வாழையூர்

ஆள்கூறுகள்: 11°13′0″N 75°54′30″E / 11.21667°N 75.90833°E / 11.21667; 75.90833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழையூர்
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
வாழையூரில் ஒரு விடியல்
வாழையூரில் ஒரு விடியல்
வாழையூர் is located in கேரளம்
வாழையூர்
வாழையூர்
கேரளத்தில் அமைவிடம்
வாழையூர் is located in இந்தியா
வாழையூர்
வாழையூர்
வாழையூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°13′0″N 75°54′30″E / 11.21667°N 75.90833°E / 11.21667; 75.90833
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்36,909
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்673633
வாகனப் பதிவுKL 10

வாழையூர் (Vazhayur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு ஊராகும்.[1] 2018 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான சுடானி ஃப்ரம் நைஜீரியாவின் படப்பிடிப்பு வாழையூரில் நடைபெற்றது. இந்த நகரம் மலப்புரம் பெருநகரப் பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த ஊரின் மக்கள் தொகையில் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 4306 ஆகும், இது வாழையூரில் மொத்த மக்கள் தொகையில் 11.67% ஆகும். வாழையூரில், மாநில சராசரி பாலின விகிதமான 1084க்கு எதிராக பெண் பலின விகிதமானது 1032 ஆக உள்ளது. மேலும், கேரள மாநில சராசரியான 964 உடன் ஒப்பிடும்போது வாழையூரில் குழந்தை பாலின விகிதம் 958 ஆக உள்ளது. வாழையூர் நகரத்தின் எழுத்தறிவு விகிதம் மாநில சராசரியான 94.00% ஐ விட 95.79% அதிகமாக உள்ளது. வாழையூரில் ஆண்களின் கல்வியறிவு 97.44% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 94.19% ஆகவும் உள்ளது.

வாழையூரில் உள்ள 7,883 வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.

முக்கிய அமைப்புகள்[தொகு]

  • திரிஷ்யா பொன்னேம்படம்
  • எஸ்.ஏ.எப்.ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி
  • பொன்னேம்படம் கலாசமிதி (முதல் தர பீடி நிறுவனம்)
  • பாரூக் கல்லூரி
  • பி.எம்.எஸ்ஏ.பி.டி. மேல்நிலைப் பள்ளி
  • வேதவியாச தொழில்நுட்ப நிறுவனம்
  • ஹொரைசன் சர்வதேச பள்ளி
  • அல்ஃபாரூக் கல்லூரி, ஃபெரோக்
  • 4,000 ஆண்டுகள் பழமையான இருன்னமன்னா மகாவிஷ்ணு கோவில். 2016 இல் புதுப்பிக்கப்பட்டது.
  • ஈகோபில்ட் மலை சரிவு தனிவீடுகள்

முன்மொழியப்பட்ட கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சி[தொகு]

முன்மொழியப்பட்ட கரிப்பூர்-கொண்டோட்டி நகராட்சியில் உள்ளடங்கியவை:[2]

  • கொண்டோட்டி ஊராட்சி (கொண்டோட்டி கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • நெடியிருப்பு ஊராட்சி (நெடியிருப்பு கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • பள்ளிக்கல் ஊராட்சி (பள்ளிக்கல் கிராமங்கள் மற்றும் கரிப்பூரின் ஒரு பகுதி)
  • புலிக்கல் ஊராட்சி
  • செருகாவு ஊராட்சி
  • வாழையூர் ஊராட்சி

மொத்த பரப்பளவு: 122.99 கிமீ 2

மக்கள்தொகையியல்[தொகு]

அழிஞ்சிலம் தளி மகா விஷ்ணு கோவில், ராமநாட்டுக்கரை

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, வாழையூரின் மொத்த மக்கள் தொகை 21342 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 32486 என்றும், பெண்களின் எண்ணிக்கை 16403 என்றும் உள்ளது.[1] 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, வாழையூரின் மொத்த மக்கள் தொகை 36,909, இதில் 18,163 ஆண்களும், 18,746 பெண்களும் உள்ளனர்.

போக்குவரத்து[தொகு]

வாழையூர் கிராமம் மேற்கில் கோழிக்கோடு நகரம் மற்றும் கிழக்கில் நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 அழிஞ்சிலம் சந்திப்பு வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் ஃபெரோக்கில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Talks on Karipur airport development today". தி இந்து. 3 November 2004. http://www.thehindu.com/2004/11/04/stories/2004110404640500.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழையூர்&oldid=3920300" இலிருந்து மீள்விக்கப்பட்டது