ராபுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புத் திரபுள்
வெள்ளைத் திரபுள்

திரபுள் (truffle) என்பது புவிப்பாழ்தளப் பழ உடல்தரும் காளானாகும். இது அசுக்கோமைசீட்வகைப் பூஞ்சையாகும். இது கிழங்கு பேரினத்தைச் சேர்ந்ததாகும். கிழங்குவகைப் பேரினம் மட்டுமன்றி, ஜியோபோரா, பெழிசா, காயிரோமைசெசு, இலியூகாஞ்சியம் ஆகிய பேரினங்களும் திரபுள் (truffle) வகையில் அடங்குவதோடு, இதில் நூற்றுக்கணக்கான பயிரிடும்வகைகள் அமைகின்றன. .[1] திரபுள்சார் பேரினங்கள் பிழிசோமைசீட்டுகள் குடும்பத்தில் பிழிசேல்சு வரிசையில் அடங்குகின்றன. இரிழோபோகோன், குளோமசு போன்ற திரபுள்சார் பேரினங்கள் பிழிசேல்சு வரிசையில் அமைவதில்லை. திரபுள் வேர்ப்பூஞ்சை ஆகையால் இது மரவேர்ப் பகுதியிலேயே காணப்படும். விதைத்தூள் பரவல் பூஞ்சையுண்ணிகளால் நிறைவேற்றப்படுகிறது.[2] இந்த பூஞ்சைகள் ஊட்டச் சுழற்சியிலும் வறட்சி தாங்குதிறனிலும் கணிசமான சுற்றுச்சூழல் பாத்திரம் வகிக்கின்றன.

சில காளான்களின் பழம்தரும் உடல் அதிக விலையுடைய உணவாகும். இது "சமையற்கட்டின் வைரம்" எனத் திரபுளைப் பிரெஞ்சு சமையல் வல்லுனர் ழீன் ஆந்தெல்மே பிரிலாத்து-சவாரின் குறியுள்ளார்.[3] உண்ணத்தக்க திரபுள் பிரெஞ்சு உணவுகளில் உயர் மதிப்புடைய உணவாகும். [4] இது இத்தாலிய, குரோழ்சிய, சுலோவீன, ஆட்டோமன், நடுவண் கிழக்கு, எசுபானிய, பன்னாட்டு உணவுகளிலும் மிகவும் உயர்மதிப்பு வாய்ந்துள்ளது. திரபுள் பயிரிட்டும் இயற்கையாகவும் அறுவடை செய்யப்படுகிறது.

வேர்ச்சொல்லியல்[தொகு]

திரபுள் (truffle) என்பது "வீக்கம்" அல்லது "திரள்" எனப் பொருள்படும் இலத்தீனச் சொல்லாகிய tūber என்பதில் இருந்த் வந்த தாகும். பிறகு இது தியூஃபெர் (tufer) எனவாகி, பின்வரும் பல்வேறு ஐரோப்பிய மொழிச் சொற்களாகியது: டேனியம் திரோஃபே (trøffe)l, டச்சு திரஃபே (truffe)l, ஆங்கிலம் திரபுள் (truffle), பிரெஞ்சு திரஃபே (truffe), செருமானியம் திரஃபெல் (Trüffel), கிரேக்கம் τρούφα திருஃபா (trúfa) இத்தாலியம் தர்துஃபோ (tartufo), போலிழ்சு திர்ஃப்லா, உரொமானிய மொழி திரஃபா (trufă), எசுபானியம் திரஃபா (trufa), சுவீடியம் திரிஃபேல் (tryffel).

செருமானியச் சொல்லாகிய கார்தொஃபே (Kartoffel) ("உருளைக்கிழங்கு (potato)") இத்தாலியச் சொல்லான திரபுள்( truffle) என்பதில் இருந்து புறத்தோற்ற ஒற்றுமையால் உருவாகியது.[5] பாரசீகச், சொற்களாகிய திருஃபா (trufa)வும் டியூபெராவும் இணைபெயர்களாகும். டியூபெரா இலத்தீனச் சொல்லுக்கு நெருங்கிய தாகும்.

