வார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆதாரங்கள்[தொகு]

--Natkeeran 12:43, 10 மே 2009 (UTC)[பதில் அளி]

பன்றிக் காய்ச்சல்[தொகு]

முதற்பக்கத்தில் சரியாக காட்சிப்படவில்லை. நடப்பு நிகழ்வுகள் பக்கம் சரியாக இருந்ததால் சேமித்தேன். தவறை திருத்தவும். மிகவும் வருந்துகிறேன்.--மணியன் 06:17, 11 ஆகஸ்ட் 2009 (UTC)

விக்கிகசிவுகளில்?[தொகு]

விக்கிகசிவுகளில்?--ரவி 18:30, 7 ஏப்ரல் 2010 (UTC)[பதில் அளி]

விக்கிகசிவுகளில்.--Kanags \உரையாடுக 03:13, 8 ஏப்ரல் 2010 (UTC)[பதில் அளி]

தொடருந்து விபத்து பற்றிய செய்தி[தொகு]

கனகு! தொடருந்து விபத்து பற்றிய செய்தியில் "...தொடருந்து இருப்புப்பாதை தகர்க்கப்பட்டதால் தடம்புரண்டு சரக்கு வண்டியுடன் மோதியதில்..." என்று வந்துள்ளது. அச்சொற்றொடர் "...தொடருந்து தடம்புரண்டு, (பின்னர்) அப்பாதையில் வந்த சரக்கு வண்டி தொடருந்து மீது மோதியதில்..." என்று இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில், தொடருந்து சரக்கு வண்டியுடன் மோதிற்றதோ என்றொரு தோற்ற மயக்கத்தை முதல் சொற்றொடர் ஏற்படுத்துகின்றது என்பது என் எண்ணம். நன்றி. --பரிதிமதி 17:13, 28 மே 2010 (UTC)[பதில் அளி]

முதற் பக்கத்தில் செய்தி சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதால் அப்படி எழுதினேன். மொத்தத்தில் இரண்டு வண்டிகள் மோதியது என்பது தானே சரி. செய்தி வரிகளை இன்னும் பொருத்தமாக சுருக்கமாக எப்படி எழுதலாம் எனப் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 23:54, 28 மே 2010 (UTC)[பதில் அளி]

பாப்பரசரின் பயணம்[தொகு]

நாட்டுத் தலைவர் அல்லது சமயத் தலைவர்களின் பயணங்கள் வழமையாக நிகழ்கின்ற ஒன்றுதானே. இதனைச் சிறப்பாக முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டுமா ? --மணியன் 14:52, 20 செப்டெம்பர் 2010 (UTC)

மணியன், பின்வரும் காரணங்களுக்காக இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது:
  • திருத்தந்தை ஒருவரின் ஐக்கிய இராச்சியத்துக்கான முதலாவது அரசு முறைப் பயணம்.
  • திருத்தந்தை ஒருவர் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் தடவையாக ஐக்கிய இராச்சியம் சென்றார்.
  • ஐரோப்பாவில் பரவலாக கத்தோலிக்கத் திருச்சபைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இப்பயணம் சிறப்புப் பெறுகிறது.
  • இவரது பயணம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். படுகொலை செய்யக் கூடச் சதி முயற்சி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக இவரது பயணம் குறித்த செய்தி பல ஊடகங்களில் முதற் பக்கத்தில் இடம்பெற்றன. ஆங்கில விக்கியில் இவரது பயணம் தொடர்பான செய்தி முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியில் இதற்கெனத் தனிக் கட்டுரை உண்டு.--Kanags \உரையாடுக 07:59, 21 செப்டெம்பர் 2010 (UTC)

அப்படியென்றால் இவற்றில் ஏதாவது ஒன்றை பல சிக்கல்களிடையே சென்ற என்பது போல முன்னொட்டாகத் தந்தால் இப்பயணத்தின் முக்கியத்துவம் விளங்கும், சிறிதரன். -- சுந்தர் \பேச்சு 11:20, 21 செப்டெம்பர் 2010 (UTC)
விரிவான விளக்கத்திற்கு நன்றி சிறிதரன்.வழமையான ஓர் பயணம் அல்ல என்பதை முன்னொட்டாக சேர்த்தபின் முக்கியத்துவம் புரிகிறது.--மணியன் 12:40, 21 செப்டெம்பர் 2010 (UTC)

ஒலிம்பிக்ஸ்[தொகு]

ஒலிம்பிக்ஸ் "ஒரு நாளில்" என்று வரவேண்டும். மாற்றவும்...

Yes check.svgY ஆயிற்று--இரவி (பேச்சு) 07:04, 26 சூலை 2012 (UTC)[பதில் அளி]

பாப்பரசர்[தொகு]

பாப்பரசர் பற்றிய செய்தியில் “Pope Benedict XVI announces that he will resign the papal throne at the end of the month.” என்பது தமிழில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை.--Kanags \உரையாடுக 12:07, 11 பெப்ரவரி 2013 (UTC)[பதில் அளி]

ஊக / பரபரப்புச் செய்திகளைத் தவிர்க்கலாம்[தொகு]

//தமிழகத்தில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் அதிமுக அதிகப்படியான இடங்களை வென்று, முதலிடத்தைப் பெறுமென வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி முதலிடத்தைப் பெற்று ஆட்சி அமைக்குமென வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.//

ஊகத்தின் அடிப்படையில் அமைந்த இது போன்ற பரபரப்புச் செய்திகளைத் தவிர்க்கலாம். இது தொடர்பான ஊடகச் செய்திகள் ஒருபக்கச் சார்பானவை என்று கருதப்படுவதையும் நோக்கலாம். --இரவி

ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 10:22, 13 மே 2014 (UTC)[பதில் அளி]
மறைமுக அரசியல் இருக்கக்கூடும் எனினும், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொதுவாக புள்ளியியல் அடிப்படையிலான கணிப்புகளாகும். மேலும் அனைத்து ஊடகங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக சொல்லப்பட்டதால், இச்செய்தியினை இங்கு பதிப்பிட்டேன். இச்செய்தியினை பரபரப்புச் செய்தியாகக் கருதி நான் எழுதவில்லை. எனினும் கருத்துகளை மதித்து நீக்கிவிடுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:38, 13 மே 2014 (UTC)[பதில் அளி]
இரவு வீடு சென்றபிறகே தினமணி நாளிதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் காலையில் விக்கியின் முதற்பக்கத்தில் என்ன எழுதினோமா, அதே நடையில் அவர்களும் முதற்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக எழுதியிருந்தனர். (தினமணியை காலையில் நான் இணையத்தளத்திலும் பார்க்கவில்லை) தினமணி எப்போதுமே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாது. இது ஒரு இயல்பான, ஆனால் ஆர்வமூட்டும் செய்தி. தேர்தல் என்பது இந்தியாவில் ஒரு திருவிழா; ஒரு பெரிய கிரிக்கெட் தொடர் போன்றது! 16ஆம் தேதிவரை காத்திருக்க செய்தி ஆர்வலர்களுக்கு பொறுமை கிடையாது! எனவே இந்தியாவைப் பொறுத்தளவில் இது ஒரு முக்கிய செய்தி! வாதத்திற்காக இந்த மறுமொழியை நான் எழுதவில்லை; விக்கியின் முதற்பக்கத்தில் செய்தி எழுதும்போது நான் எப்போதும் மிகுந்த தார்மீகப் பொறுப்புடன் எழுதுகிறேன் என்பதனை பதிவு செய்யவே. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:19, 13 மே 2014 (UTC)[பதில் அளி]
மா. செல்வசிவகுருநாதன், நீங்கள் பரபரப்புக்காக இச்செய்தியை எழுதினீர்கள் என்று நான் கூறவில்லை. ஊடகங்கள் இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவதற்குப் பின் பரபரப்பு வணிகம், ஊடக அரசியல் என்று பலவும் உள்ளன. https://en.wikipedia.org/wiki/The_medium_is_the_message , https://en.wikipedia.org/wiki/Lies,_damned_lies,_and_statistics , http://tamil.oneindia.in/news/tamilnadu/stalin-dismisses-predictions-lse-200904.html பாருங்கள். நடந்ததை நடுநிலையாக ஐயம் திரிபற முன்வைக்கும் செய்திகளை மட்டும் நாம் காட்சிப்படுத்துவோமே? கருத்துக் கணிப்புகளில் இத்தன்மை இல்லை. வேண்டுகோளை ஏற்று செய்தியை நீக்கியமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 14:35, 15 மே 2014 (UTC)[பதில் அளி]

ஒருமுறை "இலஞ்சத்தை ஒழிக்க ஆரம்பிக்கப்பட்ட XXXXXX கட்சி" "இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட" என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது. இதைப் போன்றதையும் தமிழ் விக்கிப்பீடியா முழுதும் தவிர்க்க வேண்டும். அந்த கட்சி அறிக்கைகள் தொடர்பான செய்திகளுக்கு மட்டுமே விதிவிலக்கு வழங்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:42, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

//தினமணி எப்போதுமே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாது. இது ஒரு இயல்பான, ஆனால் ஆர்வமூட்டும் செய்தி.//

எனக்கும் ஏறக்குறைய அப்படி ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் விக்கிசெய்தியும் விக்கிப்பீடியாவும் இந்த விசயத்தில் ஒரே மாதிரி தான்.

