ராமகிருட்டிண பாபா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமகிருட்டிணா செகநாத் பாட்டீல்
சட்டப் பேரவை உறுப்பினர், மகாராட்டிரா சட்டமன்றம்
பதவியில்
1985-90, 1990-1995 (இரண்டு முறை)
முன்னையவர்கோவிந்தராவ் ஆதிக், (இந்திய தேசிய காங்கிரசு)
பின்னவர்கைலாசு ராம்ராவ் பாட்டீல், (இந்திய தேசிய காங்கிரசு)
தொகுதிவைசாப்பூர் (நாடாளுமன்ற தொகுதி)
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998-2004
முன்னையவர்பிரதீப் செய்சுவால் (சிவ சேனா)
பின்னவர்சந்திரகாந்து பாவுராவ் (சிவ சேனா)
தொகுதிஅவுரங்காபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ராமகிருட்டிண செகநாத் பாட்டீல்

02-செப்டம்பர்-1936[1]
தாகேகான், அவுரங்காபாத், மகாராட்டிரம், ஐதராபாத் மாநிலம், இந்தியா
இறப்பு02-செப்டம்பர்-2020[2]
அவுரங்காபாத்[2]
துணைவர்
அசுரா பாய் (தி. 1956)
பிள்ளைகள்4 (இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்)
வாழிடம்அவுரங்காபாத்
தொழில்
  • விவசாயம்
  • சமூக சேவகர்
மூலம்: [1]

ராமகிருட்டிணா செகநாத் பாட்டீல் (Ramkrishna Jagannath Patil), ராமகிருட்டிண பாபா (Ramkrishna Baba) (2 செப்டம்பர் 1936 - 2 செப்டம்பர் 2020) பிரபலமாக அறியப்பட்ட இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

பாட்டீல் 1985 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டுக்கு இடையில் வைசாபூரில் இருந்து இரண்டு முறை மகாராட்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1998 ஆம் ஆண்டு 12வது மக்களவைக்கு அவுரங்காபாத் (மகாராட்டிரா மக்களவைத் தொகுதி) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]


இவர் ஒரு அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் தவிர தொழிலில் ஒரு விவசாயி மற்றும் வங்கியின் தலைவராகவும் இருந்தார். [4] அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றினார். [5][6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பாட்டீல் 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி அவுரங்காபாத் அருகே உள்ள தகேகானில் பிறந்தார். மெட்ரிகுலேசன் வரை தனது கல்வியை முடித்தார். [1][7]

முதுமை காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று அவுரங்காபாத்தில் தனது 84 வயதில் இறந்தார். அவர் உடல் தகேகானில் தகனம் செய்யப்பட்டது.[2]

வகித்த பதவிகள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". loksabhaph.nic.in. Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  2. 2.0 2.1 2.2 "औरंगाबादचे माजी खासदार रामकृष्णबाबा पाटील यांचे निधन" (in mr-IN). Lokmat. 2 September 2020. https://www.lokmat.com/aurangabad/former-aurangabad-mp--passes-away-a320/. பார்த்த நாள்: 3 September 2020. 
  3. 3.0 3.1 "Twelfth Lok Sabha State wise Details: Maharashtra". loksabha.nic.in. Lok sabha. பார்க்கப்பட்ட நாள் 3 September 2020.
  4. 4.0 4.1 "माजी खासदार रामकृष्ण बाबा पाटील यांना उपमुख्यमंत्री अजित पवार यांची श्रद्धांजली". Maharashtra Today. 2 September 2020. https://www.maharashtratoday.co.in/deputy-chief-minister-ajit-pawar-pays-homage-to-former-mp-ramkrishna-baba-patil/. பார்த்த நாள்: 3 September 2020. 
  5. Golwalkar, Amit (2 September 2020). "काँग्रेसचे माजी खासदार रामकृष्ण बाबा पाटील यांचे निधन" (in mr). www.sarkarnama.in. https://www.sarkarnama.in/aurangabad/congress-ex-mp-marathwada-ramkrishna-baba-patil-passes-away-61100. பார்த்த நாள்: 3 September 2020. 
  6. "Former MP, MLA among 16 arrested in bank scam case" (in en). One India. UNI. 20 May 2007. https://www.oneindia.com/2007/05/20/former-mp-mla-among-16-arrested-in-bank-scam-case-1179684264.html. பார்த்த நாள்: 3 September 2020. 
  7. Dhamne, Bhanudas (2 September 2020). "औरंगाबादचे माजी खासदार रामकृष्ण बाबा पाटील यांची प्रकृती स्थिर" (in mr-IN). eSakal. https://www.esakal.com/marathwada-news/aurangabad/former-mp-ramkrishna-baba-patil-condition-stable-339594. பார்த்த நாள்: 3 September 2020. 
  8. Pansare, Jagdish (6 December 2017). "पुन्हा आमदारकीसाठी नितीन पाटलांना रामकृष्ण बाबांचा कानमंत्र?" (in mr). Sarkarnama. https://www.sarkarnama.in/aurangabad-congress-politics-ramkrishna-baba-patil-nitin-patil-18374. பார்த்த நாள்: 3 September 2020.