விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/அறிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா பற்றிய சுருக்கமான அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம், வளர்ச்சி, தற்போதைய நிலை, பத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தொட்டுச் செல்லும் விதமாக ஒரு அறிக்கை தேவைப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இரண்டு A4 தாள்கள் அளவுக்கு வர வேண்டும். உதவி தேவை ! --இரவி (பேச்சு) 20:40, 11 செப்டம்பர் 2013 (UTC)

பயனர்:Kalaiarasy/தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது - மிகச்சிறப்பான இக்கட்டுரையை பயன்படுத்திக் கொள்ளலாம்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:49, 19 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி செகதீசுவரன். கலை நன்றாக தொகுத்தளித்துள்ளார், பயன்படுத்திக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:16, 20 செப்டம்பர் 2013 (UTC)

ஐயம்[தொகு]

இரவி, தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து இரண்டு பக்கம் வர வேண்டுமா அல்லது ஒவ்வொன்றிலுமா? நிறைவு விழாக் கொண்டாட்ட அரங்கைக் குறிப்பிட்டு பொதுவாக அழைக்க வேண்டுமா? (அவ்வாறு அழைத்தால் பெருந்திரளாக மக்கள் வந்துவிட்டால் இடமிருக்குமா?) தற்போதைய அறிக்கையைப் படித்து இன்னும் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் எனக் கூறுங்கள். இறுதியானதும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துவிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:34, 20 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ், ஆங்கிலம் இரண்டும் தனித்தனியாக இரு A4 பக்க அளவு வர வேண்டும். நிகழ்ச்சிக்கு நிறைய மக்கள் வந்தால் என்ன செய்வது என்பது விரும்பி ஏற்கக் கூடிய ஒரு பிரச்சினை :) அண்ணா பல்கலை, கிண்டி வளாகம், TAG அரங்கம், காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை என்பதைக் குறிப்பிடலாம். ஊடகச் சந்திப்புக்கு வரும் அனைத்து நிறுவனங்களும் செய்தி வெளியிடும் என்றில்லை. வெளியிடுவதும் எவ்வளவு முக்கியத்துவமாகச் செய்வார்கள் என்று தெரியவில்லை. எனவே, இயன்றவரை பரப்புரை செய்வோம்.
300 பங்களிப்பாளர்கள் என்று குறிப்பிடுவது குழப்பலாம். உண்மையில், சூன் 2013 வரை 935 பேர் மொத்தமாகப் பங்களித்துள்ளார்கள் (குறைந்தது 10 பங்களிப்புகளைச் செய்தவர்கள்). நம்மை விட மக்கள் தொகையில் குறைவான மொழிகள் இன்னும் வளமான விக்கிப்பீடியாவைக் கொண்டுள்ளன என்பதைச் சுருக்கமாக மட்டும் சொன்னால் போதுமானது. அதற்கு மேல் தரவுகள் தேவையில்லை. பெருமளவு தமிழ் விக்கிப்பீடியாவின் நேர்மறையான விசயங்களை மட்டும் சுட்டுவது நன்று. விக்சனரி, விக்கிமூலம் போன்ற துணைத்திட்டங்களில் வளர்ச்சி பற்றியும் ஓரிரு வரிகள் குறிப்பிடலாம். கட்டுரை ஆக்குநர்கள் தவிர நமக்கு வரைகலையாளர்கள், நிரலாளர்கள், ஒளிப்படக்காரர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று பல்வேறு பின்னணி உள்ளவர்களின் பங்களிப்புகள் தேவை என்பதைச் சுட்டலாம். பத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக இந்திய உரூபாய் 30,000/- மதிப்புள்ள கட்டுரைப் போட்டி நடத்துவதைச் சொல்லலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதைக் கோட்டிட்டுக் காட்டி அறிக்கையை முடிக்கலாம். பள்ளிகளில் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, பொது உரிமத்தில் அரசு ஆவணங்கள் -பல்கலைக்கழக ஆக்கங்கள் வெளியிடல் முதலிய நமது தேவைகளை வலியுறுத்தலாம். --இரவி (பேச்சு) 18:23, 20 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி இரவி. மாற்றிவிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 02:35, 21 செப்டம்பர் 2013 (UTC)

உதவி[தொகு]

புள்ளிவிபரக் கட்டுரை எழுதும் பணியும் காலம் தாழ்ந்துவிட்டதால் இரவி மேலே குறிப்பிட்ட மாற்றங்களை வேறு யாராவது செய்யவியலுமா பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 10:07, 22 செப்டம்பர் 2013 (UTC)

இது நாளை இரவுக்குள் தேவை. இப்பொழுது முதல் நாளை முழுதும் விழா ஏற்பாட்டுக்கான பயணத்தில் இருப்பதால் யாராவது உதவினால் நலம். சுந்தர், இயன்றால் நீங்கள் எழுதிய வரைக்கும் ஆங்கிலப்பதிப்பைத் தர முடியுமா? தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு சிலரே நேர்த்தியான ஆங்கிலத்தில் எழுதவல்லவர்கள் என்பதால் இதனை மட்டும் செய்து தர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:45, 22 செப்டம்பர் 2013 (UTC)
செய்துவிடுகிறேன் இரவி. இன்று இரவுக்குள் என்றால் முடித்துவிட முடியும். -- சுந்தர் \பேச்சு 06:43, 23 செப்டம்பர் 2013 (UTC)
தமிழில் எழுதியாயிற்று. விரைவில் மொழிபெயர்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:31, 23 செப்டம்பர் 2013 (UTC)
ஏ சூ மந்திர காளி.. சுந்தரை எழுத விடாமல் பிடித்திருக்கும் பேயை அடிச்சு ஓட்டு :) --இரவி (பேச்சு) 14:47, 23 செப்டம்பர் 2013 (UTC)
:) ஆச்சு இரவி. போய் ஓடிடுச்சு போல. :) -- சுந்தர் \பேச்சு 14:51, 23 செப்டம்பர் 2013 (UTC)
உங்கள் உரைதிருத்தம் நன்றாகவுள்ளது இரவி. -- சுந்தர் \பேச்சு 08:52, 24 செப்டம்பர் 2013 (UTC)