  1. விக்கிப்பீடியா ஊடக மாயைச் சொற்களைக் கடந்து/தவிர்த்து ஒரு தகவலை நடுநிலையாகத் தருவதைப் போலவே
  2. விக்கிசெய்திகளும் ஊடக மாயைச் சொற்களைக் கடந்து/தவிர்த்து ஒரு செய்தியை நடுநிலையாகத் தர வேண்டும்.

ஆனால் புகழ்பெற்றவர்களின் மேற்கோள்களையும் (கோட்சு) அரசியல் கட்சிகளின் அறிக்கைகளையும் எழுதும் போது மட்டும் விதிவிலக்கு செய்யலாம். இதைப் போன்ற கட்டுரைகளை எழுதும் போது நான் முகநூலிலோ சோடாபாட்டில், செங்கைப்பொதுவன் போன்றவர்களிடமோ கொண்டுசென்று விடுவேன். மற்றவர்கள் பார்க்கும் போது எழுதியவர் அறியாமல் விட்ட நடுநிலைப் பிறழ்வுகள் தவிர்க்கப்பட்டுவிடும். அதனால் தான் எப்போதோ சிறப்புக் கட்டுரை தேர்ந்தெடுப்பு தொடர்பான ஒரு உரையாடலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு கட்டுரையை எழுதினால் தான் சிறப்புக் கட்டுரையாக்க வேண்டுமென கருத்து தெரிவிக்கப்பட்டது. நமக்கே தெரியாமல் நடுநிலைப் பிறழ்வுகள் வருவதை இது தவிர்க்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

செய்திகள் பக்கம்[தொகு]

ஓர் அமைப்பின் சின்னம் பெரிதாக முதற்பக்கத்தில் உள்ளது. செய்தி இருக்கட்டும். அவ்வமைப்பின் சின்னமுள்ள வலைத்தளத்தைப் பார்வையிட்டாலே கைது செய்து விடுவார்கள். அச்சின்னத்தை பார்ப்போரின் பாதுகாப்புக்காக நீக்கி விடுங்கள். தொடர்ந்து அது இருந்தால் விக்கிப்பீடியாவிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். இப்படி இனிமேல் செய்ய வேண்டாம்.--G.Kiruthikan (பேச்சு) 06:05, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம் நடக்கலாம்????--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:11, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

ஆமாம் அண்ணா, செய்தி இட்டால் பரவாயில்லை, ஆயினும் சின்னம் இடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய விடயம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:15, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று சரியான திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். பாருங்கள் அண்ணாமார்களே--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:23, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

இங்கு பகிரப்பட்டுள்ள கவலையின் அடிப்படையில் முதற்பக்கத்தில் விடுதலைப்புலிகள் சின்னத்தை நீக்கியமையைத் தற்காலிகமாக ஏற்கலாம். எனினும், இது ஒரு தணிக்கைச் செயற்பாடாகவும் காணப்படக்கூடும். விடுதலைப்புலிகள் பற்றி மட்டுமன்று மற்ற பல போராட்ட அமைப்புகள் பற்றிய ஏராளமான கட்டுரைகள், படங்கள் விக்கிப்பீடியாவில் மிகுந்துள்ளன. இலங்கையில் நிலவும் சூழலைக் கணக்கில் கொண்டு எவ்வாறான அணுகுமுறையை நாம் மேற்கொள்வது என்று பயனர்களின் கருத்துகளை வரவேற்கிறேன். அதற்கேற்ப, முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் உள்ளடக்கம் பற்றிய நிலைப்பாட்டை உறுதி செய்யலாம். நன்றி.--இரவி (பேச்சு) 06:36, 16 மே 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் நானும் எண்ணினேன். பயனர்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:46, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

இதை ஓர் தணிக்கையாகவே கருதுகின்றேன். விடுதலைப்புலிகளின் வலைத்தளம் வேறு. விக்கிப்பீடியா வேறு. விக்கிப்பீடியாவைப் பார்த்ததால் யாரும் இலங்கையில் கைது செய்யப்படவில்லை. விக்கிப்பீடியாவின் எப்பக்கம் பார்க்கப்படுகின்றது என்பதை இலங்கையில் யாரும் கண்காணிக்க முடியாது. முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடக்கூடாது.

சில பயனர்களின் அச்சத்தை உணர முடிகிறது. அதனைக் கருத்தில் கொண்டு முதற் பக்கத்தில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும், பொதுவாக காப்புரிமையற்ற படிமங்களே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம் என்ற வரைமுறை விக்கிப்பீடியாவில் உண்டு. அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.--Kanags \உரையாடுக 07:56, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியாவில் விடுதலைப்புலிகள் சின்னத்தை காட்சிப்படுத்துதல், கட்டுரை எழுதுதல் சட்ட ரீதியான தடையைக் கொண்டுள்ளதா? தற்போது முறையான படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

@கனக்ஸ், விக்கிப்பீடியாவின் எப்பக்கம் பார்க்கப்படுகின்றது என்பதை இலங்கையில் யாரும் கண்காணிக்க முடியாது. சரி தான். சமூக வலைத்தளங்களை கண்காணித்து சில மாதம் முன் யாரையோ கைது செய்ததென பத்திரிகையில் வாசித்தேன். கலைக்களஞ்சியத்தில் அப்பிரச்சினை இல்லை. :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:19, 16 மே 2014 (UTC)[பதில் அளி]
கைது செய்ய நினைப்பவர்களுக்கு அது கலைக்களஞ்சியம் சமூக வலைத்தளமல்ல என்பதை நீங்கள் கூறிக் கொண்டிருப்பீர்களா? பலரதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். அவ்வளவு தான்.--Kanags \உரையாடுக 08:26, 16 மே 2014 (UTC)[பதில் அளி]
நான் அதைக்கூறவரவில்லை. எனக்கும் அதைத் தவிர்க்க விருப்பம். ஒரு தகவலுக்காக... நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:28, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

கைது செய்ய நினைப்பவர்கள் கலைக்களஞ்சியத்தை பார்ப்பதால் கைது செய்வார்கள் என்னும் வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தமிழ் விக்கிப்பீடீயா விடுதலைப்புலிகள் சின்னத்தை காட்சிப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களையோ, சின்னங்களையோ காட்சிப்படுத்தாதிருங்கள். முன்னர் மஹித்த ராஜபக்சயை காட்சிப்படுத்தியதை தவிர்த்திருக்கலாம். காட்சிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?! ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை வலிகளை ஏற்படுத்ததீர்கள் தமிழ் விக்கிக்பீடியர்களே. நன்றி. --500eMc2 (பேச்சு) 08:45, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

பயனர்களின் நன்மைக்காக தற்காலிகமாக விடுதலைப் புலிகளின் சின்னத்தைக் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்கலாம். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 14:43, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:00, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

எனக்கும் சின்னம் தனிக்கை செய்யப்படுவதில் உடன்பாடில்லை. வேறு பல இயக்கங்களின் கட்டுரைகள் முதற்பக்கத்தில் வந்தாலும் அவற்றின் சின்னங்களும் காட்சிப்படுத்துகின்றன. ஒரு இயக்கத்துக்கு என்று இப்படி உரையாடல் செய்யப்படுவதே எனக்கு வேறுபாடாகத் தெரிகிறது. விக்கிப்பீடியா படிமங்களின் தரவேற்றம் போது லோகோக்களையும் தரவேற்றலாம். அது முதல்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படவே செய்யப்படுகிறது. அதனால் செய்தி முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப இருந்தால் படத்துடன் செய்தியைக் கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.

