ரகுநாத் முர்மு
ரகுநாத் முர்மு ᱨᱚᱜᱦᱩᱱᱟᱛᱦ ᱢᱩᱨᱢᱩ (Raghunath Murmu) | |
---|---|
பிறப்பு | 5 மே 1905 மயூர்பஞ்ச் சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா) |
இறப்பு | 1 பெப்ரவரி 1982 | (அகவை 76)
தொழில் | கருத்தியலாளர், நாடகாசிரியர் மற்றும் எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
ரகுநாத் முர்மு (5 மே 1905 [1][2] - 1 பிப்ரவரி 1982)[3] என்பவர் ஓர் இந்திய சந்தாலி மொழி எழுத்தாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் தான் சந்தாலி மொழிக்கான ஓல் சிகி எழுத்துமுறையை உருவாக்கினார்.[4][5][6] பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை, சந்தாலி மக்களுக்கு எழுத்து மொழி கிடையாது. அவர்கள் அறிவு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வாய்வழியாகவேதான் கடத்தினார்.
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் மற்றும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்க்கள் சந்தாலி மொழியை ஆவணப்படுத்த வங்காளம், ஒடியா மற்றும் இலத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இருப்பினும், சந்தாலிகளுக்கு அவர்களின் சொந்த எழுத்துமுறையானது இல்லை. இவர் உருவாக்கிய எழுத்துக்களானது சந்தாலி சமூகத்தின் கலாச்சார அடையாளத்தை வளப்படுத்தியது. இவர் பல பாடல்கள், நாடகங்கள் மற்றும் பள்ளி பாட நூல்களை ஓல் சிகி எழுத்துமுறையில் எழுதினார்.[7][8][9]
தொடக்க வாழ்க்கை
[தொகு]1905 ஆம் ஆண்டு வைசாகம் திருநாளில் மயூர்பஞ்ச் சமஸ்தானத்தில் (தற்போதைய ஒடிசாவாக உள்ள) ரைரங்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள டான்ட்போஸ் (டஹர்திஹ்) என்னும் கிராமத்தில் பிறந்தார்.[10] இவர் நந்த்லால் முர்மு மற்றும் சல்மா முர்மு ஆகியோரின் மகன் ஆவார். இவரின் தந்தை, நந்த்லால் முர்மு, ஒரு கிராமத் தலைவர். நந்த்லால் முர்முவின் தந்தைவழி மாமா, மயூர்பஞ்ச் சமஸ்தானத்தின் அரசவையில் இருந்தார். இவர் பிறந்த பிறகு இவருக்கு "சுனு முர்மு" என்று பெயரிடப்பட்டது. இருப்பினும், பின்னர் இவரது பெயரிடும் விழாவை நடத்திய பாதிரியார், இவரது பெயரை "சுனு முர்மு" என்பதிலிருந்து "ரகுநாத் முர்மு" என்று மாற்றினார்.
கல்வி மற்றும் ஓல் சிகி எழுத்துமுறையின் கண்டுபிடிப்பு
[தொகு]இவரது ஏழாவது வயதில் உத்திரபிரதேசத்திலுள்ள கம்பரியா பள்ளிக்குச் சென்றார். அப்பள்ளி ஒடியா மொழிவழி கற்கும் பள்ளியாகும். இவரது கிராமத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது. இவரது ஆரம்பக் கல்வியை கற்பதற்காக முதல் நாள் பள்ளிக்குச் சென்றார். இவர் தனது ஆசிரியரை ஒடியராக இருப்பதைக் கண்டார். இவர் பேசும் சந்தாலி மொழியில் பள்ளிக்கூடம் ஏன் இயங்கவில்லை என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
ரகுநாத் முர்மு தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டார் "நாம் ஏன் இந்த ஒடிய மொழியை கற்க வேண்டும்?" ஒடிய மொழி பேசும் மக்கள் ஒடிய மொழிவழியில் கல்வியை கற்பார்கள். "நாம் கெர்வால்கள், நமது தாய்மொழி சந்தாலி மொழி அப்படி என்றால் ஏன் எங்களுக்கு சந்தாலி மொழியில் கற்பிக்கப்படவில்லை?"
