விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 24
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
- 1857 – கொல்கத்தா பல்கலைக்கழகம் தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாகத் திறக்கப்பட்டது.
- 1897 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
- 1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.
- 1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர்.
- 1961 – இரண்டு ஐதரசன் குண்டுகளை ஏற்றிச் சென்ற குண்டு-வீச்சு விமானம் ஒன்று வட கரொலைனாவில் நடுவானில் இரண்டாகப் பிளந்தது. ஐதரசன் குண்டு ஒன்றின் யுரேனியம் கருவம் காணாமல் போனது.
- 1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொசு (படம்) தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.
சி. பி. முத்தம்மா (பி. 1924) · சி. கே. சுப்பிரமணிய முதலியார் (இ. 1961) · வி. எஸ். ராகவன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சனவரி 23 – சனவரி 25 – சனவரி 26