உள்ளடக்கத்துக்குச் செல்

யோப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெல் அவிவில் இருந்து யோப்பா காட்சி
கிக்கர் கெடுமின் தெரு

யோப்பா (Jaffa) (எபிரேயம்: יפו‎; அரபு மொழி: يَافَا‎ ) இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ்க்கு தெற்கு பகுதியில் உள்ள பண்டைய துறைமுக நகரம் ஆகும்.இந்நகர் விவிலிய கதைகளில் வரும் யோனா, சாலமன்,செயிண்ட் பீட்டர் ஆகியோர் வாழ்வில் தொடர்புடைய நகரமாகும்.

பெயர்க் காரணம்[தொகு]

எகிப்திய ஆதாரங்கள் மற்றும் அமர்னா கடிதங்களில் இந்நகரம் யாப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.தொன்மவியல் படி நோவா மகன்களில் ஒருவரான யாப்பேத்து இந்நகரை அமைத்ததால் இப்பெயர் வந்தது.[1][2]

வரலாறு[தொகு]

பழங்காலம்[தொகு]

1877 இல் குட்சேவ் வரைந்த யோப்பா சந்தை

யோப்பா நகர குன்று 40 மீட்டர் (130 அடி) உயரம் உள்ளதால் பரவலான கடற்கரையில் இருந்து தெளிவாகத் தெரியும்.அதனால் அது இராணுவ பயன்பாட்டுக்கு உதவியது. பல நூற்றாண்டுகளாக குப்பைகளை நிலத்தில் குவிப்பது காரணமாக அதிக உயரமாக உருவாகியது.தொல்லியல் சான்றுகள் யோப்பா நகரில் சுமார் கி.மு. 7500 காலத்திலிருந்து மக்கள் வசித்து வருவதாக கூறுகிறது.[3]

வெண்கல காலம்[தொகு]

யோப்பா இயற்கை துறைமுகம் வெண்கல காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யோப்பா கி.மு. 1440இல் எழுதப்பட்ட ஒரு பண்டைய எகிப்திய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நகரம் பண்டைய எகிப்திய ஆட்சியில் யாஃபோ எனப் பெயர் இருந்ததாக அமர்னா கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 800 கி.மு. வரை எகிப்திய ஆட்சியின் கீழ் இருந்தது.

இரும்பு காலம்[தொகு]

யோப்பா எபிரேய வேதாகமத்தில் நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

 • இந்நகரம் எபிரேய பழங்குடியினர் கொடுக்கப்பட்ட தாண் பிரதேசத்திற்கு எதிராக இருந்தது. (யோசுவா 19:46 புத்தகம்)
 • லெபனானிலிருந்து சாலமன் கோவிலுக்கு நுழைய யோப்பா துறைமுகம் பயன்பட்டது. (2 நாளாகமம் 2:16)
 • யோனா தீர்க்கதரிசியின் இடமாக இருந்தது. (யோனா 1 புத்தகம்: 3)
 • லெபனானிலிருந்து எருசலேம் இரண்டாம் கோவிலுக்கு நுழைய யோப்பா துறைமுகம் பயன்பட்டது (எஸ்றா 3 புத்தகம்: 7).

யோப்பா நகரம் தாண் கோத்திரத்து பிராந்திய எல்லையாக இருந்தது என யோசுவா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

பைசண்டைன் காலம்[தொகு]

மகா அலெக்சாண்டர் படைகள் யோப்பாவில் வைக்கப்பட்டு இருந்தன. அது மக்கபேயர் கைப்பற்றும் வரை செலூசியப் பேரரசு உடைய துறைமுகமாக இருந்தது. முதல் யூத-ரோமன் போரின் போது, யோப்பா கைப்பற்றப்பட்டு செஸ்டியஸ் காலஸ் என்பவரின் மூலம் எரிக்கப்பட்டது.[5] புதிய ஏற்பாட்டில் புனித பேதுரு யோப்பாவை மறுகட்டுமானம் செய்தார் எனக் கூறப்படுகிறது. புனித பேதுரு காலத்தில் யோப்பா என்று அழைத்தனர்.[6] புனித பேதுரு யோப்பா நகர மக்களுக்கு கிறித்துவம் போதிக்க வந்த விதம் குறித்துஅப்போஸ்தலர் நடபடிகள் 10ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இடைக்காலம்[தொகு]

யோப்பா அருங்காட்சியகம்

636 இல் யோப்பா அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது.இஸ்லாமிய ஆட்சியின் கீழ், ரம்லா துறைமுகம் மாகாண தலைநகராக இருந்தது.

