காசுமீர் மான்
காசுமீர் மான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | ருமினேண்டியா
|
குடும்பம்: | செர்விடே
|
துணைக்குடும்பம்: | செர்வினே
|
பேரினம்: | செர்வசு
|
இனம்: | செ. கேனாடென்சிசு
|
துணையினம்: | செ. கே. கன்குலி
|
காசுமீர் மான் (Kashmir stag), என்பது ஒரு மான் ஆகும். இவை இந்தியாவில் உள்ள காட்டுமானின் கிளையினம். இவை மிக அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. 2008 இல் நடந்த கணக்கெடுப்பின்படி 160 வளர்ந்த மான்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்தது.[1] இப்பான்தான் சம்மு காசுமீர் மாநில விலங்காகும்.
விளக்கம்
[தொகு]இந்த மான் உருவத்தில் சற்று பெரியதாகவும், பிளவுபட்ட கொம்புகளைக்கொண்டும் காணப்படும். ஒவ்வொரு கொம்பிலும் ஐந்து முதல் ஆறுவரை கிளைக்கொம்புகள் இருக்கும். உடல் நிறம் லேசான அல்லது அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். பிட்டத்தில் வெள்ளைத் திட்டுக் காணப்படும். காசுமீர் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுக்கையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் சிறு குழுக்களாக வாழ்கின்றன.இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை 1970இல் 150ஆக குறைந்துவிட்டது.
மக்கட்தொகை
[தொகு]வருடம் | மொத்த எண்ணிக்கை | ஆன்மான் 100 பெண் மானிற்கு | இளமான் 100 பெண் மானிற்கு | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | 197 | 19 | 23 | [2] |
2006 | 153 | 21 | 9 | [2] |
2008 | 127 | - | - | [2] |
2009 | 175 | 26 | 27 | [2] |
2011 | 218 | 29 | 25 | [2] |
2015 | 186 | 22 | 14 | [2] |
2017 | 214 | 16 | 19 | [2] |
2019 | 237 | 15.5 | 7.5 | [2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Captive breeding for Hangul". Archived from the original on 2008-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-09-15.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Latest census shows alarming decrease in Hangul population composition". Greater Kashmir. 18 July 2019. https://www.greaterkashmir.com/news/front-page-2/detects-lowest-ever-male-female-fawn-female-ratios-latest-census-shows-alarming-decrease-in-hangul-population-composition/.