பயனர்:500eMc2

//முன்னர் மஹித்த ராஜபக்சயை காட்சிப்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்.//

அப்படி விக்கிப்பீடியாவில் செய்ய முடியாது. கட்டுரையின் தரமே முக்கியம். ஒரு நபரைப் பற்றிய சாதனைகள், அவர் மீதுள்ள விமர்சனங்கள் இரண்டுக்குமே விக்கிப்பீடியா இடமளிக்கிறது. அப்படி இருக்கையில் ஒரு நபர் யாராக இருந்தாலும் அவர் பற்றிய கட்டுரை தரம் நன்றாக இருந்தால் காட்சிப்படுத்தவே செய்யும் தளம் விக்கி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:29, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

//அவ்வமைப்பின் சின்னமுள்ள வலைத்தளத்தைப் பார்வையிட்டாலே கைது செய்து விடுவார்கள். //

இந்த தகவலை சரிபார்க்க வேண்டுகிறேன். முன்பு ஒரு அமைப்பின் தளத்துக்கு தடை இருந்த போது அந்த தளத்தை தமிழ்நாட்டில் யாரும் பார்க்க முடியாத மாதிரி செய்த்ததாக நினைவு. ஒரு வேளை இந்திய அளவில் தடை இருந்தாலும் அதை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். தடைக்காலம் முடிவுற்றாலோ நீக்கப்பட்டாலோ ஒழிய அந்த தளத்தை பார்க்க முடியாது என நினைக்கிறேன். இருந்தாலும் இதை உறுதிப்படுத்தி விட்டு முதற்பக்கத்துக்கு கொண்டுவர வேண்டும். பார்க்கவே முடியாத போது கைது செய்வதை பற்றி கவலை கொள்ளத்தேவையில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:48, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

தற்காலிக நீக்கம் சரியான தீர்வு. இங்கு தீவிரமாக பங்களிக்கும் இலங்கை வாழ் நண்பர்களின் நலத்தினை கவனத்தில் கொண்டே இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்பதை விமர்சிக்கும் நண்பர் புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் வந்து நண்பர்கள் பயத்திலிருந்து விடுபட காலம் வழிவகுக்கும், அதுவரை முதற்பக்கத்தில் இயக்கத்தின் செய்திகளும், கட்டுரைகளும் தொகுக்கப்படும் போது என்ன வழமைகளைப் பின்பற்ற வேண்டுமென ஒரு குறிப்பினை இடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:45, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

இலங்கை நிலைப்பாடுபற்றி பிழையான கருத்துக்களை இங்கு பதிய வேண்டாம். பயம் என்று கருதுபவர்கள் இலங்கை அரசை மறைமுகமாக "பயங்கர" அரசாக காட்டுவதாகவும் கருத வேண்டியுள்ளது. தயவு செய்து "அதீத" கருத்துக்களைத் தவிருங்கள். --AntonTalk 18:17, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

வலைத்தளத்தைப் பார்வையிட்டாலே கைது செய்து விடுவார்கள். இந்த வாசகம் அச்சத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:24, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

எனக்குத் தெரிஞ்சு தடை செய்யப்பட்டத் தளங்களை ஈழத்தில் திறக்க முடியாது என நினைக்கிறேன். தளத்தில் உள்ள வீடியோவை வேறு நாட்டில் வேறு எதிலாவது பதிந்து ஈழத்தில் போய் பார்த்தால் தான் கைது செய்வார்கள் எனத் தெரிகிறது. வேறு தளங்களும் தடை செய்யப்பட்ட வீடியோவை நகலெடுத்து புலக்கத்தில் விடும். அதைப் பார்த்தாலும் கைது செய்யப்படுவார்கள். தளத்தின் சின்னத்தை இங்கு பார்த்து ஈழத்தில் திறந்தாலும் அது திறக்காது என நினைக்கிறேன். இருந்தாலும் உறுதிப்படுத்தல் வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இது போன்று சிக்கல் ஏதும் வந்துள்ளதா எனக் கேட்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:34, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

ஜெகதீஸ்வரன், ஆனாலும் அது மிகைப்படுத்தல். நானும் இலங்கையில்தான் இருக்கிறேன். இந்த விடயத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்புபடுத்தியது தவறு. ஆ.வி.யில் பல மடங்கு தகவல்கள் உள்ளனவே? மேலும், விக்கிப்பீடியா புலிகளின் பிரச்சார ஊடகம் அல்லவே? --AntonTalk 18:43, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

ஒருவேளை கிருத்திகன் அக்கறையில் சொல்லி இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:59, 16 மே 2014 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியாவிலிருந்து விலக வேண்டிய அளவுக்கா? --AntonTalk 04:06, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

தென்காசி சுப்பிரமணியன், சிக்கல் உங்கள் புரிதலில் இருந்து வேறுபட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவையோ வேறு எந்த தடை செய்யப்பட்ட தளத்தைப் பார்வையிடுவது பற்றியோ கிருத்திகன் கூறவில்லை. விடுதலைப்புலி சின்னம் இருப்பதால் தமிழ் விக்கிப்பீடியா தடை செய்யப்படும் என்றும் சொல்லவில்லை. மாறாக, இச்சின்னம் இடம்பெற்றிருக்கும் தளத்தைப் பார்வையிடுவது ஒரு சிலருக்குப் பாதுகாப்பாக உணரப்படவில்லை என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதை நேரடியாக சட்ட நோக்கில் பார்க்காமல் நடைமுறை நோக்கில் பார்க்க வேண்டியுள்ளது. இக்கவலையைப் பகிர்ந்துள்ள பலரும் பள்ளி மாணவர்கள். வளரிளம் பருவத்தினர். பல பத்தாண்டு கால தொடர் போர் தற்போது வளரும் தலைமுறையினர் மேல் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்ற நோக்கில் அணுக வேண்டும். இந்தியாவில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு அரசியல்வாதியினைப் பற்றி சமூக ஊடகத்தில் எழுதியதற்கு ஒருவர் கைது செய்யப்பட்டால் அது சமூக ஊடகம் முழுமையிலும் பீதி எழுப்புவுது கண்கூடு. இதே போன்ற ஒரு செய்தியை ஆதவன் மேலே பகிர்ந்துள்ளார்.

விக்கிப்பீடியாவை யார் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை விக்கிப்பீடியா யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், விக்கிப்பீடியாவை இலங்கையில் இருந்து எந்தெந்த IP முகவரிகள் அணுகுகின்றன என்று கண்காணிப்பது ஒன்றும் அரசுக்கு இயலாத காரியம் அன்று. தமிழ் விக்கிப்பீடியாவில் விடுதலைப்புலிகள் பற்றிய பரவலான செய்திகளும் அரச உரிமை மீறல்கள் பற்றிய தகவலும் இடம்பெற்றிருப்பதால் இத்தளம் அரசின் கண்காணிப்பில் இருந்தாலும் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், இதற்காக நாம் கலைக்களஞ்சியப் பணியைத் தணிக்கை செய்ய இயலாது என்பதால் இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

இப்போது ஒரு மாணவர் வீட்டில் இருந்தோ பள்ளி நூலகத்தில் இருந்தோ விக்கிப்பீடியாவைத் தொகுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இயக்கத்தின் மீது மாற்றுக் கருத்து உள்ள பெற்றோரோ தமிழ் தெரியாத சிங்களர்களோ விடுதலைப் புலி சின்னம் உள்ள தளத்தில் இவர்களுக்கு என்ன வேலை என்று எண்ண வாய்ப்பு இல்லாமல் இல்லை. அதற்கு அடுத்து அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை எல்லாம் விளக்கிக் கூறி எடுத்துச் சொல்லி பரிச்சினை வந்தால் எதிர்கொள்ளும் வயதும் பின்னணியும் இல்லை. இந்த இடத்திலேயே "செய்தி இருக்கட்டும், ஆனால் படம் வேண்டாம்" என்ற கோரிக்கை புதிய புரிதலைத் தருகிறது. சிக்கலுக்குரிய குறிப்பிட்ட பக்கங்களை இவர்கள் விரும்பி திறக்காமல் இருக்க முடியும். ஆனால், முதற்பக்கத்தில் அந்தத் தெரிவில்லை என்கிற போது, படங்கள் மற்றவர் கண்ணில் சட்டென படும் என்ற அடிப்படையிலும் அச்சத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

என்னுடைய பரிந்துரை:

  • இலங்கையில் இவ்வாறான அரச நடவடிக்கைகள் ஏதும் இருந்திருந்தால் அவற்றின் உண்மைத் தன்மை, சட்டப் பின்னணி ஆகியவற்றை அறிந்து கொள்ளல். உண்மையிலேயே இயக்கப் படம் உள்ள தளத்தைப் பார்ப்பதால் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், வழமை போல் நாம் படங்களைக் காட்சிப்படுத்தலாம்.
  • அச்சுறுத்தல் உண்டு என்றால், மற்ற விக்கிப்பீடியாக்களில் இது போன்ற சூழலை எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பல விக்கிப்பீடியாக்களில் பாலியல் தொடர்பான படங்களை முதற்பக்கத்தில் காட்டுவதில்லை என்ற எழுதப்படாத நிலைப்பாடு உண்டு. பாலியலையும் போராளி இயக்கங்களையும் தொடர்பு படுத்துவதாக கருத வேண்டாம். தணிக்கை என்று கருதப்பட்டாலும் கூட நடைமுறை காரணங்களுக்காக சில உள்ளடக்கங்களை காட்சிப்படுத்துவதில் சில நிலைப்பாடுகளை எடுப்பதுண்டு என்பதற்காக மட்டும் சொல்கிறேன்.

