வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்

- நாசாவின் ஒசைரிசு-ரெக்சு விண்கலத் திட்டம் புவியருகு சிறுகோள் பென்னுவில் இருந்து அதன் மாதிரிகளை சேகரித்து புவிக்கு அனுப்பியது (திரும்பிய கலம் படத்தில்).
- தானியேல் புயல் மத்திய நடுநிலக் கடல் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதில், லிபியாவில் இரண்டு அணைகள் இடிந்து விழுந்து 11,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவை 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 2,000 பேர் உயிரிழந்தனர்.
- இந்திய சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்தியா எல் 1 வெற்றிகரமாக சூரியனை நோக்கி ஏவப்பட்டது.