யோப்பா நகரம் முதலாம் சிலுவைப்போரின் போது ஜூன் 1099 இல் பிடிக்கப்பட்டு ஜெருசல அரசின் ஒரு மையமாக இருந்தது. சிலுவை போர் காலத்தில், யூத வரலாற்றாசிரியர் பெஞ்சமின் துதுலா (1170) யோப்பாவிற்கு வந்தார்.

சலாதீன் 1187 ஆம் ஆண்டு யோப்பாவை வெற்றி கொண்டார். இந்நகர் ரிச்சர்ட் லின்ஹார்ட் மன்னரிடம் அர்சப் போரில் மூன்று நாட்களுக்கு பிறகு, செப்டம்பர் 1191 இல் சரணடைந்தது. ஜூலை 1192 யோப்பா போரில் நகரை மறு ஆக்கிரமிப்பு செய்ய சலாதீன் முயன்றாலும் நகரம் குருசேத்திரர் பொறுப்பிலேயே இருந்தது. 2 செப்டம்பர் 1192 அன்று, யோப்பா உடன்படிக்கை முறையாக இரண்டு இராணுவங்களுக்கு இடையில் மூன்று வருடகால யுத்த நிறுத்தம் உத்தரவாதம் கையெழுத்திடப்பட்டது.[7]

1268 ஆம் ஆண்டில் யோப்பா, எகிப்திய மாம்லுக் அரசால் கைப்பற்றப்பட்டது.

ஒட்டோமான் பேரரசு காலம்[தொகு]

1890 இல் பள்ளிக்கூடம்
1911 இல் துறைமுகம்
யோப்பா வந்த போனபார்ட்

1515 இல் யோப்பாவை ஒட்டோமன் சுல்தான் முதலாம் சலீம் கைப்பற்றினார்.

17 ஆம் நூற்றாண்டில் எருசலேமுக்கு மற்றும் காலிக்கு கிறிஸ்துவ பக்தர்கள் செல்ல தேவாலயங்கள் பாதைகளை மறுசீரமைப்பு செய்தது.

18 ஆம் நூற்றாண்டின் போது, யோப்பாவை சுற்றியுள்ள கடலோர பகுதிகள் அடிக்கடி கடற் கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்டது. பொருட்கள் இறங்கவும் மற்றும் பயணிகளுக்கும் படுபயங்கர ஆபத்தானதாக இருந்தது.20-ஆம் நூற்றாண்டு வரை, கப்பல்கள் தங்கள் சரக்குகளை கரைக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு படைகள் தங்கியிருக்க வேண்டியிருந்தது.[8]

7 மார்ச் 1799 அன்று பிரான்சு மன்னரா நெப்போலியன் யோப்பாவை முற்றுகையிட்டார்.யோப்பா சூறையாடப்பட்டது. சரணடைவதற்கான இறுதி எச்சரிக்கை கொடுக்கும்போது மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.பிரஞ்சு சிறையில் சரணடைந்த ஆயிரக்கணக்கான முஸ்லீம் வீரர்களை படுகொலை செய்ய நெப்போலியன் கட்டளையிட்டார். [9][10] இன்னும் பலர் வெகு விரைவில் தோன்றிய கொடூரமான பிளேக் தொற்றுநோயால் இறந்தனர்.[11]

இந்த பேரழிவு நிகழ்வுகளுக்கு பிறகு ஓட்டோமான் பேரரசால் கவர்னராக நியமிக்கப்பட்ட முகமது அபு-நபூத் அவர்கள் மகமூதியா பள்ளிவாசல் , சாபில் அபு நபூத் உட்பட பல யோப்பா கட்டிடம் மற்றும் மறுசீரமைப்புப் பணியை தொடங்கினார்.[12]

19 ஆம் நூற்றாண்டில் மக்கள் வசிப்பிடங்கள் மறு கட்டுமானம் பெற்றது.

அமெரிக்க மிஷனரி எலன் கிளேர் மில்லர், 1867 இல் யோப்பாவிற்கு வருகை புரிந்தார்.அவர் கூற்றின்படி யோப்பா நகர மக்கள் 5000 ஆகு‌ம்.இதில் கிறிஸ்துவர் 800 பேர், யூதர்கள் 1000 பேர் மற்ற அனைவரும் முஸ்லீம்கள் ஆவர்.[13] [14]

ஆங்கிலேய ஆட்சி காலம்[தொகு]

பிரித்தானிய ஆட்சி காலம் போது, யூத மற்றும் அரேபிய மக்கள்இடையே பதற்றம் அதிகரித்தது.1920 மற்றும் 1921 போது அரபு தாக்குதலுக்குள்ளாகும் பல யூத குடியிருப்பாளர்கள் வெளியேறி டெல் அவிவ் நகரில் குடியமர்த்த பட்டனர்.1922 ஆம் ஆண்டின் இறுதியில் டெல் அவிவ் நகர மக்கள் தொகை 15,000. 1927 இல் டெல் அவிவ் மக்கள் தொகை 38,000 வரை இருந்தது.

