காலிகுலா
காலிகுலா | |||||
---|---|---|---|---|---|
பேரரசர் காலிகுலாவின் மார்பளவுச் சிலை | |||||
உரோமைப் பேரரசர்கள் | |||||
ஆட்சிக்காலம் | மார்ச் 18, கிபி 37 – ஜனவரி 24, கிபி 41 (3 ஆண்டுகள், 10 மாதங்கள்) | ||||
முன்னையவர் | டைபீரியசு | ||||
பின்னையவர் | குளோடியசு | ||||
துணைவர் | |||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | ஜூலியோ குளாடிய மரபு |
காலிகுலா (Caligula; இலத்தீன்: Gaius Julius Caesar Augustus Germanicus; 31 ஆகஸ்டு 12- 24 ஜனவரி 41 கி.பி.) கி.பி. 37லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்தவர். இவர் மிகவும் புகழ் பெற்ற ரோம தளபதி ஜெரமானிக்கசுக்கும், அகஸ்டசு அரசரின் பேத்தியான மூத்த அகிரிப்பினாவுக்கும் மகன் ஆவார். காலிகுலா ரோம இராஜ்யத்தை ஆளும் முதல் அரச குடும்பத்தில் பிறந்தார். இந்த அரசமரபு வழக்கமான முறைப்படி ஜூலியோ-கிளாடியன் வம்சம் என்று அறியப் பட்டது. காலிகுலா பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஜெர்மானிக்கசின் மாமாவும் வளர்ப்பு தந்தையுமான டைபீரியசு, அகஸ்டசுக்குப் பின்னர் ரோம பேரரசராக கி.பி.14 இல் பட்டம் ஏற்றார்.
ஜூலியஸ் சீசரின் பெயர் கொண்டு காலியஸ் சீசர் என்று பெயரிடப்பட்டாலும் இவர் காலிகுலா என்ற அடை மொழியைப் பெற்றார் (காலிகுலா என்ற பெயராக்கம் சிறு வீரர்களின் பூட்ஸ் அல்லது சப்பாத்து ஆகும் - காலிகா). இவ்வாறு அழைத்தது இவரது தகப்பனாரின் போர் வீரர்கள் ஆவர். இவர்கள் ஜெர்மானியாவில் முகாமிட்டிருக்கும் போது இவரைக் காலிகுலா என்று அழைக்க ஆரம்பித்தனர். ஜெர்மானிக்கசு கி.பி.19இல் இறந்த பிறகு அவரின் மனைவியும் காலி குலாவின் தாயுமான அகிரிப்பினா தனது ஆறு குழந்தைகளுடன் ரோமுக்குத் திரும்பி வந்தார் அங்கு அவருக்கு டைபீரியசுடன் ஒரு கசப்பான பகைமை உருவானது. இந்த பகைமை அவளின் குடும்ப உறுப்பினர் அனைவரையும் அழித்தது. எஞ்சியது காலிகுலா மட்டுமே. இந்த கிளர்ச்சிகளால் பாதிக்கப் படாமல் தனது வளர்ப்பு தாத்தாவின் அழைப்புக்கு இணங்க காலிகுலா கி.பி.31 இல் காப்ரி என்கின்ற தீவில் அவரைச் சந்தித்தார். அத்தீவைவிட்டு டைபீரியஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சென்று விட்டார். டைபீரியசு இறந்த பிறகு காலிகுலா, கி.பி.37இல் பேரரசாக பட்டம் சூடினார்.
காலிகுலாவின் அரசாட்சியைப் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆவணங்கள் இல்லை. இருந்தாலும் இவர் ஒரு உயர்ந்த, மிதவாதியான அரசராக முதல் ஆறு மாதங்களுக்கு இருந்தார் என வர்ணிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு இவரை மிக மோசமான அரசராக ஆவணங்கள் சித்தரிக்கின்றன. கொடூரமானவராக, கொடுஞ்செயல் புரிபவராக, அதிக செலவு செய்யும் ஊதாரியாக இயற்கைக்கு அப்பாற்பட்டு பாலுறவு கொள்பவராக அவைகள் கூறுகின்றன. இவரை ஒரு பித்துப்பிடித்த அரசராகச் சித்தரிக்கின்றன. ஆனால் இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதே. ஆனால் இவரின் அரசாட்சி சமயத்தில் இவர் அரசரின் கட்டுப்பாடற்ற ஆற்றலை அதிகரிக்கும் முயற்சியிலும் அவரை எதிர் கேள்வி கேட்பதற்கு அதிக இடமில்லாமலும் பார்த்துக் கொண்டார். அவர் தனக்கு சொகுசு மாளிகை கட்டுவதிலும் உயர் வகை கட்டங்கள் கட்டும் செயல் திட்டங்களிலும் தனது கவனம் முழுவதும் செலுத்தினார். மேலும் ரோமில் உள்ள இரு கால்வாய் பாலங்களைக் கட்டுவதிலும் கவனம் செலுத்தினார். அவைகளின் பெயர்கள் அகுவா க்ளாடியா மற்றும் அனியோ நோவாஸ் ஆகும். இவரின் காலத்தில் இவர்களின் கீழிருந்த மௌரிடானியா அரசானது இவரின் பேரரசோடு ஒரு மாகாணமாக இணைக்கப் பட்டது.
