 11 ஆகஸ்ட் 2013 அன்று பாரதிய ஜனதா கட்சியோடு இணைக்கப்பட்டது. இவரை எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் மாநில முதலாவது பெண் கலெக்டராக நியமித்தார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

சந்திரலேகா 25 ஜூலை 1947ல் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் திண்டுக்கல்லில் பிறந்தவர். இந்திய நிர்வாக சேவை சேர்வதற்கு (ஐ.ஏ.எஸ்) முன், கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருந்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

அரசு ஊழியர்[தொகு]

  1. சந்திரலேகா 1971 இல் இந்திய நிர்வாக சேவையில் (ஐ.ஏ.எஸ்) சேர்ந்தார். 1975 1973 முதல் செங்கல்பட்டு மற்றும் சேரன்மகாதேவி துணை-கலெக்டராக பணியாற்றினார்.
  2. பொது மேலாளர் மற்றும் துணை செயலாளராக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 1976 முதல் 1980 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
  3. 1980 முதல் 1985 வரையில், அவர் மாவட்ட ஆட்சியராக முதலில் தென் ஆற்காடு பின்னர் மதுரையில் பணியாற்றினார்.
  4. 1988 வரை ஊரக மேம்பாட்டு இயக்குநராகவும், 1985 முதல் தமிழ்நாடு  பெண்கள் மேம்பாட்டுக் கழகம் தலைவராகவும், 1988 முதல் 1990 வரை தமிழ்நாடு
  5. தொழில் வளர்ச்சிக் கழகம் தலைவராகவும், 1991 முதல் 1992 வரை தமிழ்நாடு  நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றினார்.

அவர் 1992ல் இந்திய நிர்வாக சேவையிலிருந்து ராஜினாமா செய்தார்.

அரசியல்வாதி[தொகு]

சந்திரலேகா 1992 இல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் 1992 முதல் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1996 இல் இவர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு. க. ஸ்டாலின் (திராவிட முன்னேற்றக் கழகம்) அவர்களுக்கு எதிராக நின்று தோல்வியுற்றார். இவர் மயிலாப்பூர் தொகுதியில் 2006 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கலந்து கொண்டு 2,897 வாக்குகள் மட்டுமே பெற்றார்.[2]

இவர் தான் ஜெயலலிதாவிற்க்கு சசிகலாவை அறிமுகப்படுத்தினார். [3]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._சந்திரலேகா&oldid=3765981" இருந்து மீள்விக்கப்பட்டது