1923 இல், யோப்பா மற்றும் டெல் அவிவ் நகரங்கள் சட்டம் மூலம் இணைக்கப்பட்டது.[15]

அரபு யூத மோதல்கள்[தொகு]

1945 ஆம் ஆண்டில், யோப்பா மக்கள்தொகை 101,580 பேர் இவர்களில் முஸ்லிம்கள் 53,930 பேர், யூதர்கள் 30,820 மற்றும் கிறிஸ்துவர் 16,800 இருந்தனர்.[16] 1947 ஆம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. விசேட ஆணைக்குழு யோப்பா நகரம் யூத மாநிலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.ஆனால் அரபு பெரும்பான்மை மக்கள் உள்ள காரணமாக யூத மாமாநிலத்திற்கு பதிலாக அரபு மாநிலத்தின் ஒரு பகுதியாக யோப்பா இருக்கும் அந்த அரபு நாட்டிற்கு பாலஸ்தீன நாடு எனப் பெயரிடப்படும் என்று 1947 ஐக்கிய நாடுகள் பிரிவினை திட்டம் குறிப்பிட்டுள்ளது. [17]

1948 ஆரம்பத்தில் யோப்பா முஸ்லீம் சகோதரத்துவ குழு சுமார் 400 ஆண்கள் கொண்ட பாதுகாப்பு நிறுவனத்தை பாதுகாவலர்களாக ஏற்பாடு செய்தது.[18]

25 ஏப்ரல் 1948 அன்று,யூத இர்குன் படையால் யோப்பா மீது தாக்குதல் தொடங்கப்பட்டது.இருபது டன் வெடிகுண்டுகள் உடன் இயந்திர துப்பாக்கி கொண்டு யோப்பா முஸ்லிம் மீது தாக்குதல் நடத்த பட்டது.[19][20]

தாக்குதல் தினத்தன்று யோப்பா மக்கள் தொகை, 50,000 மற்றும் 60,000-க்கும் இடையில் இருந்தது. சுமார் 20,000 பேர் ஏற்கனவே நகரம் விட்டு வெளியேறி இருந்தனர்.30 ஏப்ரல் மூலம், 15,000-25,000 மீதமுள்ள மக்கள் தொகை இருந்தன.[21]

தொடர்ந்து வந்த நாட்களில் மேலும் 10,000-20,000 மக்கள் கடல் மார்க்கமாக ஓடிப்போனார்கள்.யூத ஹகானா படை மே 14 ஆம் தேதி நகரை கைப்பற்றியபோது 4,000 பேர் இருந்தனர்.[22] நகரம், துறைமுகம் மற்றும் கிடங்குகள் விரிவாக சூறையாடப்பட்டன.[23][24]

யோப்பா நகரம் 1948 ஆம் ஆண்டு மே 14 ம் தேதி யூத ஹகானா படையால் கைப்பற்றப்பட்டது.[25] பின்னர் யோப்பாவில் தங்கிவிட்ட 3,800 அரேபியர்கள் கடுமையான இராணுவச் சட்டத்தைஉள்ளாக்கப்பட்டனர்.[26]

தற்கால நகரம்[தொகு]

இசுரேல் அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி டெல் அவிவ் மற்றும் யோப்பா நகரங்களை நிரந்தரமாக ஒருங்கிணைக்க முடிவு செய்தது. ஆனால் உண்மையான ஐக்கியப்படுத்தலை 24 ஏப்ரல் 1950 வரை ஒத்திவைக்கப்பட்டது.யோப்பா வரலாற்று பெயரை பாதுகாக்கும் பொருட்டு டெல் அவிவ்-யோப்பா என ஆகஸ்ட் 1950 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [27]

பொருளாதாரம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டில், யோப்பா சிறந்த சோப்பு தொழிலால் அறியப்பட்டது. நவீன தொழில் நுட்பம் 1880 களில் உருவானது.[28] மிகவும் வெற்றிகரமான நிறுவனங்கள் எந்திர தொழிற்சாலைகள் மூலம் உலோக வேலைகளை செய்தனர்.[28]