கி.பி.41 இல் இவரது மெய்க்காவல் படை, அமைச்சர்கள் மற்றும் அரசவையினர் சேர்ந்து செய்த கூட்டுச்சதியில் படுகொலை செய்யப்பட்டார். எப்படி ஆனாலும் இந்த சதிக்கூட்டத்தின் எண்ணமாகிய ரோம் குடியரசு என்ற கனவு நிறைவேறவில்லை. காலிகுலா கொலை செய்யப் பட்ட அன்றே ரோம அரசவை நடுவர் காலிகுலாவின் மாமா கிளாடியசை அரசராகப் பிரகடனம் செய்தது. இவரின் ஆட்சியிலும் ஜூலியோ-க்ளாடியன் வம்சம் தொடர்ந்தது. இவரின் மருமகன் நீரோ மன்னர் கி.பி. 68 இல் இறக்கும் வரை இந்த வம்சம் தொடர்ந்தது. ஆனால் காலிகுலா இறந்த பிறகு ஜூலியஸ் சீசரின் ஆண் வம்சாவளி நின்று போனது.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]குடும்பம்
[தொகு]உரோமப் பேரரச மரபுகள் | |||
ஜூலியோ குளாடிய மரபு | |||
காலக்கோடு | |||
அகஸ்ட்டஸ் | 27 BC – 14 AD | ||
டைபீரியஸ் | 14–37 AD | ||
காலிகுலா | 37–41 AD | ||
குளாடியஸ் | 41–54 AD | ||
நீரோ | 54–68 AD | ||
அரசு மாற்றம் | |||
முன் இருந்தது உரோமக் குடியரசு |
பின் இருந்தது நான்கு பேரரசர்களின் ஆண்டு |
காயஸ் ஜூலியஸ் சீசர் (அவரின் புகழ்பெற்ற உறவினரின் பெயர்) அன்டியம் என்ற இடத்தில் கி.பி 12 ஆம் வருடம் 31 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் பிறந்தார்[1]. ஜெர்மானிக்கசுக்கும் அவரின் இரண்டாம் சொக்காரர் அகிரிப்பினாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாமவர்.[2] இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரர்கள் நீரோ மற்றும் ட்ரூஸஸ் ஆவர். அகிரிப்பினா இளையவர், ஜூலியா ட்ருஸில்லா மற்றும் ஜூலியா லிவில்லா ஆகியோர் சகோதரிகள் ஆவர்.[2][3] இவரின் சித்தப்பா கிளாடியசு ஆவார். இவர் ஜெர்மானிக்கசின் இளைய சகோதரரும் பிற்கால அரசனும் ஆவார்.[4]
இவரின் தாய் அகிரிப்பினா, மார்கஸ் விஸ்பானியஸ் அகிரிப்பா மற்றும் மூத்த ஜூலியா பிறந்த மகளாவார்.[2] இவரின் அம்மா வழி தாத்தா அகஸ்டசு ஆவார். அகிரிப்பினா மூலமாக அகஸ்டசு, காலிகுலா என்ற காயசின் கொள்ளுத் தாத்தா ஆவார்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Paola Brandizzi Vittucci, Antium: Anzio e Nettuno in epoca romana, Roma, Bardi, 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-85699-83-9
- ↑ 2.0 2.1 2.2 2.3 Suetonius, The Lives of Twelve Caesars, Life of Caligula 7.
- ↑ Wood, Susan (1995). "Diva Drusilla Panthea and the Sisters of Caligula". American Journal of Archaeology 99 (3): 457–482. doi:10.2307/506945. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9114. https://doi.org/10.2307/506945.
- ↑ Cassius Dio, Roman History LIX.6.