லேண்ட்மார்க் புத்தகக்கடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேண்ட்மார்க் நிறுவனம்
வகைவரையறுக்கப்பட்ட நிறுவனம்
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைசில்லலறை வர்த்தகம்
தாய் நிறுவனம்டாட்டா குழுமம்
இணையத்தளம்landmarkstore.in

லேண்ட்மார்க் நிறுவனம் (Landmark Limited) லேண்ட்மார்க் அல்லது லேண்ட்மார்க் புத்தக நிலையங்கள் என்று பரவலாக அறியப்படும் இது, சென்னையை தளமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள புத்தகக் கடைகளின் சங்கிலியாகும். இது இப்போது டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான டிரெண்ட் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமானது. [1] ஆகத்து, 2005 இல், டிரெண்ட் சென்னையைத் தளமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான புத்தகங்களையும், இசை சம்பந்தமான பொருட்களையும் விற்கும் ஒரு சில்லறை விற்பனை நிறுவனமான இந்த நிறுவனத்தின் 76% பங்குகளை வாங்கியது. [2] ஏப்ரல் 2008 இல் 100% பங்குகளை கையகப்படுத்தியது. [3] லேண்ட்மார்க் தற்போது 16 கடைகளைக் கொண்டுள்ளது.

ஒரு சுயாதீன புத்தகக் கடையாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஒரு சங்கிலிக் கடையாக மாறியது. இது முதன்மையாக புத்தகங்கள், இசை, திரைப்பட விசிடி / டிவிடிகள், வீடியோ விளையாட்டுகள் , கணினி விளையாட்டுகள், வீடியோ ஆட்டம், கன்சோல் விளையாட்டு, வீடியோ விளையாட்டு உதிரி பாகங்கள், பொம்மைகள், பத்திரிகைகள், தொழில்நுட்பம் போன்றவற்றை வழங்குகிறது .செல்லிடத் தொலைபேசிகள், கைக் கணினிகள், செல்லிடத் தொலைபேசி உதிரி பாகங்கள், ஒளிப்படக்கருவிகள், இதன் உதிரி பாகங்கள், மடிக்கணினிகள், எழுதுபொருட்கள், பரிசு பொருட்கள், வீட்டுத் தயாரிப்புகள் போன்ற தயாரிப்புகளை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்திற்குச் சொந்தமான சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் இ-காமர்ஸ் வலைத்தளமான Landmarkonthenet.com என்பது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது லேண்ட்மார்க்கின் வலைவழிக் கொள்முதல் விற்பனைப் பிரிவாகும். இதன் மூலம் அதன் சில்லறை விற்பனையை வலைத்தளம் மூலம் செய்கிறது. வலைத்தளம் இப்போது மூடப்பட்டுள்ளது.

இருப்பிடங்கள்[தொகு]

மும்பை, பெங்களூரு, சென்னை, புனே உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்நிறுவனம் ஐந்து பெரிய வடிவ சில்லறைக் கடைகளைக் கொண்டுள்ளது.

லேண்ட்மார்க் வினாடி வினா[தொகு]

இந்தியாவின் பழமையான வினாடி வினாப் போட்டிகளில் ஒன்றான லேண்ட்மார்க் வினாடி வினா, வருடாந்திர வினாடி வினாப் போட்டியாகும். இது பெரும்பாலும் தேசிய விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. இது 1989 இல் நிறுவப்பட்டது. பின்னர் பெங்களூர், சென்னை, மும்பை, புனே, டெல்லி ஐதராபாத்து ஆகிய இடங்களில் பல்வேறு தேதிகளில் நடைபெற்றது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோளகள்[தொகு]

  1. "Trent acquires 76% stake in Landmark for Rs 103.6 cr". The Hindu Business Line. 2005-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  2. "Trent acquires 76% stake in Landmark for Rs 103.6 cr". 2005-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.
  3. "Trent buys out Landmark promoter". 2008-05-01. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.