விவிமேரி வாண்டர்பூர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவிமேரி வான்டர்பூர்டன்
Vivimarie VanderPoorten
பிறப்புகண்டி, இலங்கை
தொழில்கவிஞர், ஆங்கிலப் பேராசிரியர்
காலம்2007 முதல்
வகைகவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்எதுவும் உங்களைத் தயாரிக்கவில்லை, உங்கள் கண் இமைகளை மூடுங்கள், "கடன் வாங்கிய தூசி"
இணையதளம்
vivimariev.blogspot.com

விவிமேரி வாண்டர்பூர்டன் (Vivimarie VanderPoorten) இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராவார். எதுவும் உங்களைத் தயார்படுத்துவதில்லை என்ற இவருடைய புத்தகம் 2007 ஆம் ஆண்டுக்கான கிரேசியன் பரிசை வென்றது. [1] புது தில்லியில் 2009 ஆம் ஆண்டு சார்க் கவிதை விருதும் விவிமேரிக்கு வழங்கப்பட்டது. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இலங்கையில் பெல்சியம் மற்றும் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் கண்டியில் இவர் பிறந்தார். வாண்டர்பூர்டன் குருநாகலில் வளர்ந்தார். கெளனியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் இங்கிலாந்தின் உல்சுடர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் படித்தார். இப்பல்கலைக்கழகத்திலேயே இவர் முனைவர் பட்டமும் பெற்றார். தற்போது இலங்கை திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி, இலக்கியம் மற்றும் மொழியியலில் மூத்த விரிவுரையாளராக பணியில் உள்ளார். [3]

தாக்கங்கள்[தொகு]

கமலா தாசு, மார்கரேட் அட்வுட், மாயா ஏஞ்சலோ, அன்னெ செக்சுடன், செரான் ஓல்டுசு போன்ற படைப்பாளிகள் விவிமேரியியின் எழுத்துகளை பாதிக்கும் படைப்பாளிகளாவர். மோசின் அமீத்து, காலீத் உசைனி, சிமாமந்தா நிகோசி அடிச்சி, சேனட்டு விண்டர்சன் இவருடைய சமகால எழுத்தாளர்களாவர்.[4]

படைப்புகள்[தொகு]

வாண்டர்பூர்டனின் முதல் புத்தகம், எதுவும் உங்களைத் தயார்படுத்தவில்லை என்ற , புத்தகமாகும். 2007 ஆம் ஆண்டு சீயசு வெளியீட்டாளர்களால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. [5] உங்கள் கண் இமைகளை மூடுங்கள் என்பது இவரது இரண்டாவது புத்தகமாகும். இதுவும் ஒரு கவிதைத் தொகுப்பாகும். 2010 ஆம் ஆண்டு இது வெளியிடப்பட்டது. பெண்ணியம் மற்றும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் பின்விளைவுகளை உள்ளடக்கி இப்புத்தகம் பேசுகிறது. [5] மூன்றாவது கவிதைத் தொகுப்பான கடன் வாங்கிய தூசி 2017 ஆம் ஆண்டில் வெளியானது. சரசவி நிறுவனம் கொழும்பு நகரில் இதை வெளியிட்டது. 2011 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் விவிமேரி தோன்றினார் அங்கு இவர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான தனது எதிர்வினை பற்றிய கவிதைகளைப் படித்தார். [6]

வரவேற்பு[தொகு]

முக்கியமான வரவேற்பு[தொகு]

இவரது கவிதைகள் டாக்டர் சிங்கராச தம்மிட்டா-தெல்கோடா படைப்புகளின் ஆன்மாவைத் தொடும் மென்மையான பிரதிபலிப்பு என விமர்சிக்கப்பட்டது. விவிமேரிக்கு கிரேட்டியன் பரிசு வழங்கப்பட்ட பொது நீதிபதிகளில் ஒருவராக சிங்கராசாவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும். [3] முதல் புத்தகமான "எதுவும் உங்களைத் தயார்பட்டுத்தவில்லை ஒரு குறிப்பிடத்தக்க முதல் புத்தகமாகும். ஆங்கிலத்தில் இலங்கையின் படைப்பூக்க எழுத்தின் மேடையில் மிகவும் திறமையான கவிஞரின் நுழைவை இப்புத்தகம் அறிவிக்கிறது என்று நிலோபௌர் டி மெல் கூறினார். வாண்டர்பூர்டின் கவிதைகள் தனிநபர் முதல் அரசியல் வரை ஈர்க்கக்கூடிய செய்திகளைக் கொண்டுள்ளன. மேலும் பாலினம், இனம் மற்றும் வர்க்கப் பிரச்சினைகளை முக்கியமாக பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் காதல், இழப்பு, வன்முறை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் தெளிவான சூழல்களை வாசகர்களுக்கு வழங்குகின்றன. பொதுவாக இவரது படைப்புகள் வாசகர்களிடம் நேர்மறையான நல்ல விமர்சனங்களையே பெற்றன. கவிஞர் வாசகர் சந்திப்பு நடந்ததைப் போன்ற தெளிவை இவரது கவிதைகள் வழங்குகின்றன.[1]

விருதுகள்[தொகு]

புத்தகமான எதுவும் உங்களைத் தயார்படுத்தவில்லை நூல் 2007 ஆம் ஆண்டுக்கான கிரேடியன் பரிசை [1] வென்றது. 2009 சார்க் கவிதை விருதும் இந்நூலுக்கு வழங்கப்பட்டது. [2] அக்டோபர் 2011 இல் ஆங்கிலக் கவிதைகளுக்கான மாநில இலக்கிய விருதை விவிமேரி வென்றார். மற்றொரு இலங்கைக் கவிஞர் ரம்யா சாமலி சிராசிங்காவுடன் இவர் இவ்விருதைப் பகிர்ந்துகொண்டார். [7] மூன்றாவது கவிதைத் தொகுப்பு, கடன் வாங்கிய தூசி கையெழுத்துப் பிரதி வடிவத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான கிரேடியன் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரது கவிதை பல பல்கலைக்கழக படிப்புகளில் கற்பிக்கப்படுகிறது மற்றும் இவரது முதல் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை தற்போது இலங்கையின் ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ளது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இவரது படைப்புகள் சிங்களம், எசுப்பானியம், நேபாளம் மற்றும் சுவீடியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்தியா, வங்காளதேசம், மெக்சிகோ, சுவீடன் மற்றும் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளன, அத்துடன் சுகர் மியூல் மற்றும் கட்டற்ற அணுகல் இதழ் ' பிந்தைய காலனித்துவ உரை ' போன்ற இணைய இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 The Gratiaen Trust "2007 Winner" பரணிடப்பட்டது 2018-08-11 at the வந்தவழி இயந்திரம், accessed January 27, 2011.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.
  3. 3.0 3.1 The Sunday Times "What you see is what you get with Vivimarie", accessed January 27, 2011.
  4. The Nation "Vivimarie Vanderpoorten - Ode to a free spirit" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், accessed January 29, 2011.
  5. 5.0 5.1 The Sunday Times "Vivimarie’s power of making the word her own", accessed January 28, 2011.
  6. BBC News "Sri Lanka literary festival discusses journalist's plight", accessed January 31, 2011.
  7. Sunday Leader "Poetry Corner Vivimarie Vander Poorten" பரணிடப்பட்டது 2019-08-17 at the வந்தவழி இயந்திரம், accessed September 3, 2016.