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வரை, யோப்பா நகர ஆரஞ்சு தோப்புகள் விவசாயம் பாரம்பரிய முறைகள் மூலம் அரபு முசுலிம்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. யோப்பா நவீன விவசாயம் 1850 மற்றும் 1860 களில் விவசாய இயந்திரங்கள் கொண்டுவந்த அமெரிக்க குடியேறிகளுக்கும் மற்றும் யூதர்கள் மூலம் நடைபெற்றன.[29]

யோப்பா சிறந்த மாதுளை உற்பத்தியில் புகழ் பெற்றிருந்தது.[30]

மக்கள்தொகை[தொகு]

நவீன யோப்பா யூதர்கள், கிறிஸ்துவர், மற்றும் முஸ்லிம்கள் என பலவகைப்பட்ட மக்கள் தொகை உள்ளது. யோப்பா தற்போது 46,000 குடியிருப்பாளர்கள் கொண்டுள்ளது.இவர்களில் 30,000 இஸ்ரேலிய யூதர்கள் மற்றும் 16,000 அரேபியர்கள் ஆவர்.[31]

முக்கிய இடங்கள்[தொகு]

யோப்பா மணிக்கூண்டு
 • யோப்பா மணிக்கூண்டு சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் நினைவாக 1906 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
 • கிரேக்கம் புராணங்களில் வரும் அழகான ஆந்த்ரோமெடா பாறைகள் பிணைக்கப்பட்டு உள்ளது.[32].
 • ஓட்டோமான் பேரரசால் அருங்காட்சியக மாளிகை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[33] தற்போது அது பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டுள்ளது.[34]
யோப்பா துறைமுக பார்வையில் அல் பகரு பள்ளிவாசல்

மேற்கோள்கள்[தொகு]

