புளியாரைக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/உரூமெக்சு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
புளியாரைக் கீரை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): உரூமெக்சு
இனம்: வார்ப்புரு:Taxonomy/உரூமெக்சுஉ. அசிட்டோசா
இருசொற் பெயரீடு
உர அசிட்டோசா
கார்ல் இலின்னேயசு
வேறு பெயர்கள் [1]
  • அசிட்டோசாஆகிரிசுட்டிசு Raf.
  • அசிட்டோசா ஆம்பிளெக்சிகவுலிசு Raf.
  • அசிட்டோசா அங்குசுட்டாட்டா Raf.
  • அசிட்டோசா பைடெந்துலா Raf.
  • அசிட்டோசா பான்டனோப்லுடோசா (Kalela) Holub
  • அசிட்டோசா கேசுட்டிஃபோலியா Schur
  • அசிட்டோசா கேசுட்டுலாட்டா Raf.
  • அசிட்டோசா மேக்னா Gilib.
  • அசிட்டோசாஆபிசினாலிசு Gueldenst. ex Ledeb.
  • அசிட்டோசா ஒலிட்டோரியா Raf.
  • அசிட்டோசா பிராட்டென்சிசு Garsault nom. inval.
  • அசிட்டோசா பிராட்டென்சிசு Mill.
  • அசிட்டோசா சுபல்பினா Schur
  • உரூமெக்சு பைஃபார்மிசு Lange
  • உரூமெக்சு பான்டனோப்லுடோசசு Kalela
பூக்கும் புளியாரைக் கீரை
முட்டை, குரோட்டன்களுடன் புளியாரைச் சாறு, போலந்து

பொதுப் புளியாரைக் கீரை (sorrel) அல்லது தோட்டப் புளியாரைக் கீரை (உரூமெக்சு அசிட்டோசா), அல்லது புளியாரை என்பது பாலிகொனேசியே குடும்பத்தில் அமைந்த ஆண்டு முழுவதும் வளரும் கீரைச்செடியாகும்.[சான்று தேவை] இது புல்வெளி வாழிடத்திலும் தோட்டத்திலும் வளரும் செடியாகும்.

வேறு பெயர்கள்[தொகு]

புளிக்கீரை, புளிச்சக்கீரை என்ற வேறு பெயர்களும் உண்டு.

விவரிப்பு[தொகு]

புளியாரைக் கீரை 60 செமீ உயரம் வரை ஆண்டு முழுவதும் வளரும் ஒல்லியான செடியாகும். இது தரையில் ஆழமாக ஊடுருவிச் செல்லும் வேரும் தண்டும் உண்தகு அரம்ப வடிவ விளிம்பு அமைந்த இலைகளும் கொண்டுள்ளது. இதன் கீரை பச்சையாக உண்ணும்போது புளிப்புச் சுவையுடன் இருக்கும். இதன் அடித்தண்டின் இலைகள் நீண்ட இலைக்காம்புடன் 7 முதல் 15 செமீ நீளம் கொண்டன. காம்புகள் படலவகை ocrea இணைந்து உருவாகிய உறையைக் கொண்டிருக்கும். நுனித்தண்டின் இலைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் காம்பின்றி அமையும். இது செம்பசுமை நிற முள் உள்ள பூங்கொத்துகளைக் கொண்டிருக்கும் spikes. இது இளவேனில் காலத்தில் ஊதா வண்னத்தில் பூக்கும்.[2] இது இருபாலின சூற்பையும் சூலகமும் அமைந்ததாகும்.[3]

இதன் இலைகள் வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி போன்ற செதிலிறக்கையினங்களாலும் நத்தைகளாலும் உண்ணப்படுகின்றன.[சான்று தேவை]

பரவல்[தொகு]

புளியாரைக் கீரை நடுவண் ஆசியாவின் சில பகுதிகளிலும் ஐரோப்பாவில் வடக்கு நடுத்தரைக்கடலின் கரைப்பகுதியில் இருந்து இசுகாண்டிநேவியாவின் வடக்குப் பகுதிவரை உள்ள புல்வெளிகள் முழுவதிலும் பரவியுள்ளது. இது ஆத்திரேலியாவிலும் வட அமெரிக்காவிலும் அயலினமாக அறிமுகமாகி உள்ளது.[4]