இவர் தன்னை "சந்தாலி மொழிவழி கல்வி கற்கும் பள்ளியின் சேர்க்கும்படி அப்பாவிடம் சொன்னார்". சந்தாலி மொழிக்கு எழுத்து மொழி இல்லை, நம் மொழிக்கு வாய்மொழி மட்டுமே உள்ளது என்று இவனது தந்தை கூறினார். அந்த வயதில், இவர் சிந்திக்க ஆரம்பித்தார். நம்மிடம் ஏன் சொந்த எழுத்துமுறை இல்லை? ஏன் நம் மொழியில் கற்பிக்கப்படவில்லை? இத்தகைய கேள்விகள் அவன் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.[11]
1914 இல், இவர் பகல்டா தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் (இவரது கிராமத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது). இந்த பள்ளி தனது சொந்த கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், பனா துங்கிரியில் உள்ள உறவினர் ஒருவரின் நிலத்தில் பள்ளிக்கு அருகில் குடிசை கட்டினார். அங்கே வேறு சில சிறுவர்களுடன் தங்க ஆரம்பித்தார். இவர் இந்த நாட்களில், மற்ற சிறுவர்கள் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒன்றாக விளையாடும் போது, இவர் அவர்களுடன் விளையாடியதில்லை. இவர் அதற்கு பதிலாக மண்ணில் தனியாக வரைந்து விளையாடி, மண்ணில் பல்வேறு வடிவங்களை வரைந்து இவர் தனது எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். இவர் ஓல் சிகி எழுத்து முறையை உருவாக்கத் தொடங்கிய காலமாக இது இருக்கலாம்.[9]
ரகுநாத் முர்மு மேற்படிப்புக்காக பரிபாடாவுக்கு (அப்போதைய மயூர்பஞ்ச் மாநிலத்தின் தலைநகம்) அனுப்பப்பட்டார். இவர் மயூர்பஞ்சின் பரிபாடா உயர்நிலைப் பள்ளியில் (தற்போதைய எம்.கே.சி. உயர்நிலைப் பள்ளி) சேர்க்கை பெற்றார். இவரது மனம் தனக்கென்று மொழிக்கு எழுத்து வேண்டும் என்ற எண்ணங்களில் சிக்கிக்கொண்டது. பள்ளி விடுமுறை நாள்களில் சொந்த கிராமத்திலுள்ள தனது வீட்டிற்கு செல்வது வழக்கம். அந்த நேரத்தில், இவர் "கபி-புரு" என்ற பெயரிடப்பட்ட காட்டில் தனியாக சுற்றிக் கொண்டிருப்பார். பொதுவாக, யாரும் அந்த தனிமைப்படுத்தப்பட்ட கபி-புரு காட்டிற்குள் செல்வது இல்லை. இவர் அடிக்கடி தனது குறிப்பேடு மற்றும் தூவலலுடன் அந்த காட்டிற்கு செல்வார். இவர் 1925 இல் அந்த காட்டில் ஓல் சிகி எழுத்துமுறையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.[1][4][9][12] 1924 இல், பாட்னா பல்கலைக்கழகத்தில் தனது 10வது தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டில், அவர் சாம்சோரா கிராமத்தில் வசிக்கும் நோகா பாசுகியை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 ":: BCW Department-Govt of West Bengal, Pandit Raghunath Murmu ::". 2012-07-28. Archived from the original on 2016-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
- ↑ "ପ୍ରଣମ୍ୟ ପୁରୁଷ: ପଣ୍ଡିତ ରଘୁନାଥ ମୁର୍ମୁ". 10 May 2017. Archived from the original on 27 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pandit Raghunath Murmu". Archived from the original on 14 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "The Politics of Difference: Ol-Chiki and Santali Identity in Eastern India" (PDF). பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.
- ↑ "Naveen declares birthday of Raghunath Murmu a holiday". May 5, 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.
- ↑ "Odisha Government Portal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.
- ↑ Santal, a Natural Language. 2002.
- ↑ Ethnic Minorities in the Process of Development. 1988.
- ↑ 9.0 9.1 9.2 யூடியூபில் An Inspiration - a documentary on Pt. Raghunath Murmu
- ↑ "उड़िया समझ नहीं आई तो रघुनाथ मुर्मू ने जल-जंगल, जमीन से जुड़े वर्ण गढ़ बना दी लिपि" (in இந்தி). 2018-12-22. பார்க்கப்பட்ட நாள் 2020-09-26.
- ↑ "Guru Gomke Raghunath Murmu". பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.
- ↑ Hembram, Phatik Chandra (2002). Santal, a Natural Language (in ஆங்கிலம்). U. Hembram. p. 165.