டிரெண்ட் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரெண்ட் நிறுவனம் (வெஸ்ட்சைட்)
வகைபொது
நிறுவுகை1998
தலைமையகம்மும்பை, இந்தியா
தொழில்துறைசில்லறை வர்த்தகம்
வருமானம்2,346 கோடிகள் (2018)
தாய் நிறுவனம்டாட்டா குழுமம்
இணையத்தளம்www.westside.com

டிரெண்ட் நிறுவனம் (டாடா சில்லறை வணிகத்தின் அங்கம்) என்பது டாடா குழுமத்தின் சில்லறை விற்பனையகமாகும். இந்தியாவின் மகாராட்டிராவில் மும்பையைத் தளமாகக் கொண்டு வளர்ந்து வரும் பல சில்லறை சங்கிலிகளில் ஒன்றாக இது இயங்குகிறது. இது இந்தியாவின் பல்வேறு இடங்களில் புத்தகக் கடை சங்கிலியான லேண்ட்மார்க் என்ற புத்தக சில்லறை வணிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. [1]

வரலாறு[தொகு]

சில்லறைத் துறையின் வளர்ச்சியைக் கண்டு, 1996 இல் டாடா ஒப்பனை தயாரிப்பு நிறுவனமான லேக்மேவின் 76% பங்குகளை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு ₹200 கோடிக்கு (48.46 மில்லியன் அமெரிக்க டாலர்) விற்றது. மேலும் விற்பனையின் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து டிரெண்டை உருவாக்கியது. லக்மேவின் அனைத்து பங்குதாரர்களுக்கும் டிரெண்டில் சமமான பங்குகள் வழங்கப்பட்டன. லக்மேவின் தலைவரான சிமோன் டாட்டா இதற்கு தலைமை தாங்கினார். ஒரு இந்திய நிறுவனம் உலகளாவிய நிறுவனங்களுக்குத் திறந்த சந்தையில் புதிய ஒப்பனை தயாரிப்புகளை வெளியிடுவது மிகவும் கடினம் என்று நம்பியது.

வணிகம்[தொகு]

  • வெஸ்ட்சைட் என்ற பொருளின் கீழ் 82 முக்கிய இந்திய நகரங்களில் 8,000-34,000 சதுர அடி அளவிலான 143 சில்லறை கடைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
  • சூடியோ, ஒரு மலிவு விலை ஒப்பனைப் பொருளான இதை விறபதற்காக, 12 நகரங்களில் 20 சூடியோ கடைகளை நிறுவியுள்ளது. [2]
  • டிரெண்ட் எட்டு இந்திய நகரங்களில் ஸ்டார் பஜார் என்ற பெயரின் கீழ் 10 ஹைப்பர் வணிக வளாகங்களையும் 26 சூப்பர் வணிக வளாகங்களையும்இயக்குகிறது. [3]
  • ஆகத்து, 2005 இல், டிரெண்ட் சென்னையைத் தளமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான புத்தகங்களையும், இசை சம்பந்தமான பொருட்களையும் விற்கும் ஒரு சில்லறை விற்பனை நிறுவனமான லேண்ட்மார்க் என்ற நிறுவனத்தின் 76% பங்குகளை வாங்கியது. [4] ஏப்ரல் 2008 இல் 100% பங்குகளை கையகப்படுத்தியது. [5] லேண்ட்மார்க் தற்போது 16 கடைகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரெண்ட்_நிறுவனம்&oldid=3710839" இருந்து மீள்விக்கப்பட்டது