விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியர்களின் மலரும் நினைவுகள்
இக்கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு உதவ இயலாமல் இருக்கலாம். ஆனால் பயனர்களை ஊக்கம் செய்யும் என்று நம்புகிறேன். அதற்கு இங்கு தங்களுடைய அனுபவங்களை ஞாபகம் செய்திருக்கும் பதிவர்களே சாட்சி. அப்படியிருக்கும் பொழுது நீக்குதல் அவசியமற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:12, 24 சூலை 2013 (UTC)
இதை ஏன் நீக்க வேண்டும் என்பதற்குரிய காரணத்தை பேச்சு:விக்கிப்பீடியர்களின் மலரும் நினைவுகள் என்ற பக்கத்தில் வழங்கியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 15:20, 24 சூலை 2013 (UTC)
- இந்தப் பக்கத்தில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; எவரும் கட்டுரையில் தமது சொந்த அனுபவங்களை பதிக்கவில்லையே! எனது நினைவினை இங்கிருந்து நீக்கி விடுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:40, 24 சூலை 2013 (UTC)
கட்டுரையில் அல்ல. கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில். தவறுதலாகக் கட்டுரையில் என்று கூறிவிட்டேன். எப்படியாயினும் எனக்கொரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா என்பதுதான் என் கேள்வி.--பாஹிம் (பேச்சு) 15:46, 24 சூலை 2013 (UTC)
- பாகிம், தாய்லாந்து கட்டுரையில் நீக்கப்பட்ட குறிப்பினைப் பார்த்தேன். அதை யார் சொல்லியிருந்தாலும் நீக்கல் கோரிக்கை வந்திருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே, இதனை உங்களுக்கு எதிரான தனிப்பட்ட நிலைப்பாடாக கருத வேண்டாம். இப்பக்கத்தில் உள்ளவை நேர்மறையான யாரையும் புண்படுத்தாத நினைவுகள். ஒரு வகையில் தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் இளைப்பாறும் வேளைகளில் ஒன்று. தமிழ் விக்கிப்பீடியாவின் எத்தனையோ கட்டுரைகள் உங்களுக்கும் அத்தகைய நினைவுகளைத் தந்தால் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறேன். மற்றபடி, இந்த மலரும் நினைவுகள் போக்கு விக்கிப்பீடியா பேச்சுப் பக்கங்கள் உரையாடல் மன்றங்கள் போல் ஆகாமல் இருந்தால் சரி :)--இரவி (பேச்சு) 15:51, 24 சூலை 2013 (UTC)
அங்கே நான் இட்டது தாய்லாந்துக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு தொடர்பானது. அங்கே கோயில் கட்டுவதற்காகத் தமிழ் நாட்டிலிருந்துதான் அவர்கள் வழிகாட்டுதல் பெறுகிறார்கள் என்பது என் அனுபவம். இது எவரையும் நோவிப்பதாகுமா? ஆனால் அங்கே நிகழ்ந்தது எனக்கெதிரான போக்கேயன்றி வேறில்லை. ஏனெனில், நான் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் குற்றங் கண்டு பிடிக்கவென்றே காத்திருக்கும் அருண் அதனைக் கடுமையாக எதிர்க்கவே கனகு அதை ஏற்றுக் கொண்டார். அவ்வளவே. மாறாக, கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் சொந்த அனுபவங்களைப் பகிர்வது தகுமாயின் அவை எத்தகையவையென்றும் தகாதாயின் அவை எத்தகையவையென்றும் கூறுவது நலம்.--பாஹிம் (பேச்சு) 16:02, 24 சூலை 2013 (UTC)
- இது கட்டுரை வெளியிலோ அல்லது கட்டுரை பேச்சு பக்கத்திலோ இல்லை. விக்கிப்பீடியா பெயர்வெளியிலேயே உள்ளது (இப்பக்கத்தில் சுட்டப்பட்டுள்ள உள்ளடக்கமும் பல இடங்களில் உரையாடலுக்கு நடுவே வந்துள்ளது, இரவி கூறியது போல இது உரையாடலில் உள்ள இறுக்கத்தை குறைக்க உதவும். ஆனால் நினைவுகளுக்கு மட்டும் தனியாக கட்டுரை பேச்சுப் பக்கத்தை பயன்படுத்துவது சரியானதாக தோன்றவில்லை ). விக்கிப்பீடியா பெயர்வெளியில் பல நகைச்சுவைப் பக்கங்களும், சில பயனர்களின் கருத்துகளை மட்டும் கொண்ட பக்கங்களும் அனைத்து விக்கிகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பக்கத்தில் ஒரு அறிவிப்பை மட்டும் இட்டுவிட்டு (வார்ப்புரு:நகைச்சுவையுள்ளடக்கம் போல), வைத்திருப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். தாய்லாந்து கட்டுரை பேச்சுப் பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது என்னுடைய பார்வையில் தனிப்பட்ட அனுபவமாகவே தெரிகிறது.மேலும் அதனை நீக்கியவர் கனகு அல்ல மாகிர்--சண்முகம்ப7 (பேச்சு) 16:34, 24 சூலை 2013 (UTC)
கனகு மன்னிக்க வேண்டும். நீக்கியவர் மாகிர் என்பது தெரியாமல் உங்களது பெயரைக் கூறி விட்டேன். மேலும், தெளிவு படுத்தியமைக்கு நன்றி, சண்முகம். எப்படியாயினும், சில வேளைகளில் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வது தவிர்க்க முடியாததே. கட்டுரைகளுடன் அல்லது அவற்றிலடங்கியுள்ள செய்திகளுடன் எத்தொடர்பும் இல்லாமல் எவரும் எவ்வனுபவத்தையும் பகிர்வதில்லையென்றே நினைக்கிறேன். நான் இவ்விடயத்தை இங்கே குறிப்பிட்டது ஏனெனில் தேவையில்லாமல் ஒருவருடைய பங்களிப்பை நீக்கியமை தவறென்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே தவிர வேறெதற்குமன்று. இதன் கட்டுரைப் பக்கத்தில் இட்ட நீக்கல் வேண்டுகோளை நான் நீக்கி விடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:53, 24 சூலை 2013 (UTC)
- இங்கு கருத்து தெரிவித்த சகோதரன் ஜெகதீஸ்வரன், பாஹிம், செல்வ சிவகுருநாதன், இரவி மற்றும் சண்முகம் ஆகியோருக்கு நன்றி. இப்பக்கம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பாஹிமே அந்த வேண்டுகோளை நீக்கியது குறித்து மகிழ்ச்சி. சண்முகம் குறிப்பிட்டது போல் ஒரு வார்ப்புரு உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டு விட்டது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:33, 24 சூலை 2013 (UTC)
- நல்லதொரு முடிவு :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:14, 25 சூலை 2013 (UTC)