வரலாறு[தொகு]

தொல்பழங் காலம்[தொகு]

திரபுள்கள் பற்றிய முதல் குறிப்பு சுமேரியப் பகைவராகிய அமோரைட்டுகளின் (மூன்றாம் ஊர் பேரரசு, கிமு20 ஆம் நூற்றாண்டு) உணவுப் பழக்கங்கள் சார்ந்த புதிய சுமேரியக் கல்வெட்டுக் குறிப்புகளில் கிடைத்தது.[6] பீன்னர் கிமு நான்காம் நூற்றாண்டு தியோபிரசுட்டசு எழுத்துகளில் கிடத்தது. செவ்வியற் காலத்தில் இதன் தோற்றம் குறித்த எண்னங்கள் மருளூட்டுவன எனப் பலர் குறிப்பிடுகின்றனர்; புளூடார்க்கும் பிறரும் இவை மின்னல், வெதுவெதுப்பு, நீரால் மண்ணில் விளைந்தனவாக எண்ணுகின்றனர்; ஜுவேனா என்பவர் இடியும் மழையும் இவற்றை உருவாக்கியதாக எண்ணுகிறார். சிசெரொ இவற்றைப் புவியின் குழந்தைகள் என்கிறார்; ஆனாலும் டயோசுகோரிடசு இவை கிழங்கு வேர்களே என எண்ணுகிறார்.[7]

பண்டையச் செவ்வியற் காலத்தில் உரோம் நாடும் திராசியாவும் மூவ்கைத் திரபுள்களை இனங்கண்டுள்ளனர். அவை, டியூபெர் மெலனோசுபோரம், யியூபெர் மாக்னிஃபிகானசு, டியூபெர்ர் மாக்னேட்டம் என்பனவாகும். ஆனால் உரோம் நட்டவர் இதைப் பயன்படுத்தாமல், மாற்றாக பல்வேறு பூஞ்சைகளை (தெர்ஃபெசு அல்லது பாலைநிலத் திரபுள் போன்றவற்ரை) பயன்படுதினர். இவை பண்டைய காலத்தில் குறைந்த வறட்சி நிலவிய நெய்தல் காலநிலை வாய்ந்த இலெசுபோசு, கார்த்தெகு, இலிபியா ஆகிய நாடுகளில் இருந்து உரோம் நாட்டுக்கு வந்துள்ளன.[7]"/> ஆனால் இவற்றின் பொருள்கள் வெளிர்சிவப்பு இழையூடிய (உரோசா நிறம் கலந்த) வெண்ணிறத்தில் அமைகின்றன. திரபுள்களைப் போலன்றி, திரெபெசு அருகிய மணமே பெற்றுள்ளது. திரெபெசு சூழலில் இருந்து நறுமணத்தை உறிஞ்சும் தன்மை பெற்றுள்ளதால், உரோமர் இதை மணம் ஏந்தியாகவே பயன்படுத்தினர். உண்மையில், பண்டைய உரோம உணவுகள் பல கார, மணப்பொருட்களை பயன்படுத்தியதால், அச்சூழலில் திரெபெசு கலப்பு உகந்ததாக இருந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Læssøe, Thomas; Hansen, Karen (September 2007). "Truffle trouble: what happened to the Tuberales?". Mycological Research 111 (9): 1075–1099. doi:10.1016/j.mycres.2007.08.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-7562. https://archive.org/details/sim_mycological-research_2007-09_111_9/page/1075. 
  2. Lepp, Heino. "Spore release and dispersal". Australian National Botanic Gardens. 5 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. Jean Anthelme Brillat-Savarin (1838) [1825]. Physiologie du goût. Paris: Charpentier. https://books.google.com/books?id=SgkPAAAAQAAJ&pg=PP7.  English translation பரணிடப்பட்டது 2008-07-06 at the வந்தவழி இயந்திரம்
  4. "Truffles". Traditional French Food Regional Recipes From Around France. 2017. http://www.traditionalfrenchfood.com/truffles.html. 
  5. Simpson, J.; Weiner, E., தொகுப்பாசிரியர்கள் (1989). Oxford English Dictionary (2nd ). Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-861186-8. https://archive.org/details/oxfordenglishdic12simp. 
  6. Chiera, E. (1934), "Nos. 58 and 112", Sumerian Epics and Myths, Chicago
  7. 7.0 7.1 Ramsbottom J (1953). Mushrooms & Toadstools. Collins. 

கூடுதல் தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
truffle
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபுள்&oldid=3682438" இருந்து மீள்விக்கப்பட்டது