பயனர்:Sundar, பயனர்:Sodabottle - இது போன்ற சிக்கல் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுவதுண்டா? எப்படி எதிர்கொள்கிறார்கள்? பன்னாட்டுத் திட்டத்தில் ஒரு சில நாடுகளின் தணிக்கை பிரச்சினையாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டுக்கு, சீனாவில் உள்ள விக்கிப்பீடியா தணிக்கை. ஆனால், தமிழ் போன்று குறுகிய நிலப்பரப்புகளில் செயல்படும் திட்டங்களல் இதனை எப்படி எதிர்கொள்வது?--இரவி (பேச்சு) 06:01, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

இரவி, உங்கள் பரிந்துரை ஒரு சனநாயக நாட்டுக்கு ஒத்து வரலாம். ஆனால், சட்டம் ஒழுங்கில்லாத நாட்டுக்கு எவ்வளவு தூரம் பொருந்தும் எனத் தெரியவில்லை. ஒருவரைக் கைது செய்த பின்னர் நீங்கள் சட்டம் பற்றி அங்கு பேசிக் கொண்டிருக்க முடியாது. அதிகம் கூற விரும்பவில்லை. ஆனாலும், ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்த சுமுக நிலை வேறு, இப்போதுள்ள நிலை வேறு என்றே அறிய முடிகிறது.--Kanags \உரையாடுக 06:10, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

Kanags, நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தல் உண்டு என்று கருத இடம் இருக்குமானால், தமிழ் விக்கிப்பீடியா பயனர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டையே ஆதரிப்பேன். ஏனெனில், முதலில் தமிழ் விக்கிப்பீடியா தளம் இருக்க வேண்டும். அதில் எழுதவும் படிக்கவும் இலங்கையில் பயனர்கள் வேண்டும். அதற்குப் பிறகே என்ன எழுதுவது, எதைக் காட்சிப்படுத்துவது என்ற கேள்வியெல்லாம்.--இரவி (பேச்சு) 06:14, 17 மே 2014 (UTC)[பதில் அளி]


மன்னிக்கனும் நானும் ஒரு இலங்கையன் (அதிபர் மஹித்த ராஜபக்ச,விடுதலைப் புலிகளின் சின்னம்) இரண்டையும் காட்சிப்படுத்தியது நான் இந்த விடயத்தில் இலங்கை அரசையும் தமிழ் விக்கிப்பீடியாவை தொடர்புபடுத்தியது தவறு செய்திகள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு ஏற்பவே படத்துடன் 100% உண்மை யான செய்தியை எழுதினேன்,எழுதுவேன் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 07:56, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

இந்த வலைத்தளங்களை பார்க்கும் அனைவரும் கைது செய்யப்படுவர்களா ?

--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 07:56, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

இஜாசு, உங்கள் செய்தியில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனாலும், இலங்கையில் பல செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.. அங்குள்ள பயனர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். நாம் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எவற்றையும் எழுதலாம். அது அங்குள்ளவர்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இரண்டு மூன்று பயனர்கள் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக செல்பேசிகளில் இச்செய்திகளைப் படிப்பவர்களுக்கு இது தொல்லை தரும். இவ்வாறான பல சம்பவங்கள் அண்மைக் காலத்தில் இடம்பெற்றுள்ளன.--Kanags \உரையாடுக 08:08, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

ஆமாம், இயாசு அவர்களே ஒரு செயலைச் செய்யும் முன் நமக்கு ஏன் வீண் வம்பு என்னும் வாசகத்தை உங்கள் மனதில் நிலைநிறுத்திபாருங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற வாசகமே. கனக்ஸ் ஐயா சொன்னது போல் இலங்கையில் உள்ளவர்களை பாதிக்காமல் இருக்கவேண்டும். குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்களை. புலிகள் அமைப்பின் படிமத்தை செய்திகள் பக்கத்தில் இட்டவர் முதலேயே இடாமல் இருந்திருதால் இப்படிப் பெரிய உரையாடல் எல்லாம் நடந்திருக்கத் தேவையில்லை. Actually we are wasting our time in this conversation, mean time we can write a featured article also --யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:50, 17 மே 2014 (UTC)[பதில் அளி]

மயூரன், கோபி, உமாபதி, சஞ்சீவி சிவகுமார், மயூரேசன், மதனாகாரன் - உங்கள் பார்வையில் உள்ளூர் நிலவரம் என்ன? தொடர்பான செய்திக் குறிப்புகள் உண்டா? இவ்விசயத்தில் உங்கள் பரிந்துரையைத் தர முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 14:55, 20 மே 2014 (UTC)[பதில் அளி]

அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள் எல்லாம் சட்டரீதியான அடிப்படையில் மட்டும் அமைவதாயில்லை. இலங்கையிலும் மட்டக்களப்பு, வன்னி. யாழ்ப்பாணம் எங்கனும் ஒரே நடைமுறை பின்பற்றப்படுவதும் இல்லை. இத்தகைய வெளிப்படுத்தல்களில் அச்சுறுத்தல் அல்லது மறைமுகமாக பாதிக்கக்கூடிய இடர் உள்ளது தான். அதற்காக ஒரு கலைக்களஞ்சியம் தன்னைத் தானே தணிக்கை செய்து கொள்வது ஏற்புடையதல்ல. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:55, 21 மே 2014 (UTC)[பதில் அளி]

கருத்துச் சுதந்திரமும் பாதுகாப்பு நடவடிக்கையும்[தொகு]

மேலே நிகழ்கின்ற கருத்துப் பரிமாற்றத்திலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்பது ஒரு பக்கம்; அதே நேரத்தில் "நாட்டுப் பாதுகாப்பு" என்ற பெயரில் விசாரணையும் அச்சுறுத்தலும் நிகழ்வது மறுபக்கம். இந்த நிலையில், மேலே இரவியும் வேறு பல பயனர்களும் கூறுவது போன்று, "தற்கால" நடவடிக்கையாக சர்ச்சைக்குரிய சின்னங்களைத் தவிர்ப்பது நல்லது என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 18:29, 19 மே 2014 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:04, 20 மே 2014 (UTC)[பதில் அளி]

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். - திருக்குறள் தற்போதைய சூழலில் சின்னம் காட்டப்படுவது தவிர்க்கப்படுவது நல்லது. --112.134.209.252 04:53, 23 மே 2014 (UTC)[பதில் அளி]

தவறான முன் எடுத்துக்காட்டு[தொகு]

நாட்டு நிலவரங்களைக் காட்டி விக்கிப்பீடியா தன்னை தணிக்கை செய்து கொள்வது இல்லை. இதனால் விக்கிப்பீடியா சில நாடுகளில் தடை செய்யப்பட்டு இருப்பதும் யாவரும் அறிந்ததே. அடுத்தது என்ன ஒரு குழுவினர் மனம் வருந்தினால், அந்தப் படத்தைத் தவிர்க்கலாமா? --Natkeeran (பேச்சு) 18:59, 20 மே 2014 (UTC)[பதில் அளி]

எனக்கும் இத்தணிக்கையில் உடன்பாடு இல்லை.

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 20:12, 20 மே 2014 (UTC)[பதில் அளி]

//இதனால் விக்கிப்பீடியா சில நாடுகளில் தடை செய்யப்பட்டு இருப்பதும் யாவரும் அறிந்ததே.//

எனக்கு இது தெரியாது. எந்தெந்த நாடுகளில் விக்கிப்பீடியா தடை செய்யப்பட்டுள்ளது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:00, 20 மே 2014 (UTC)[பதில் அளி]

தீர்வு[தொகு]

மேற்கண்ட உரையாடலில் இருந்து தெரிய வருவது:

  1. இயக்கத்தின் சின்னம் முதற்பக்கத்தில் இடம்பெறுவது இலங்கையில் வாழும் சில பயனர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வைத் தருகிறது. ஆனால், நடுநிலையான செய்திப்பக்கம் ஒன்றைப் பார்த்தாலே பயனர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நம்பகத்தகுந்த செய்தி ஆதாரங்கள் இது வரை முன்வைக்கப்படவில்லை. அதே வேளை, சட்டத்தின் அடிப்படையிலும் வெளிப்படையாகவுமே அச்சுறுத்தல் எழுவதில்லை என்பதையும் பல தரப்பட்ட பயனர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
  2. விக்கிப்பீடியா தளத்துக்கே தடை என்றாலும் விக்கிப்பீடியா தன்னைத் தணிக்கை செய்து கொள்வதில்லை. அவ்வாறு செய்வது அதன் அடிப்படை கொள்கைகளுக்கும் நோக்கத்துக்கும் முரணானது என்பதையும் பலரும் சுட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் ஒரே தீர்வு தான் புலப்படுகிறது:

