விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நா. ரெ. மகாலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. ரெ. மகாலிங்கம் 2017ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு நடைப்பெற்ற விக்கிப்பீடியா பயிற்சி மூலம் விக்கிக்கு அறிமுகமான இவர் விக்கித் திட்டங்களுக்கு சிறப்பாக பங்களித்துவருகிறார். தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர். விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவர் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக எழுதி வருகிறார்.