வாழ்விடப் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரம் நடுதல் வாழ்விடப் பாதுகாப்பின் ஓர் வழியாம். ஒவ்வொரு நெகிழிக் குழாயிலும் ஓர் மரக்கன்று இடப்பட்டுள்ளது.
தெரிவு செய்து வெட்டுதலில் குறிப்பிடத்தக்க சூழலியல் நலன்கள் உள்ளன. படத்தில் தெரிவு செய்து வெட்டப்பட்ட பைன் மரக்காடு காட்டப்பட்டுள்ளது.

வாழ்விடப் பாதுகாப்பு (Habitat conservation) காட்டுத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ள வாழிடத்தை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் நில மேலாண்மை நெறிமுறைகள் ஆகும். குறிப்பாக வாழ்விடப் பாதுகாப்பை சார்ந்துள்ள இனங்களுக்காகவும் இனம் அற்றுப் போவதையும், வாழ்விடத் துண்டாக்கத்தை தடுக்கவும் வாழ்விட நிலவீச்சு குறைந்து வருவதைத் தடுக்கவும் வாழ்விடப் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.[1] பல்வேறு கருத்தியல்கள் கொண்ட பல குழுமங்கள் இதனை முன்னுரிமையாகக் கொண்டுள்ளனர்.

வாழ்விடப் பாதுகாப்பின் வரலாறு[தொகு]

வரலாற்றின் பெரும்பகுதியிலும் மனிதர்கள் இயற்கையை தங்களுக்கான இயல்பான வளமாகக் கருதி வந்துள்ளனர்; தங்கள் தனிப்பட்ட நலனுக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தவும் முழுமையான உரிமை பாராட்டினர். தாவரங்கள் விலங்குகளுக்கான உணவை வழங்கவும் விலங்குகள் மனிதர்களுக்கு பயன்படவும் மட்டுமே உள்ளதாக கருதியுள்ளனர்.[2] தரக்கூடிய பொருளாதார பயன்பாட்டை ஒட்டியே நிலம் மதிப்பிடப்பட்டது. கனிமங்களும் எண்ணெயும் பெறக்கூடிய நிலவளங்கள் மதிப்பைக் கூட்ட உதவின.

ஆபிரிக்க யானைகளின் துண்டாக்கப்பட்ட வாழிடங்கள்

18ஆவது, 19ஆவது நூற்றாண்டுகளில் இத்தகையச் சமூகப் பார்வைகள் மாறத்தொடங்கின; அறிவியல் சார்ந்த பாதுகாப்பு கருத்தியல்கள் முதன்முதலாக பிரித்தானிய இந்தியாவின் வனப்பகுதிகளில் செயற்படுத்தப்பட்டன. இது மூன்று கருவக் கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது:

 1. மாந்த நடவடிக்கைகள் இயற்கைச் சுற்றுப்புறத்தை பாதித்தன;
 2. வருங்கால சந்ததியினருக்காக சுற்றுப்புறத்தை பாதுகாப்பது குடிமைக் கடமை ஆகும்;
 3. அறிவியல் சார்ந்த, பண்பாடு சார்ந்த வழிமுறைகள் இக்கடமையை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும்.

இக்கருத்தியலை முன்னெடுத்தவர்களில் சேர் ஜேம்சு ரனால்டு மார்ட்டின் முதன்மையானவர் ஆவார். இவர் பெருமளவு வனவழிப்பால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பல மருத்துவ-இடக்கிடப்பியல் அறிக்கைகளை வெளியிட்டும் பிரித்தானிய இந்தியாவில் வனத்துறையை நிறுவி இதனை முறையாக மேற்கொள்ளவும் பரப்புரை ஆற்றினார்.[3]

சென்னை வருவாய் வாரியம் 1842இல் தொழில்முறை தாவரவியலாளரான அலெக்சாண்டர் கிப்சன் தலைமையில் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டது; இவர் முறையான அறிவியல் சார்ந்த பாதுக்காப்பு திட்டமொன்றை உருவாக்கினார்.உலகில் இதுவே முதல் அரசு சார்ந்த வன மேலாண்மை ஆகும்.[4] இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு 1855இல் உலகில் முதன்முறையாக பெரியளவிலான, நிரந்தமான வனப்பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த முறைமை மற்ற குடியேற்றப் பகுதிகளிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும்[5][6][7] கடைபிடிக்கப்பட்டது;1872இல் உலகின் முதல் தேசியப் பூங்காவாக யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா திறக்கப்பட்டது.[8]

அது தரும் வளங்களுக்காகவும் பொருளாதாரப் பயன்களுக்காகவும் அல்லாது மனிதர்கள் இயற்கையின் பெருமையை உணரத் தொடங்கினர்; இந்த அழகான இயற்கைச் சூழலைப் பேண வேண்டியதன் தேவையையும் உணர்ந்தனர்.[9] இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இதனை உணர்ந்து வருங்காலத் தலைமுறைகளுக்கு இதனை பாதுகாத்துக் கொடுக்கப் பொருத்தமான சட்டங்களை இயற்றினர். இன்று உலகளவில் பல இலாப நோக்கற்ற அமைப்புக்களும் அரசுகளும் இணைந்து இதனை இயக்கமாக முன்னெடுத்துள்ளன. உயிரிப் பன்மயத்தை உங்களாவிய அளவில் தக்கவைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

 1. Habitat Conservation Planning Branch. "Habitat Conservation". California Department of Fish & Game. பார்த்த நாள் 2009-04-07.
 2. Thomas, Keith (1983). Man and the Natural World: A History of the Modern Sensibility. New York: Pantheon Books. பக். 17–25. 
 3. Stebbing, E.P (1922)The forests of India vol. 1, pp. 72-81
 4. Greg Barton (2002). Empire Forestry and the Origins of Environmentalism. Cambridge University Press. பக். 48. http://books.google.co.uk/books?id=WDYlNljAP5AC&source=gbs_navlinks_s. 
 5. MUTHIAH, S. (Nov 5, 2007). "A life for forestry". Metro Plus Chennai (The Hindu). http://www.hindu.com/mp/2007/11/05/stories/2007110550080500.htm. பார்த்த நாள்: 2009-03-09. 
 6. Cleghorn, Hugh Francis Clarke (1861). The Forests and Gardens of South India (Original from the University of Michigan, Digitized Feb 10, 2006 ). London: W. H. Allen. இணையக் கணினி நூலக மையம்:301345427. http://www.worldcat.org/wcpa/oclc/301345427?page=frame&url=http%3A%2F%2Fbooks.google.com%2Fbooks%3Fid%3D_ZbC9FY1JqIC%26checksum%3D374d90c92770a514a51708f07461f0b3&title=&linktype=digitalObject&detail=. 
 7. America has been the context for both the origins of conservation history and its modern form, environmental history. Asiaticsociety.org.bd. Retrieved on 2011-09-01.
 8. Haines, Aubrey (1996). The Yellowstone Story: A History of Our First National Park: Volume 1 Revised Edition. Yellowstone Association for Natural Science, History of Education. 
 9. "BC Spaces".

வெளி இணைப்புகள்[தொகு]