முதற்பக்க இற்றையில் ஈடுபடுவோர் இத்தகைய ஒரு பாதுகாப்பற்ற உணர்வுக்கு இடம் இருப்பதை உள்வாங்கி அதற்கேற்ப தகவல் / படங்களை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். இது தொடர்பான வேண்டுகோள் அறிவிப்புகள் முதற்பக்க இற்றை தொடர்பான பக்கங்களில் இடப்படும். எனினும், இது ஒரு வேண்டுகோளாக மட்டுமே இருக்கும். இவ்வேண்டுகோளை ஏற்பதும் மறுப்பதும் தனிப்பட்ட பயனர் முடிவாக இருக்கும். தனிப்பட்ட பயனர்களின் மதிப்பீட்டின் படி இற்றைப்படுத்தப்படும் உள்ளடக்கத்தை இக்காரணத்தைக் காட்டி தணிக்கை செய்ய கோரக்கூடாது. பெரும்பாலான முதற்பக்க உள்ளடக்கங்கள் முன்கூட்டியே பரிந்துரைகள் மூலம் முடிவாவதாலும் இற்றைப்படுத்தல் நிருவாகிகள் பொறுப்பில் இருப்பதாலும் இத்தகைய பாதுகாப்பற்ற உணர்வைத் தரக்கூடிய உள்ளடக்கங்கள் காட்சிப்படுத்தக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும். ஒரு சிலரின் பாதுகாப்பற்ற உணர்வுக்கு மதிப்பு கொடுத்து விக்கிச்சமூகத்தை அரவணைக்கும் அதே வேளையில், விக்கிப்பீடியாவின் அடிப்படை கொள்கைகளுக்கும் நோக்கத்துக்கும் முரண்படாமல் செயற்பட இந்த அணுகுமுறை உதவலாம்.

மேற்கண்ட அணுகுமுறைக்கு மாற்றுக் கருத்துகள், மாற்றுப் பரிந்துரைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:28, 27 மே 2014 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:27, 3 சூன் 2014 (UTC)[பதில் அளி]

மேற்கண்ட உரையாடலை அடுத்து எழுந்த புரிந்துணர்வை முறையான கொள்கையாக விக்கிப்பீடியா:தணிக்கை பக்கத்தில் இட்டுள்ளேன். தொடர்புடைய வேண்டுகோள் இப்பேச்சுப் பக்கத்தின் தொடக்கத்தில் இடப்படும்.--இரவி (பேச்சு) 11:35, 5 சூன் 2014 (UTC)[பதில் அளி]

போராளிகளா??[தொகு]

பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் இணைந்து நடத்தும் சார்ப்-இ-அஸ்ப் எனும் நடவடிக்கை அந்நாட்டு போராளிகளை எதிர்த்தா? இவ்வாறு எந்தவொரு செய்தி ஊடகமும் தகவல் தந்ததாக தெரியவில்லை! உலகமே அறியும் அவர்கள் போராளிகள் அல்ல, தீவிரவாதிகள் என்று. பின்பு தமிழ் விக்கிப்பீடியா மட்டும் ஏன் போராளிகள் என்று குறிப்பிட வேண்டும் ??-Vatsan34 (பேச்சு) 07:02, 28 சூன் 2014 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியா நடுநிலையானது. இவர்களைப் பல ஆங்கில ஊடகங்கள் militants என்று தான் குறிப்பிடுகின்றன.--Kanags \உரையாடுக 07:06, 28 சூன் 2014 (UTC)[பதில் அளி]
militant என்பதும் போராளி ஆகிவிட்டதா? அது சரி. ;) நானும் நடுநிலை விரும்பி தான். :) - Vatsan34 (பேச்சு) 07:15, 28 சூன் 2014 (UTC)[பதில் அளி]
வேறு நல்ல தமிழ்ச் சொற்கள் இருந்தால் கூறுங்கள். மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 07:20, 28 சூன் 2014 (UTC)[பதில் அளி]
“இயக்கத்தினர்” என்று பயன்படுத்தலாம். “தீவிரவாதி” என்பதை கெட்ட வார்த்தையாக ஊடகங்கள் மாற்றி விட்டதால் (ஒரு காலத்தில் சாதாரணமாகப் பயன்பட்டது. இப்போது இப்படி ஆக்கிவிட்டார்கள்). “போராளி” என்பதற்கு நாயகத்தன்மையும் ஏற்றப்பட்டு விட்டது. எனவே மொன்னையாக “இயக்கத்தினர்” ஆக்கி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:23, 29 சூன் 2014 (UTC)[பதில் அளி]
கிளர்ச்சியாளர்கள் ?--மணியன் (பேச்சு) 04:22, 30 சூன் 2014 (UTC)[பதில் அளி]
கிளர்ச்சியாளர்கள் பொருந்தவில்லை. பொதுவாக ஒரு அமைப்பினுள் உள்ள சிலர் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது கிளர்ச்சி எனலாம் என நினைக்கிறேன். கிழக்கு உக்ரைனில் போராடுபவர்களைக் கிளர்ச்சியாளர்கள் என அழைக்கலாம். அவர்களுக்கு ஏதும் அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அங்கிருந்த உருசிய-சார்பு இராணுவத்தினரே கிளர்ந்தார்கள். தாலிபான்கள் போன்றவற்ரைக் குறிக்க பிபிசி உட்பட ஆங்கில ஊடகங்கள் militants என்பதையே பயன்படுத்துகின்றன. இவர்களைப் போராளிகள் என அழைப்பதே மிகப் பொருத்தமாக உள்ளது. ஆனாலும் இவர்களும் ஒரு வகைத் தீவிரவாதிகளே. அதில் ஐயமில்லை.--Kanags \உரையாடுக 08:36, 30 சூன் 2014 (UTC)[பதில் அளி]

இதே போல் தேசியம் பேசுபவர்களை சில ஊடகங்கள் தேசியவாத இயக்கங்கள் என்றும் சில ஊடகங்கள் பிரிவினை வாத இயக்கங்கள் என்றும் கூறுகின்றன. உதாரணத்துக்கு காலிஸ்தான் சீக்கியர்களை இந்தியா - பாக்கிஸ்தான் என பிரித்தது இந்தியா என்பதால் இந்தியாவை பிரிவிணை ஏறபடுத்திய அரசாங்கம் என்று அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். இதே போல் வங்காள தேசியம் பேசுவோரும் தமிழ்த்தேசியம் பேசுவோரும் கூட கூறுகிறார்கள். எனில் இவைகளை எப்படிக் கூறலாம்? நான் ஆங்கில விக்கியில் காலிஸ்தான் அமைப்பை தேசிய அமைப்பு என மாற்றினால் மீண்டும் இன்னொருவர் வந்து பிரிவினை அமைப்பு என்று மாற்றுகிறார். இதை ஆங்கிலத்திலும் உரையாட வேண்டும். அது என்ன தமிழருக்கு மட்டும் தேசியம்? காலிஸ்தான் பஞ்சாபியர்களுக்கு பிரிவிணை வாத பட்டம்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:46, 30 சூன் 2014 (UTC)[பதில் அளி]

ஐக்கிய அமெரிக்காவை சிலர் பயனக்கரவாத நாடு என்கிறார்கள். சிலர் ஒபாமாவை பயங்கரவாதி என்கிறார்கள். எனில் ஒபாமாவை பயங்கரவாத நாட்டின்பயங்கரவாதத் தலைவர் எனக் கூற முடியுமா? அதனால் இதில் சோடாபாட்டில் சொல்லும் முறையே சரியாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:55, 30 சூன் 2014 (UTC)[பதில் அளி]

militants (போராளி) என்றால் ஆயுதம் தாங்கி குழுக்கள் என்று பொருள்படும். பொதுவான பெயர். பயங்கரவாதி, தீவிரவாதி, புரட்சியாளர், கிளர்ச்சியாளர், கொள்கையாளர் போன்றவர்கள் ஆயுதம் தாங்கினால் கொடுக்கப்படும் பெயர். அவர்கள் எதுக்காக ஆயுதம் தாங்கினர் என்பது பார்ப்பவர் இடத்தில் இருந்தே வகைப்படுத்தப்படுத்தப்படுகிறது. பயங்கரவாதி, தீவிரவாதி, புரட்சியாளர், கிளர்ச்சியாளர், கொள்கையாளர் என இப்படி. போராளி என்றால் நல்லதுக்காக மட்டும் தான் போராட வேண்டும் என்றில்லையே? அதனால் போராளி என்பது சரியானதே. இயக்கத்தினர் என்பது ஆயுதம் தாங்காத இயக்கங்களுக்குக் கொடுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 30 சூன் 2014 (UTC)[பதில் அளி]

