வில்ம்சு புற்றுநோய்
வில்ம்சு புற்றுநோய் Wilms' tumor | |
---|---|
ஒத்தசொற்கள் | Wilms's tumor |
ஒரு நெஃப்ரோபிளாஸ்டோமா மாதிரியின் இரண்டு பகுதிகளைக் காட்டும் படம். | |
பலுக்கல் | |
சிறப்பு | புற்றுநோயியல், சிறுநீரியல், சிறுநீரகவியல் |
வில்ம்சு புற்றுநோய் (Wiilms' tumor அல்லது nephroblastoma) என்பது குறிப்பாக சிறுவர்களிடம் காணப்படும் சிறுநீர் சுரப்பிப் புற்றுநோயாகும். சிறுவர்களிடம் தோன்றும் புற்றுநோயில் இது 6% ஆக உள்ளது. வயது வந்தவர்களிடம் இது மிக அரிதாகவே தோன்றும்.[1] இப்புற்றுநோயை முதன்முதலாக விளக்கிய செருமனியரான மாக்சு வில்ம்சு (1867–1918) என்ற செருமனிய மருத்துவரின் பெயரால் இது வில்ம்சு புற்றுநோய் என அழைக்கப்படுகிறது.[2]
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சராசரியாக 640 பேர் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[3] தொடர்புடைய மரபணு நோய்க்குறி இல்லாத குழந்தைகளில் பெரும்பாலும் இந்நோய் ஏற்படுகின்றது. இருப்பினும், வில்ம்சின் கட்டி உள்ள குழந்தைகள் பலர் மரபுவழி ஊனங்களைக் கொண்டுள்ளனர்.[3] இது சிகிச்சைக்கு மிகவும் பதிலளிக்கக்கூடியது, 10 இல் 9 குழந்தைகள் குணப்படுத்தப்படுகிறார்கள்.[3] பொதுவாக ஒரு சுரப்பியில் இக்கட்டி காணப்படும். அரிதாக 5% முதல் 10% வரை இரு சுரப்பியிலும் தோன்றுகிறது. குழந்தை பிறந்த பின் உயிரணுக்களில் தோன்றும் சடுதி மாற்றத்தினால் இந்நோய் தோன்றுவதாகத் தெரிகிறது.
அறிகுறிகள்
[தொகு]வில்ம்சின் கட்டியின் பொதுவான அறிகுறிகள் பின்வருவனவாக இருக்கலாம்:
- வயிற்றுப் பகுதியில் வீக்கம்
- காய்ச்சல், வயிற்றுவலி
- மலச்சிக்கல்
- உயர் இரத்த அழுத்தம்
- வயிற்றுப் பகுதி இரத்தக் குயாய்கள் புடைத்துக் கொண்டிருத்தல்
- சிறுநீரில் குருதி கலந்து வெளிப்படுதல்
- தளர்ச்சியும் பசி இன்மையும்
- நிறை குறைதல்
- அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்றுநோய் தோன்றுவது,[4]
ஆகியனவாகும்.
மீயொலி, கணினி தளக் கதிர்படம், எம்.ஆர் ஐ.ஆய்வுகள் நோய்காண உதவும்.திசு பரிசோதனை மிகவும் அவசியம்
மருத்துவம்
[தொகு]பாதிப்புக்குள்ளான சுரப்பியும் அதன் அருகிலுள்ள ஊநீர் சுரப்பிகளும் அகற்றப்படுகின்றன. இதனைத் தொடந்து வேதி மருந்துகளும் கதிர் மருத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் கண்டுகொள்வதும் தீவிர சிகிச்சையும் நல்ல பலனைக் கொடுக்கின்றன. தொடர்ந்து நோயாளி கவனிக்கப்பட வேண்டும். பொதுவாக நல்ல பலன் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ EBSCO database verified by URAC; accessed from Mount Sinai Hospital, New York
- ↑ WhoNamedIt.com: Max Wilms
- ↑ 3.0 3.1 3.2 "Wilms Tumor and Other Childhood Kidney Tumors Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-12.
- ↑ Erginel B, Vural S, Akın M, Karadağ CA, Sever N, Yıldız A. et al (2014) Wilms' tumor: a 24-year retrospective study from a single center. Pediatr Hematol Oncol 31: 409–414
வெளி இணைப்புகள்
[தொகு]- வில்ம்சு புற்றுநோய் குர்லியில்
- GeneReviews/NCBI/NIH/UW entry on Wilms' Tumor Overview
- Information from National Cancer Institute
- Cancer.Net Wilms' Tumor – Childhood
வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |