உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:செப்டம்பர் 23, 2023 தஞ்சாவூர் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருங்கிணைப்புக் குழு[தொகு]

இந்த நிகழ்வை நடத்தும் பொருட்டு தன்னார்வலர்கள் இணைந்து, குழு ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். நிகழ்வு நடப்பதற்கான இடம், நிகழ்ச்சி நிரல், உணவு வழங்கல் உள்ளிட்ட ஏற்பாட்டுப் பணிகளை இக்குழுவின் உறுப்பினர்கள் செய்துவருகிறார்கள்.-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:15, 14 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சி நிரலுக்கான பரிந்துரைகள்[தொகு]

  1. விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்கள் போன்ற திட்டங்களைப் பற்றிய அறிமுகம்.
  2. விக்கிப்பீடியாவின் கூறுகள் குறித்தான விளக்கம்.
  3. தொகுத்தல் பணிகளுக்கான பயிற்சி.
  4. புதிய கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி.
  5. முயற்சிகளுக்கு வழிகாட்டி உதவுதல்.
  6. விக்கி மாரத்தான் குறித்து விளக்குதல். விருப்பமுடையோர் தமது பெயரை பதிவுசெய்ய உதவுதல்.

ஞா. ஶ்ரீதர்[தொகு]

கல்லூரிப் போசிரியர்கள் என்பதாலும் ஒரு நாள் மட்டுமே உள்ளதாலும் அவர்களுக்கு விக்கிப்பீடியா பற்றி மட்டும் எடுத்துரைக்கலாம் என்பது என் கருத்து. (பேராசிரியர்கள் என்பதால் அவர்கள் துறை சார்ந்த கட்டுரைகளை உருவாக்கலாம்) -- ஸ்ரீதர். ஞா (✉) 13:35, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

சத்திரத்தான்[தொகு]

ஞா. ஶ்ரீதர் கருத்தினை வரவேற்கின்றேன். விக்கியின் பிறத்திட்டங்களை அறிமுகம் செய்துவிட்டு, விக்கிப்பீடியாவில் கவனம் செலுத்தலாம். உணவு இடைவெளிக்கு பிந்தைய அமர்வினை கட்டுரை உருவாக்கத்திற்கு செலவிடலாம். --சத்திரத்தான் (பேச்சு) 13:51, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

பா. ஜம்புலிங்கம்[தொகு]

கட்டுரை உருவாக்கத்திற்கு என்னால் ஆன பங்கினை அளிக்க விருப்பம்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:50, 16 செப்டம்பர் 2023 (UTC)

@பா.ஜம்புலிங்கம்: வணக்கம் ஐயா. உங்களின் பங்களிப்பினைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மிக்க நன்றி! இந்த நிகழ்வை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்வர். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:54, 16 செப்டம்பர் 2023 (UTC)
சரி, நன்றி ஐயா. பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 18 செப்டம்பர் 2023 (UTC)

நிகழ்ச்சி நிரல்[தொகு]

* இதுவொரு வரைவு மட்டுமே; மாறுதலுக்கு உட்பட்டது.

எண் பரிந்துரைகள் அமர்வின் வடிவம் காலம் (மணி நேரம்)
1 விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்தி பற்றிய அறிமுகம் உரையாற்றுதல் 0.25
2 விக்சனரி, விக்கிமூலம் பற்றிய அறிமுகம் உரையாற்றுதல் 0.25
3 விக்கிப்பீடியாவின் கூறுகள் குறித்தான விளக்கம்
* முதற் பக்கம், அண்மைய மாற்றங்கள்
* புதிய கட்டுரை எழுதுக
* ஆலமரத்தடி, பேச்சுப் பக்கங்கள்
* பகுப்புகள், வார்ப்புரு
உரையாற்றுதல் 0.75
4 தொகுத்தல் பணிகளுக்கான பயிற்சி உரையாற்றுதல் 1.0
5 புதிய கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி உரையாற்றுதல் 1.0
6 கட்டுரையாக்கம் / தொகுத்தல் பணியாற்றுதல் 1.5
7 விக்கி மாரத்தான் குறித்து விளக்குதல்.
* விருப்பமுடையோர் தமது பெயரை பதிவுசெய்ய உதவுதல்
கலந்துரையாடல் 0.25
8 சான்றிதழ் வழங்குதல் கலந்துரையாடல் 0.5