வர்ஜூஸ்
வர்ஜூஸ் (Verjuice) என்பது பழுக்காத திராட்சை, நண்டு-ஆப்பிள்கள் அல்லது மற்ற புளிப்புப் பழங்களை அழுத்தி தயாரிக்கப்படும் அதிக அமிலத்தன்மை கொண்ட சாறு ஆகும்.[1] சில நேரங்களில் எலுமிச்சை அல்லது சிவந்த பழச்சாறு, மூலிகைகள் அல்லது நறுமணப்பொருள் சுவையை மாற்றும். இடைக்காலத்தில், இது மேற்கு ஐரோப்பா முழுவதும் சுவைச்சாறுகளில் ஒரு மூலப்பொருளாக, ஒரு சுவையூட்டியாக அல்லது தயாரிப்புகளில் பூச்சுகளை நீக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் இது இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
நவீன சமையல்காரர்கள் பழப்பச்சடி அலங்காரங்களில் மதுவை பச்சடியுடன் பரிமாறும் போது அமில மூலப்பொருளாக வர்ஜூஸைப் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது மது, காடி அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றுடன் "போட்டியிடாமல்" ஒப்பிடக்கூடிய புளிப்பு சுவை கூறுகளை வழங்குகின்றது.
வர்ஜூசிற்கு மத்தியகாலப் பிரெஞ்சு மொழியில் "பச்சை சாறி' என்று பொருள். அராபிய மொழியில் "ஹுஸ்ரூம் (حصرم)" என்று அழைக்கபட்டது: மேலும் இது சிரிய மற்றும் லெபனான் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நவீன மறுமலர்ச்சி
[தொகு]ஆத்திரேலிய சமையல்காரரான மகீ பியர் 1984 இல் வணிக ரீதியான தயாரிப்பைத் தொடங்கியபோது வர்ஜூஸைப் பிரபலப்படுத்தத் தொடங்கினார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oxford English Dictionary, 2nd ed. (1989)
- ↑ "Reviving a peasant tradition: Maggie Beer has resurrected verjuice", pp. 16–17, Food and Wine supplement, The Canberra Times, 22 February 2012
- ↑ Maggie's Verjuice Cookbook பரணிடப்பட்டது 2020-05-06 at the வந்தவழி இயந்திரம், Maggie Beer, Lantern, The Canberra Times Cuisine, 21 February 2012