அனுமதிக்க வேண்டும்[தொகு]

வணக்கம் விக்கிப்பீடியா நிர்வாகிகளே வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் பக்கத்தை எனக்கு தொகுக்க அனுமதி வேண்டும் கடந்த 25 சூன் 2014‎ முதல் இன்று வரை இந்த பக்கம் தொகுக்கப்படவில்லை தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் காட்சியளிக்கும் இந்த வார்ப்புரு பழைய செய்திகளை காட்சி படுத்திகிறது நிருவாகிகளுக்கு என்று பூட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த வார்ப்புருவை மீண்டும் திறப்பதன் மூலம் மிக முக்கியமான செய்திகளை உடனடியாக த வி முதற்பக்கத்தில் சேர்க்க முடியும் நன்றி--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 00:19, 6 சூலை 2014 (UTC)[பதில் அளி]

இஜாசு, காப்பு மாற்றப்பட்டுள்ளது. முதற்பக்கக் காட்சிப்படுத்தல் என்பதால் மிகக் கவனமாக தேர்ந்தெடுத்த முக்கிய செய்திகளை மட்டுமே காட்சிப் படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:24, 6 சூலை 2014 (UTC)[பதில் அளி]
நன்றி திரு கனகரத்தினம் சிறீதரன் --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 01:37, 6 சூலை 2014 (UTC)[பதில் அளி]

செய்திகளின் முக்கியத்துவம்[தொகு]

மேற்கண்ட மூன்று செய்திகளும் ஒரு கலைக்களஞ்சியத்தின் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக தோன்றவில்லை. வழமையாக அன்றாட / உள்ளூர் செய்தித் தளங்களில் அடிபடும் செய்திகள் தாம். கூடுதலாக உலக, வரலாற்று முக்கியத்துவம் உள்ள செய்திகளை முதற்பக்கத்தில் காட்டலாம்.--இரவி (பேச்சு) 16:16, 12 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]

//கூடுதலாக உலக, வரலாற்று முக்கியத்துவம் உள்ள செய்திகளை முதற்பக்கத்தில் காட்டலாம்.//👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:14, 12 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]
ஓர் ஆர்வக் கோளாற்றில் நான் இற்றைப்படுத்திய செய்திகள் தாம் அவை. இனிமேல் கவனமாக இருக்கிறேன். :) . நன்றி.--இரா.பாலா (பேச்சு) 02:29, 13 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]
சரி, இரா.பாலா . பி. பி. சி. தமிழ், சீனத் தமிழ் வானொலி, ஆத்திரேலியத் தமிழ் வானொலி முதலிய தளங்களைக் கவனிக்கலாம். ஆனால், இவற்றிலும் கூட அன்றாடச் செய்திகளை இற்றைப்படுத்துவார்கள். நாம் அவற்றிலும் ஒரு படி மேலே இருக்க வேண்டும் :) --இரவி (பேச்சு) 15:09, 16 செப்டம்பர் 2014 (UTC)[பதில் அளி]

தமிழக முதல்வர்[தொகு]

வணக்கம் . சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற// தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு// இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்று உள்ளது . அதை // தமிழக முன்னான் முதல்வர் //என்று மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்--Commons sibi (பேச்சு) 02:28, 18 அக்டோபர் 2014 (UTC)[பதில் அளி]

மாற்றியுள்ளேன். பிபிசியில் இருந்ததை அப்படியே தந்து விட்டேன்:).--Kanags \உரையாடுக 03:17, 18 அக்டோபர் 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--Commons sibi (பேச்சு) 15:14, 18 அக்டோபர் 2014 (UTC)[பதில் அளி]

வழமையான செய்திகள் முதற்பக்கத்தில் வேண்டுமா ?[தொகு]

இந்திய தொடருந்து அமைச்சர் தமது துறைக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக எனக்குத் தோன்றவில்லை. விக்கிசெய்திகளில் இடம் பெறலாம். ஆனால் இத்தகைய வழமையான செய்திகளை தமிழ் விக்கியின் முதற்பக்க வார்ப்புருவில் இடம் பெறுவதைத் தவிர்க்கலாமே.--மணியன் (பேச்சு) 06:27, 27 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:09, 27 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

நோபல் பரிசு...[தொகு]

நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதற்குப் பதிலாக அறிவிக்கப்பட்டது என எழுதலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 7 அக்டோபர் 2015 (UTC)[பதில் அளி]

ஆம் அறிவிப்பு தான் சரியானது.--Kanags \உரையாடுக 11:17, 7 அக்டோபர் 2015 (UTC)[பதில் அளி]

காத்தல் குறித்தான வேண்டுகோள்...[தொகு]

இந்தப் பக்கத்தை பெரும்பாலான நேரங்களில் நிர்வாகிகளே இற்றைப்படுத்துவதால், இந்தப் பக்கத்தினை காக்க பரிந்துரைக்கிறேன். இதன்மூலம் முறையற்ற மாற்றங்கள் முதற் பக்கத்தில் தெரிவதை தவிர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:42, 29 பெப்ரவரி 2016 (UTC)[பதில் அளி]

முதல் பக்கத்தில் அந்தப் பயனர் செய்தது மிகப் பெரிய விசமம். மதனாகரன் அப்பயனர் செய்த ஏனைய விசமத் தொகுப்புகளைக் கவனித்தவர் இதனைக் கவனிக்கத் தவறி விட்டார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்குப் பின்னரே திருத்தப்பட்டிருக்கிறது. இதனை நிருவாகிகள் மட்டும் தான் கவனித்துத் திருத்த வேண்டும் என்பதில்லை. ஏனைய பயனர்களும் அண்மைய மாற்றங்களை அடிக்கடிக் கவனிக்க வேண்டும். தங்கள் தங்கள் கட்டுரைகளை மட்டும் கவனித்தால் போதாது. நிருவாகிகளுக்காக மட்டும் என மாற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:34, 29 பெப்ரவரி 2016 (UTC)[பதில் அளி]
எப்படித் தான் தவறவிடப்பட்டதோ தெரியவில்லை. Face-sad.svg கண்டறிந்து சரிசெய்ததற்கு நன்றி செல்வசிவகுருநாதன். --மதனாகரன் (பேச்சு) 14:03, 29 பெப்ரவரி 2016 (UTC)[பதில் அளி]

எனது கருத்து...[தொகு]

தமிழ் இலக்கியத்திற்குப் பணியாற்றிய பீ. எம். புன்னியாமீன் அவர்களின் மறைவுச் செய்தியை இந்த வார்ப்புரு மூலமாக அறிவிக்கலாம் என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:14, 10 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]

Kanags, மணியன் கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 11 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]

உங்கள் கருத்தை கவனித்தேன். புன்னியாமீன் குறித்த கட்டுரை முதன்மை வெளியில் உள்ளதால்குறிப்பிடத்தக்க தன்மை உள்ளதாக, அவரது மறைவை செய்திகளில் வெளியிடலாம். நான் பரிந்துரைத்த முதற்பக்கத்திலுள்ள விக்கிப்பீடியர் அறிமுகப் பத்தியில் வெளியிட்டால், வருங்காலத்தில் செய்திகளில் இடம்பெறுமளவு குறிப்பிடத்தக்காரில்லா விக்கிப்பீடியர்களுக்கும் (இவ்வாறான நிகழ்வுகள் அருகியிருக்க இறைவனை இறைஞ்சுவோம்) ஒரு நெறிமுறையாக விளங்கும். மேலும் அவரளித்த பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தவிதமாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 11:37, 11 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 13:51, 11 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]

குறிப்பிடத்தக்க எழுத்தாளர் என்பதால், மறைவுச் செய்தியினை இந்த வார்ப்புரு வாயிலாக வெளியிட்டுள்ளேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:54, 11 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]

பொதுவான கருத்து: கட்டுரைக்கான குறிப்பிடத்தக்கமையும் முதற்பக்கச் செய்திகள் பக்கத்தில் எத்தகைய செய்திகளை இடுவது என்பதற்கான குறிப்பிடத்தக்கமையும் மாறுபடும். பார்க்க -

--இரவி (பேச்சு) 13:58, 11 மார்ச் 2016 (UTC)[பதில் அளி]

பி.எஸ்.எல்.வி - சி33 / ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி[தொகு]

பி.எஸ்.எல்.வி - சி33, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய செய்தியை முதல்பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 07:33, 29 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]

