விக்கிப்பீடியா பேச்சு:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதத்திற்கான பரிந்துரைகள்[தொகு]

  1. செப்டம்பரில் மாரத்தான் நிகழ்வு இருப்பதால், இவ்வாண்டு நவம்பர் மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்கலாம். திட்டமிடலுக்கு போதிய காலமும் கிடைக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 3 செப்டம்பர் 2022 (UTC)
  2. வணக்கம், மாரத்தான் 1 நாள் நிகழ்வு ஆதலால் அக்டோபர் மாதம் கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைக்கான செம்மைப்படுத்துதல் மாதமாக அறிவிக்கலாம் என்பது என் கருத்து. மற்றவர்களின் கருத்திற்கேற்ப செயல்படலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 09:40, 3 செப்டம்பர் 2022 (UTC)
  3. செய்யலாம். அரசு விடுமுறைகள் அதிகமாக உள்ள மாதத்தைத் தேர்ந்தெடுத்தால் பணியில் உள்ளோருக்கு ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கும். அக்டோபர் சரியான தெரிவு தான்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:11, 3 செப்டம்பர் 2022 (UTC)

இறுதி முடிவு[தொகு]

கருத்து தெரிவித்த மூவரில் இருவர், அக்டோபர் மாதத்தை பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில், அக்டோபர் 2022 மாதத்தை 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் மாதமாக' அறிவிக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:36, 22 செப்டம்பர் 2022 (UTC)

எதிர்பார்ப்பு[தொகு]

10 பயனர்கள் தினந்தோறும் ஒரு கட்டுரையை செம்மைப்படுத்தினால், 30 நாட்களில் 300 கட்டுரைகளை செம்மைப்படுத்த இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 22 செப்டம்பர் 2022 (UTC)

வணக்கம்,
செம்மைப்படுத்துதல் பணிக்காக இந்த அக்டோபர் மாதம் கூகுள் கட்டுரைகளை செம்மைப்படுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்தப் பணியானது அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 15,2022 வரை 17 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அருளரசன் 7 கட்டுரைகளை செம்மைப்படுத்தியுள்ளார். தாங்களும் இதில் இணைந்து கட்டுரைகளை செம்மைப்படுத்த உதவுங்கள். மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்.
- ஒருங்கிணைப்புக் குழு
இந்தத் தகவலை மற்ற பயனர்களுக்கு அனுப்பி வைத்து உதவவும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 13:02, 15 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

@Sridhar G: மன்னிக்கவும். உங்களின் செய்தி வந்த நேரத்தில் பணியில் மும்முரமாக இருந்தேன். சற்று நேரம் கிடைத்தபோது, காலம் கடந்துவிட்டதால், இந்தச் செய்தியை பயனர்களுக்கு அனுப்பவில்லை. பயனர்களிடம் பெருமளவு ஆர்வமில்லாததால், அவர்களை தொந்தரவு செய்வதை தவிர்த்துவிட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 26 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]