விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குறுக்கு வழி:
WP:10pr

ஊடகச் சந்திப்பு / Press Meet

இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கத்துக்கு அருகில்.

நாள் மற்றும் நேரம்: செப்டம்பர் 25, 2013 மாலை 04.00 மணி.

Venue: Chennai Press Club, near Chepauk cricket stadium.

Time: September, 25th of 2013. 04.00 PM

ஊடகங்களுக்கான அறிக்கை

தமிழில்

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுவிழாஅறிக்கை

25 செப்டம்பர் 2013, சென்னை -- விக்கிப்பீடியா என்பது மனித அறிவு முழுமையையும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகக் குவிக்கும் நோக்கத்தோடு உலகளாவிய இணைய வலையில் இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற கூட்டு முயற்சித் தன்னார்வத் திட்டம் ஆகும். அதன் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. இதனை உங்கள் கணினிகள், செல்பேசிகளில் இருந்து http://ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 29, 2013 ஞாயிறு அன்று சென்னையில் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

இன்று 935 பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட 55,745 கட்டுரைகள் உள்ளன. ஒப்பீட்டளவில் தமிழ் இணைய உலகில் மிகப்பெரிய கூட்டாக்கத் திட்டமாகவும் பல தர அளவீடுகளில் இந்திய விக்கிப்பீடியாக்களில் முதல் இரண்டு இடங்களிலும் வந்து ஒரு முன்மாதிரித் திட்டமாக திகழ்கிறது.

பல நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள். நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படுகிறது. பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவை மேற்கோளாகச் சுட்டுகின்றனர். சில பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் உலவி தாங்கள் கற்கும் அறிவியல், வரலாறு, புவியியல், கணக்கு, தமிழ் பாடங்கள் சார்ந்து இன்னும் கூடுதல் தகவல்களைப் பெறவும் தங்கள் பொது அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும் மாணவர்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டமாக பன்மொழி அகரமுதலியை உருவாக்கும் விக்சனரி திட்டத்தில் 2,83,000 சொற்களைச் சேர்த்துள்ள தமிழ் இந்திய விக்சனரிகளில் முதன்மையானதாகவும் உலகளவில் 16ஆவது இடத்திலும் உள்ளது. விக்கிசெய்திகளும் விக்கிமூலமும் தமிழில் வளர்ந்து வரும் பிற உறவுத்திட்டங்கள் ஆகும்.

இத்தகைய வளர்ச்சியும் தாக்கமும் பெற்றிருந்தாலும் குறைவான மக்கள்தொகை கொண்ட வேறு சில மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இன்னும் சில ஆயிரம் பங்களிப்பாளர்களாவது தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தால் ஆங்கில விக்கிப்பீடியாவைப் போல் பெரும் பயன் விளைவிக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியாவைச் செறிவாக்குவதற்கு, கட்டுரை ஆக்குநர்கள் தவிர வரைகலையாளர்கள், நிரலாளர்கள், ஒளிப்படக்காரர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று பல்வேறு பின்னணி உள்ளவர்களின் பங்களிப்புகள் தேவை. பள்ளிகளில் கணினி வழி தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, அரசு ஆவணங்களையும் பல்கலைக்கழகங்களின் ஆக்கங்களையும் பொது உரிமத்தில் எளிதில் பயன்படுத்தும் வடிவில் வெளியிடுதல், பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தைத் தருவது முதலியவற்றைச் செயற்படுத்தினால் தமிழ் விக்கித்திட்டங்களுக்குப் பெரிய உந்துதல் கிடைக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இந்திய உரூபாய் 30,000/- பரிசுத்தொகையுடன் கூடிய கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. பத்தாண்டு நிறைவுவிழா செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், டாக் (TAG) அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அன்று விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது பற்றிய இலவசப் பயிற்சிகளும் தமிழ் விக்கித்திட்டங்களின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடல்களும் நிகழும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தமிழ் விக்கிச் சமூகம் இவ்விழாவிற்கு வரவேற்கிறது. அறிவை முதன்மையாகக் கொண்டு இயங்கும் உலகில், தமிழர்களின் அறிவுத் தேடலுக்கு அடிப்படையாக அமையக்கூடிய தமிழ் விக்கிப்பீடியாவை நன்கு வளர்த்தெடுப்பது இன்றியமையாதது.

In English

Tamil Wikipedia 10 years celebrations

25 September 2013, Chennai -- Wikipedia is a global non-profit movement to collaboratively build a free encyclopaedia containing the sum of human knowledge. Tamil Wikipedia was started in 2003. It can be accessed in your computers and cell phones at http://ta.wikipedia.org . Contributors from all over the world are meeting in Chennai on September 29th, 2013 to celebrate the 10 years of Tamil Wikipedia.

Till date, Tamil Wikipedia has 935 contributors collectively adding 55,745 articles containing over 2 crore words. Tamil Wikipedia is the biggest online collaboration project in Tamil and ranks first or second among Indian language Wikipedias in terms of several quality metrics.

Contributors from diverse professions aged between 11 and 77 contribute daily to Tamil Wikipedia from across the world. There are about 1,75,000 page views to the website daily. A number of websites and mass media cite the information from Tamil Wikipedia. Some schools have dedicated periods for students to browse Tamil Wikipedia and improve their knowledge in science, history, geography, tamil and mathematics. Among Wikipedia's sister projects, Tamil Wiktionary is the biggest in India with 2,83,000 words and ranks 16th among global wiktionaries. Tamil Wikinews and Wikisource are other actively growing projects.

Despite having made such an impact, Tamil Wikipedia has much of its potential untapped. Some Wikipedias in languages with speakers fewer than Tamil population have more contributors. Tamil Wikipedia can be as useful as the English Wikipedia if at least a few thousand contributors sign up. Apart from writing articles, contributions are required in creating illustrations, developing software tools, capturing photographs and translating articles. Teaching computer based Tamil typing in schools, releasing government documents and other publications from universities in public domain for unrestricted use, introducing Tamil Wikipedia in school syllabus are some measures that can add fuel to Tamil Wikimedia movement.

As part of the celebrations for the 10th anniversary of Tamil Wikipedia, an essay contest with prizes worth 30,000 Indian Rupee has been launched. The anniversary celebrations are happening on September 29 (Sunday) from 9:00 am to 5:30 pm at the TAG Auditorium, College of Engineering, Guindy, Anna University. There will be free workshops on contributing to Wikipedia and discussions about the growth of Tamil Wiki projects. It is also an occasion to meet a cross-section of Tamil Wikipedia contributors from across the world. Everyone interested in the future of Tamil online is welcome to the event. Given that modern era is a knowledge era, developing Tamil Wikipedia is among the foremost needs for the future of Tamil society.

ஊடகங்களுக்கான கோப்புகள் / Media files

தொடர்புக்கு / Contact

  • இரவி / Ravi - (0) 99431 68304