 1. One example of this legend is the sixteenth-century French pilgrim Denis Possot who recorded, "Jaffe, est le port de la Terre saincte, anciennement nommé Joppe, faict et construict premierment en ville et cité grande à merveilles et de grant renom, par Japhet, fils de Noé." in his Le Voyage de la Terre Sainte (Geneva: Slatkine Reprints 1971, reprint of Paris edition, 1890, orig. 1532), p. 155.
 2. Another pilgrim, Sir Richard of Guylforde, wrote,"This Jaffe was sometyme a grete Cytie [...] and it was one of the firste Cyties of the worlde founded by Japheth, Noes sone, and beryth yet his name." in the pilgrimage narrative from 1506, recorded by his chaplain in 1511, edited by Sir Henry Ellis (London: Camden Society, 1851), p. 16.
 3. "TEL YAFO EXPEDITION: Excavations at Ancient Jaffa (Joppa)". Tel Aviv University.
 4. "Judges Chapter 5 שׁוֹפְטִים". Judges 5:17 – Gilead abode beyond the Jordan; and Dan, why doth he sojourn by the ships? Asher dwelt at the shore of the sea, and abideth by its bays.
 5. (Jewish War 2.507–509, 3:414–426)
 6. அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் பதிவு: 36-42
 7. Lorenzi, Rossella (15 November 2011), First Arabic Crusader Inscription Found, Discovery News, archived from the original on 1 மே 2012, பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2017 {{citation}}: Check date values in: |accessdate= (help)
 8. W. M. Thomson, The Land and the Book, c. 1860, page 515.
 9. Kahr, Bart, Napoleon and the Polarization of Light (CHE-0349882 and Center on Materials and Devices for Information Technology Research) (PDF), University of Washington, archived from the original (PDF) on 6 பிப்ரவரி 2007, பார்க்கப்பட்ட நாள் 31 May 2011 {{citation}}: Check date values in: |archive-date= (help)
 10. Jacques-François Moit (1814). Mémoires pour servir à l'histoire des expéditions en Égypte et en Syrie., quoted in Véronique Nahoum-Grappe (2002). "The anthropology of extreme violence: the crime of desecration". International Social Science Journal 54 (174): 549–557. doi:10.1111/1468-2451.00409. https://archive.org/details/sim_international-social-science-journal_2002-12_54_174/page/549. 
 11. Jaffa: a City in Evolution Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 8–9
 12. Thomson, page 515.
 13. Ellen Clare Miller, 'Eastern Sketches — notes of scenery, schools and tent life in Syria and Palestine'. Edinburgh: William Oliphant and Company. 1871. Page 97. See also Miller's populations of Damascus, எருசலேம், Bethlehem, Nablus and சமாரியா
 14. Thompson (above) writing in 1856 has '25 years ago the inhabitants of the city and gardens were about 6000; now there must be 15,000 at least...' Considering the length of time he lived in the area this may be a more accurate count.
 15. Ronen Shamir (2013) Current Flow: The Electrification of Palestine. Stanford: Stanford University Press
 16. Supplement to a Survey of Palestine (p. 12-13) which was prepared by the British Mandate for the United Nations in 1946-7
 17. A/RES/181(II)(A+B), Resolution 181 (II). Future government of Palestine (UN Partition Plan details), United Nations General Assembly, 29 November 1947, archived from the original on 16 ஏப்ரல் 2013, பார்க்கப்பட்ட நாள் 7 ஜனவரி 2017, The area of the Arab enclave of Jaffa consists of that part of the town-planning area of Jaffa which lies to the west of the Jewish quarters lying south of Tel-Aviv, to the west of the continuation of Herzl street up to its junction with the Jaffa-Jerusalem road, to the south-west of the section of the Jaffa-Jerusalem road lying south-east of that junction, to the west of Miqve Israel lands, to the north-west of Holon local council area, to the north of the line linking up the north-west corner of Holon with the north-east corner of Bat Yam local council area and to the north of Bat Yam local council area. The question of Karton quarter will be decided by the Boundary Commission, bearing in mind among other considerations the desirability of including the smallest possible number of its Arab inhabitants and the largest possible number of its Jewish inhabitants in the Jewish State. {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
 18. Herbert Pritzke 'Bedouin Doctor — The adventures of a German in the Middle East', Translated by Richard Graves. Weidenfeld and Nicolson, London. 1957. Copyright Ullstein and Co, Vienna, 1956. Page 149: 'At that time the Arab Brigade in Jaffa consisted of seven Germans, one hundred and fifty Jugoslavs, thirty Egyptians and two hundred Lebanese and Syrians. There were very few Palestinians among them as these preferred irregular warfare with the National Guard ...'
 19. Morris, page 95.
 20. Menachem Begin, 'The Revolt — story of the Irgun'. Translated by Samuel Katz. Hadar Publishing, Tel Aviv. 1964. pp. 355–371.
 21. Begin, page 363.
 22. Morris, page 101: 'On 18 May Ben-Gurion visited the conquered city for the first time and commented:"I couldn't understand: Why did the inhabitants of Jaffa leave?"'
 23. Jon Kimche, 'Seven Falen Pillars; The Middle East, 1915–1950'. Secker and Warburg, London. 1950. Page 224 :'the orgy of looting and wanton destruction which hangs like a black pall over almost all the Jewish military successes.'
 24. Karpel, Dalia (14 February 2008). "Wellsprings of memory". Haaretz – Israel News இம் மூலத்தில் இருந்து 25 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090325111844/http://www.haaretz.com/hasen/spages/952270.html. 
 25. Yoav Gelber, Independence Versus Nakba; Kinneret–Zmora-Bitan–Dvir Publishing, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-517-190-6, p.104
 26. Ravit Goldhaber & Izhak Schnell; Schnell (2007). "A Model of Multidimensional Segregation in the Arab Ghetto in Tel Aviv-Jaffa". Tijdschrift voor Economische en Sociale Geografie 98 (5): 603–620. doi:10.1111/j.1467-9663.2007.00428.x. 
 27. Arnon Golan (1995), The demarcation of Tel Aviv-Jaffa's municipal boundaries, Planning Perspectives, vol. 10, pp. 383–398.
 28. 28.0 28.1 Jaffa: A City in Evolution Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 256–257.
 29. Jaffa: A City in Evolution Ruth Kark, Yad Yitzhak Ben-Zvi, Jerusalem, 1990, pp. 244–246.
 30. Thomson p.517: Sidon has best bananas, Jaffa the best pomegranates, oranges of Sidon are more juicy and have richer flavour. Jaffa oranges hang on the trees much later, and will bear shipping to distant regions.'
 31. "Universal Jerusalem". Archived from the original on 2014-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.
 32. Pliny the Elder. "v.69". Natural History.
 33. "Old Jaffa Museum". Archived from the original on 2008-12-26.
 34. "Project Partners". The Jaffa Cultural Heritage Project. The Jaffa Museum of Archaeology. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 35. "History of Jaffa", ArtMag, Université Européenne de la Recherche, பார்க்கப்பட்ட நாள் 18 December 2012
 36. "Al-Bahr mosque in Jaffa". ArchNet Digital Library. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோப்பா&oldid=3925618" இலிருந்து மீள்விக்கப்பட்டது