செய்தியை கீழே தாருங்கள். இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 09:19, 29 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]
இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் ஏழாவது மற்றும் கடைசி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி-ஐ பி.எஸ்.எல்.வி - சி33 ஏவுகலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
--சத்தியராஜ் (பேச்சு) 11:53, 29 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]
நன்றி. கட்டுரைகளையும் இற்றைப்படுத்தி விடுங்கள்.--Kanags \உரையாடுக 12:05, 29 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]
நன்றி :) --சத்தியராஜ் (பேச்சு) 12:07, 29 ஏப்ரல் 2016 (UTC)[பதில் அளி]

செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை[தொகு]

ஆ.வியில் செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை கட்டுரை இருந்தால் மட்டுமே அதனை இப்பகுதியில் குறிப்பிடுவார்கள். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. எ.கா: மேத்யூ சூறாவளியின் காரணமாக எயிட்டியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் மேத்யூ சூறாவளி (en:Hurricane Matthew) கட்டுரை த.வி.யில் இல்லை. செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை இல்லாவிட்டாலும் இங்கு குறிப்பிடலாம் என்றால், பல விடயங்களை இற்றை செய்யலாமே? தெளிவுபடுத்தல் தேவைப்படுகின்றது. --AntanO 03:01, 7 அக்டோபர் 2016 (UTC)[பதில் அளி]

@Kanags: கவனியுங்கள். --AntanO 03:06, 7 அக்டோபர் 2016 (UTC)[பதில் அளி]
இதுவரை இவ்வாறான கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனாலும், இனிமேல் செய்தியுடன் தொடர்புடைய கட்டுரை இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:50, 7 அக்டோபர் 2016 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--AntanO 11:30, 7 அக்டோபர் 2016 (UTC)[பதில் அளி]

இளையராஜா குறித்த செய்தி[தொகு]

@AntanO: இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருது குறித்த தகவல், அவரைப் பற்றிய கட்டுரையில் தற்போது மேற்கோளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியை இப்போது நான் இடலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 26 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

மா. செல்வசிவகுருநாதன், செய்தி குறித்த ஒரு தனிக்கட்டுரை இருக்க வேண்டும் என அன்ரன் விரும்புகிறார். அவ்வாறுதான் ஆங்கில விக்கியில் விதிகள் உள்ளன என அவர் கூறியுள்ளார். இளையராஜாவிற்கு விருது கிடைத்ததாக ஒரு மூன்று-வரிக் குறுங்கட்டுரை ஒன்றை எழுதி அதனை முதற்பக்கத்தில் இணைத்து விடுங்கள். எருசலேம் செய்தி முன்னிலையில் எப்போதும் இருக்கும்.--Kanags (பேச்சு) 07:06, 26 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

நன்றி, ஐயா. ஆனால் இது குறித்து அன்ரனின் பதிலுக்காக காத்திருக்கிறேன் (காத்திருப்பேன்!). —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:29, 26 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

பத்ம விபூசண் அல்லது en:List of Padma Vibhushan award recipients என்பதற்கான தமிழ் கட்டுரை இற்றைப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இளையராஜா கட்டுரை இற்றைப்படுத்தப்பட்டிருப்பது, விருதின் தன்மை மற்றும் குறித்த நபருக்கு தமிழ் சூழலில் உள்ள பிரபலம் என்பதற்கான ஏற்றுக் கொள்ளலாம். --AntanO (பேச்சு) 02:17, 27 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

@AntanO: பத்ம விபூசண் எனும் கட்டுரையிலுள்ள பட்டியல் தற்போது மேற்கோளுடன் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. செய்தியை இப்போது இடுவதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:49, 27 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--AntanO (பேச்சு) 19:49, 27 சனவரி 2018 (UTC)[பதில் அளி]

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்[தொகு]

@Kanags: இக்கட்டுரையில் மேற்கோள்கள் ஏதும் இல்லாததால், உள்ளிணைப்பினை தராமல் இருந்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:45, 8 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

அண்மைய இறப்பு[தொகு]

விக்கிப்பீடியா:செய்திகளில் - இங்கு எவ்வாறான அண்மைய இறப்பு நிகழ்வுகளை காட்சிப்படுத்தலாம் என கலந்துரையாடவும். அல்லது செய்திகள் பகுதி மரண அறிவித்தல் செய்தி போன்றுதான் தென்படும். நன்றி. --AntanO (பேச்சு) 01:57, 27 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

@AntanO: தேவையற்ற, பொருத்தமற்ற கருத்துகளை தவிர்க்கவும். பிறரின் பங்களிப்பை எள்ளி, நகையாடுதலை இந்தத் தளத்தில் செய்ய வேண்டாம். நியாயப்படி, உரையாடிவிட்டுதான் மாற்றத்தை நீங்கள் செய்திருக்க வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:36, 27 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
எது தேவையற்ற, பொருத்தமற்ற கருத்து எனவும், பிறரின் பங்களிப்பை எள்ளி நகையாடுதல் என்பதை தெளிவாகவும் குறிப்பிடவும். உரையாடிவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இங்கில்லை. விக்கிப்பீடியா:செய்திகளில் என்ற வழிகாட்டல் பக்கம் இருக்க, அதற்கு மாறாக ஒன்றை காட்சிப்படுத்தும்போது உரையாடிவிட்டுச் செய்திருக்கலாம். --AntanO (பேச்சு) 00:26, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
1. இந்தத் தலைப்பின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள உங்களின் உரையையே தேவையற்ற, பொருத்தமற்ற, எள்ளி நகையாடுதல் எனக் குறிப்பிட்டேன். தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க பாடகி ஒருவர் காலமான தகவல் தலைப்புச் செய்திகளில் எழுதப்பட்டால்... அது மரண அறிவித்தாலா? ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீதேவி ஆகியோர் காலமான தகவல்கள் எந்த வகை?
2. விக்கிப்பீடியா:செய்திகளில் உங்களால் சேர்க்கப்பட்ட புதிய செயல்முறைகள்/வழிமுறைகள் குறித்து எனக்குத் தெரியாது; அதனை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நீங்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் நான் கூறவில்லை. ஆனால் குறைந்தபட்சம் 'புதிய செயல்முறைகள்/வழிமுறைகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று இங்கு குறிப்பிடுவதுதானே முறை. அதனை விடுத்து இன்னொரு பங்களிப்பாளரை நகைத்தல்?
3. ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீதேவி ஆகியோர் அவரவர் துறையில் சாதனையாளர்கள். எம். எஸ். இராஜேஸ்வரி அவரின் துறையில் சாதனையாளர்.
4. அடிப்படை அறிவு கொண்ட பலரும் இங்கு பங்களிக்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். பகையுணர்ச்சியும் காட்ட வேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:23, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

எனது கருத்துத் தெரிவித்தலுக்கு எள்ளி நகையாடல் என வியாக்கியானம் செய்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. எதுவுமே பேசக்கூடாது, கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறீர்களா? எனக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. எது புலப்படுகிறதோ அதைத்தான் சொல்ல முடியும். ஆரம்பத்திலேயே இணைப்பைக் கொடுத்துத்தான் பேச்சை ஆரம்பித்தேன். மேலும், 7 அக்டோபர் 2016 இல் இது தொடர்பில் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இன்றை செய்பவர் அதனைக் கவனித்திருக்க வேண்டும். மேலும், வழிகாட்டல் பக்கம் தொடர்பில் ஆலமரத்தடியிலும் பதிவு செய்திருந்தேன். இத்தொகுப்பில் ஏ. ஈ. மனோகரன் இறப்பை செய்தியை "அண்மைய இறப்பு" பகுதியில் இணைத்த நீங்கள் ஏன் மற்றவர்களின் செய்தியை பிரதான பகுதிக்கு நகர்த்தினீர்கள் என்று தெரியாது. //அடிப்படை அறிவு கொண்ட பலரும் இங்கு பங்களிக்கிறார்கள் என்பதனை மறக்க வேண்டாம். பகையுணர்ச்சியும் காட்ட வேண்டாம்.// இதற்கு எனக்கு விளக்கம் தெரியாது. ஆனால், ஏதோ ஒரு பகையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை மட்டும் உணர முடிகிறது. மேலும், நீங்கள் எள்ளி நகையாடுகிறீர்கள் எனவும் குறிப்பிட இவ்வாக்கியத்தில் இடம் உள்ளதையும் கவனியுங்கள். --AntanO (பேச்சு) 02:50, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

