லோலாப் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 34°30′N 74°22′E / 34.500°N 74.367°E / 34.500; 74.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோலாப் பள்ளத்தாக்கு
லோலாப் பள்ளத்தாக்கு
லோலாப் பள்ளத்தாக்கு is located in ஜம்மு காஷ்மீர்
லோலாப் பள்ளத்தாக்கு
லோலாப் பள்ளத்தாக்கு
லோலாப் பள்ளத்தாக்கு is located in இந்தியா
லோலாப் பள்ளத்தாக்கு
லோலாப் பள்ளத்தாக்கு
ஜம்மு காஷ்மீரில் லோலாப்பின் அமைவிடம்
Floor elevation5,564 அடி (1,696 m)
ஆள்கூறுகள்34°30′N 74°22′E / 34.500°N 74.367°E / 34.500; 74.367

லோலாப் பள்ளத்தாக்கு (Lolab Valley) என்பது இமயமலை பள்ளத்தாக்காகும். இது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ளது.

பள்ளத்தாக்கின் நுழைவாயில் குப்வாரா நகரிலிருந்து வடக்கே 9 கிமீ (5.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கின் மையம் ஜம்மு-காஷ்மீரின் தலைநகரான சிறிநகருக்கு வடமேற்கே 114 கிமீ (71 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. 15 மைல் (24 கி.மீ) நீளமுள்ள இந்த நீள்வட்ட வடிவ பள்ளத்தாக்கு, சராசரியாக 2 மைல் (3.2 கி.மீ) அகலம் கொண்டது.

நிலவியல்[தொகு]

லோலாப் பள்ளத்தாக்கு குப்வாராவின் ஒரு தொகுதியான சோகம் லோலாப்பின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ளது. இது தெற்கே காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும், வடக்கே நீலம் பள்ளத்தாக்குக்கும் எல்லையாக உள்ளது. மேலும், பந்திபோராவிலிருந்து [1] கிழக்கே நாக்மார்க் சமவெளிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாயும் லஹ்வால் ஆற்றின் ஓட்டத்தால் உருவாகிறது. லோலாப் பள்ளத்தாக்கு 9 பல பழங்கால நீரூற்றுகள், அடர்ந்த பைன் மற்றும் பிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது. [2] பழ மரங்களான ஆப்பிள், சேலாப்பழம், குழிப்பேரி, பாதாமி, வாதுமை போன்றவை பள்ளத்தாக்கில் பொதுவானவை. இது "ஜம்மு-காஷ்மீரின் பழக் கிண்ணம்" என்றும் அழைக்கப்படுகிறது. [3] இந்த பள்ளத்தாக்கில் கலரூஸின் குகைகள் போன்ற பல இயற்கை அடையாளங்களும் சுற்றுலா இடங்களும் உள்ளன.

சூழலியல்[தொகு]

இப்பகுதியில் உள்ள மற்ற பள்ளத்தாக்குகளைப் போலவே, லோலாப் பள்ளத்தாக்கிலும் பல இமயமலை காட்டு விலங்குகள் உள்ளன. அவற்றில் இமயமலை கருப்புக் கரடி, இமயமலை பழுப்புக் கரடி, பனிச்சிறுத்தை, மலை ஆடுகள், மார்க்கோர் காட்டு ஆடு, காசுமீர் மான், கஸ்தூரி மான் ஆகியவை அடங்கும். லோலாப் பள்ளத்தாக்கு நீலம் பள்ளத்தாக்குக்கு அருகில் உள்ளது. மேலும் இது கட்டுப்பாட்டுக் கோட்டால் பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பல ஆயுதப் போர்களைக் கண்டுள்ளது. இதன் விளைவாக பல காட்டு விலங்குகள் இடம்பெயர்ந்துவிட்டன.

அணுகல்[தொகு]

லோலாப் பள்ளத்தாக்கானது சாலை வழியாக சிறீநகர், சிறீநகர் வானூர்தி நிலையம் போன்ற இடங்களுக்கு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பேருந்து 114 கிமீ (71 மைல்) தூரத்தை கடக்க மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும் சோப்பூர் மற்றும் குப்வாரா நகரங்கள் வழியாக செல்கிறது. லோலாப் பள்ளத்தாக்கில், ஒரு சில சுற்றுலா குடிசைகள் மற்றும் பல முகாம் தளங்கள் உள்ளன. இது காஷ்மீரின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

சுற்றுலா[தொகு]

லோலாப்பிற்கு வருகை தரும் பயணிகள் சில சமயங்களில் லால்போரா கிராமத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள துறவி காஷ்யப ரிஷியின் ஓய்விடத்திற்கு வருகிறார்கள். மூன்று அடி ஆழம் மற்றும் தெளிவான தெளிவான நீரைக் கொண்டுள்ள லாவ்னாக் என்ற நீரூற்றும், மற்றொரு பெரிய நீரூற்றான கௌரி நீரூற்றும் அருகிலேயே காணப்படுகிறது.

கவிதை[தொகு]

லோலாப் பள்ளத்தாக்கை ஒருமுறை உருது கவிஞர் முகமது இக்பால் பார்வையிட்டு இதைப்பற்றி ஓ வாலி ஆப் லோலாப்! என்ற வரிகளில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Handbook to India, Burma, and Ceylon.
  2. "Loalab Valley on Ikashmir". ikashmir.net. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.
  3. "Fruit bowl of J&K". india9.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோலாப்_பள்ளத்தாக்கு&oldid=3653085" இலிருந்து மீள்விக்கப்பட்டது