சிற்றினங்கள்[தொகு]

இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[3]

  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். அசிட்டோசா
  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். 'ஆம்புகூசு
  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். ஆரிஃபோலியசு
  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். கிபெர்னிக்கசு
  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். கிர்துலசு
  • உரூமெக்சு அசிட்டோசா சிற்றினம். வினீலிசு

பயன்பாடுகள்[தொகு]

புளியாரைக் கீரை பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இது நறுஞ்சுவைநீர்கள், மசியல்கள் செய்யவும் காய்குவைகளில் நிரவவும் பயன்படுகிறது. இது கிவிப்பழ மணங் கொண்டது. காட்டுத் திராட்சைப் போல புளிப்பானது. இதில் உள்ள ஆகசாலிக அமிலம் கடுஞ்சுவை தருகிறது.

வட நைசீரியாவில் புளியாரைக் கீரை புதினா கலந்து அருந்தப்படுகிறது. அவுசா குமுகங்களில் இது வேகவைத்து மசியலாக்கி குலி-குலியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. குலி-குலி என்பது எண்ணெய் நீக்கிய மரபான வறுத்த வேர்க்கடலை உருண்டையாகும், இத்துடன் உப்பு, மிளகு, வெங்காயம், தக்காளியும் கலந்திருக்கும். இந்தியாவில், கீரை நறுஞ்சுவைச் சாற்றிலும் வேர்க்கடலை, பயறு கலந்து கறியாகச் சமைத்தும் பயன்படுகீறது. ஆப்கானித்தானில், கீரை தட்டில் வைத்து நன்கு வறுத்து செரிப்பியாகவும் இரமடான் காலத்தில் நோன்புநீக்க உணவாகவும் பயன்படுகிறது.

திராயிசுகுரோசு உடன்பிறப்புகள் 1962 இல் கண்டுபீடித்த புளியாரச் சாற்று சாலமன் இறைச்சு உணவு இன்றைய பிரெஞ்சு நாட்டுப் புத்துனவில் மிகவும் பெயர்பெற்ற உணவாகும்.[5][6]

மருத்துவப் பயன்[தொகு]

தமிழ்நாட்டில் பரவலாக எங்கும் கிடைக்கக்கூடிய கீரை வகைகளில் புளியாரைக் கீரையும் ஒன்றாகும். இக்கீரை மிக எளிதில் வளரக்கூடியது. இது புளிப்புத் தன்மையுடையது. இதை சமைக்கும் போது பருப்பு, நெய் போன்றவற்றை தாராளமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் இக்கீரையின் மருத்துவகுணம் அதிகமாகி உடலுக்கு பல வகையிலும் நன்மை தரும். இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதை உண்பதன் மூலம் வாதநோய்கள், பித்த நோய்கள்]] குணமாகும். முகத்திலே ஏற்படுகின்ற முகப்பருவை நீக்குவதில் இந்தக் கீரை ஒரு சிறந்த மருந்தாகிறது. இதனுடன் சிறிது பன்னீர் விட்டு மை போல் அரைத்து முகப்பருவின் மீது பூசிவர பரு கரைந்து முகம் நல்ல பளபளப்பும் அழகும் பெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species", Theplantlist.org, பார்க்கப்பட்ட நாள் 10 May 2016
  2. Stace, C. A.; Fitter, R.; Fitter, A (2010). New Flora of the British Isles (Third ). Cambridge, U.K.: Cambridge University Press. பக். 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521707725. 
  3. 3.0 3.1 Stace, C. A. (2010). New Flora of the British Isles (Third ). Cambridge, U.K.: Cambridge University Press. பக். 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521707725. 
  4. "Global spread map" (JPG). Linnaeus.nrm.se. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  5. Miller, Bryan; Franey, Pierre (1995-07-12). "GREAT COOKS; Finesse Times Two" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1995/07/12/garden/great-cooks-finesse-times-two.html. 
  6. Boulud, Daniel; Greenspan, Dorie (1999). Daniel Boulud's Cafe Boulud Cookbook. Scribner. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0684863436. http://www.thepollacks.com/recipes/SalmonandSorrelTroisgros.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியாரைக்_கீரை&oldid=3853100" இலிருந்து மீள்விக்கப்பட்டது