1. எதுவும் பேசக் கூடாது; கருத்துத் தெரிவிக்கக் கூடாது என நான் எதிர்பார்க்கவில்லை. மற்ற பயனர்களுக்கு முறையாக தெரிவியுங்கள் என்றுதான் கூறுகிறேன். இதுதான் எனது நடை என நீங்கள் தெரிவித்ததால், இனி இது குறித்து நான் பொருட்படுத்தப் போவதில்லை.
2. புதிய செயல்முறைகள்/வழிமுறைகளை நான் கவனிக்கவில்லை என ஏற்கனவே ஒத்துக் கொண்டேன். இது குறித்து உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் நான் வைக்கவில்லை. (இவை குறித்து நான் வேறுபடுகிறேன் என்பது வேறு விசயம். சுய சிந்தனைக்குப் பிறகு எனது கருத்துகளை அங்கு பதிவேன்)
3. நீங்கள் குறிப்பிட்டுள்ள எனது முந்தையத் தொகுப்பில், வேறு எந்தச் செய்தியையும் நான் பிரதான பகுதிக்கு நகர்த்தவில்லை. மீண்டும் கவனித்தால் தெரிந்து கொள்ளலாம். அவரின் மறைவு குறித்த செய்தியை 'அண்மைய இறப்பு' பகுதியில் மட்டும் இணைத்ததற்கு எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை. அப்போது போதிய நேரம் இல்லாமல் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
4. 'மற்றப் பயனர்களும் அடிப்படை அறிவுடன் பங்களிப்பர் என்பதனை மறக்க வேண்டாம்' எனும் அர்த்தத்திலேயே குறிப்பிட்டேன். எள்ளுதல் எனது நோக்கமல்ல. நீங்கள் பகைமை காட்டுவதாகவும் நான் உணர்கிறேன்.
5. ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீதேவி ஆகியோர் காலமான தகவல்கள் செய்திகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்தான எனது கேள்விக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

பிறவற்றைத் தவிர்த்து 5 வது விடயத்திற்கான பதில். en:WP:ITNRD - இந்த அடிப்படையில். மேலும், இது தவிர்க்கப்படலாம் என எதிர்பார்த்தேன். நடைபெறாததால் கருத்திட வேண்டியதாயிற்று. மாற்றக்கருத்துக்கள் இருந்தால், en:Wikipedia:In the news/Candidates இவ்வாறு ஒரு முறையினை அறிமுகப்படுத்தலாம் அல்லது இணக்க முடிவுடன் வழிகாட்டலில் திருத்தம் மேற்கொள்ளலாம். --AntanO (பேச்சு) 08:03, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

எனது முந்தையக் கருத்துகளில் சிலவற்றை தவிர்ப்பது உங்களின் உரிமை. இத்தொகுப்பில் நான் செய்யாத ஒன்றை செய்ததாக தெரிவித்த உங்களின் கருத்தை திரும்பப் பெறவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:46, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
இந்தத் தொகுப்பை யார் செய்தது? Selvasivagurunathan m என்ற கணக்கிற்குச் சொந்தக்காரர் யார்? --AntanO (பேச்சு) 20:00, 28 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
புரியவில்லை? எனது முந்தையத் தொகுப்பில், எவர்களின் அல்லது எந்தச் செய்திகளை பிரதான பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்? தவறான குற்றச்சாட்டை திரும்பப் பெறவும்.—-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:47, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
ஆரம்ப முதல் மீண்டும் வாசித்து விளங்குக. இதற்கு மேல் விளக்கி நேரத்தை வீணடிக்க முடியாது. --AntanO (பேச்சு) 04:15, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
விளக்கம் எனக்குத் தேவையில்லை. ஒருவரின் உரையையே புரிந்துகொள்ளாதவரிடமும், தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவரிடமும், 'உரையாடிவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இங்கில்லை' என்பவரிடமும் உரையாட எனக்கு நேரமில்லை. எள்ளி நகையாடுதல், தவறான குற்றச்சாட்டுகளை வைத்தல் ஆகியன என்னிடம் வேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:39, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
வம்பிக்கிழுக்கும் செயற்பாடுகள் என்னிடம் வேண்டாம்.--AntanO (பேச்சு) 04:47, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
இறுதியாக... - இன்னொரு பயனரின் பங்களிப்பை நகையாடியது யார்? வம்பிழுக்கும் செயல்களை செய்வது யார்? தன் தவறை மறைத்து, உரையாடலை திசை திருப்புவது யார்? என்பனவற்றை விக்கிச் சமூகம் அறியும். மேற்கொண்டு என் பங்களிப்பானது பகைமை உணர்வுடன் கையாளப்பட்டால், உரிய இடத்தில் முறையாக பதிவுசெய்வேன். ஆதிக்கச் செயல்பாடுகளை அரங்கேற்றும் தளம் இதுவன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]
எனது பங்களிப்பிலும் பகையுணர்வுடன் செயற்பட்டால், நான் பேசாமல் இருக்கப் போவதில்லை. சிறு விடயத்தை பெரிதுபடுத்துவது யார் என்பதையும், ஏரணச் சுழற்சியில் உரையாடுவதையும் விக்கிச் சமூகம் கவனித்திருக்கும் என நினைக்கிறேன். முறையாக பதிவுசெய்வதும், செய்யாததும் அவரவர் விருப்பம். எனக்கும் பதில் அளிக்கவும், முறையிடவும் இடமுள்ளதையும் கவனிக்க. யாரும் இங்கு ஆதிக்கம் செலுத்துவதில்லை. யார் ஆதிக்க செயற்பாடு செய்வது என முறையாகப் பதில் அளிக்கவும். இவ்வுரையாடல் இப்பக்கத்திற்கு பொருத்தமற்று இருப்பதால், பதிலளிப்பதானால் உரிய இடத்தில் தொடரலாம். --AntanO (பேச்சு) 11:52, 29 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

மலேசியப் பொதுத் தேர்தல்[தொகு]

@Mdmahir:, @Kanags: செய்தியில் அறுதிப்பெரும்பான்மை என இருக்கிறது. அதாவது - Thumping Majaority. ஆனால் கட்டுரையில் சாதாரணப் பெரும்பான்மை என இருக்கிறது. சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 17 மே 2018 (UTC)[பதில் அளி]

அறுதிப்பெரும்பான்மை என்றால் என்ன என்பதை விளங்குவதைப் பொறுத்துள்ளது. absolute majority?? 112 இடங்கள் வென்றால் ஆட்சி அமைக்கலாம். கட்சி 113 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.--Kanags (பேச்சு) 09:00, 17 மே 2018 (UTC)[பதில் அளி]

கட்டுரையில் சாதாரண பெரும்பான்மை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குழப்பம் ஏற்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 17 மே 2018 (UTC)[பதில் அளி]

பரிந்துரை[தொகு]

@Kanags: பிற நிகழ்வுகள் பகுதியில் 2018 உலகக்கோப்பை காற்பந்து என்பதனை இட பரிந்துரை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:05, 8 சூன் 2018 (UTC)[பதில் அளி]

Yes check.svgY ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:18, 19 சூன் 2018 (UTC)[பதில் அளி]

பரிந்துரை[தொகு]

7 சனவரி 2019 - 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆசுதிரேலியாவில் துடுப்பாட்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது எனும் செய்தியினை இடுவதற்கு பரிந்துரைக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:55, 7 சனவரி 2019 (UTC)[பதில் அளி]

மாற்றுக் கருத்துகள் ஏதும் வராத நிலையில்... குறிப்பிடத்தக்க செய்தி என்பதாலும், செய்தி தொடர்பான கட்டுரை கலைகளஞ்சியத் தரத்தில் இருப்பதாலும் இந்தச் செய்தியினை இட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 10 சனவரி 2019 (UTC)[பதில் அளி]

பரிந்துரை[தொகு]

எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.--Commons sibi (பேச்சு) 10:07, 19 திசம்பர் 2019 (UTC)
நன்றி@Kanags:Yes check.svgY ஆயிற்று--Commons sibi (பேச்சு) 04:59, 23 திசம்பர் 2019 (UTC)[பதில் அளி]

அண்மைய இறப்பு பரிந்துரை[தொகு]

டேனியல் செல்வராஜ் , திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது .இவர் திசம்பர் 20 , 2019 அன்று இறந்தார் .

நன்றி@Kanags:Yes check.svgY ஆயிற்று

பரிந்துரை[தொகு]

2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஆசுக்கர் விருதினை பாங் சூன்-ஹோ இயக்கிய பாரசைட்டு வென்றது.--அஸ்வின் (பேச்சு) 17:31, 11 பெப்ரவரி 2020 (UTC)[பதில் அளி]

@Aswn: கட்டுரையில் மேற்கோள்கள் தரப்படவில்லை.--Kanags \உரையாடுக 07:01, 12 பெப்ரவரி 2020 (UTC)[பதில் அளி]
@Kanags: நான்கு கட்டுரைகளிலும் தேவையான மேற்கோள்கள் இணைத்தாயிற்று --அஸ்வின் (பேச்சு) 15:51, 12 பெப்ரவரி 2020 (UTC)[பதில் அளி]