விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டம்பர் 5
Appearance
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 5 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செப்டம்பர் 5: ஆசிரியர் நாள் (இந்தியா)
- 1698 – உருசியப் பேரரசர் முதலாம் பேதுரு (படம்) அவரது பிரபுத்துவத்தை மேற்கத்தியமயமாக்கும் முயற்சியில் தாடி வைத்திருப்போருக்கு (மதகுருக்கள், மற்றும் விவசாயிகள் நீங்கலாக) வரி அறவிட உத்தரவிட்டார்.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு தேசிய மாநாடு பயங்கர ஆட்சியை நடைமுறைப்படுத்தியது.
- 1882 – முதலாவது அமெரிக்கத் தொழிலாளர் நாள் ஊர்வலம் நியூயார்க்கில் இடம்பெற்றது.
- 1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
- 1972 – செருமனியில் மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இசுரேலிய வீரர்களின் மீது பாலத்தீனப் போராளிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990 – கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்: மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
வ. உ. சிதம்பரம்பிள்ளை (பி. 1872) · ஔவை துரைசாமி (பி. 1903) · பொ. வே. சோமசுந்தரனார் (பி. 1909)
அண்மைய நாட்கள்: செப்டெம்பர் 4 – செப்டெம்பர் 6 – செப்டெம்பர் 7