உள்ளடக்கத்துக்குச் செல்

மகமூதியா பள்ளிவாசல், டெல் அவிவ்

ஆள்கூறுகள்: 32°03′18″N 34°45′20″E / 32.054917°N 34.75548°E / 32.054917; 34.75548
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகமூதியா பள்ளிவாசல்
ஜாபா தெருவில் இருந்து பள்ளிவாசல் முகப்பு தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் யோப்பா, டெல் அவிவ், இசுரேல்
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைசெயல்பாடில் உள்ளது.

மகமூதியா பள்ளிவாசல் (Mahmoudiya Mosque), எபிரேயம்: מסגד מחמודיה‎) இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் யோப்பா பகுதியில் உள்ள பழமையான பள்ளிவாசல் ஆகும்.

அமைப்பு

[தொகு]

இப்பள்ளிவாசலில் இரண்டு பெரிய முற்றங்கள் மற்றும் மூன்றாவதாக சிறிய முற்றமும் சுற்றி உள்ளது.வாயில்கள், மற்றும் முற்றங்கள் ஒட்டோமான் பேரரசு ஆட்சியில் பல்வேறு கட்டங்களாக 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் முழுவதும் கட்டப்பட்டது.[1]

வரலாறு

[தொகு]
Courtyard of the mosque

மகமூதியா பள்ளிவாசல் கவர்னர் ஷேக் முகமது அல்-கலிலி உத்தரவின் பேரில் 1730 ல் கட்டுப்பட்டது.பள்ளிவாசல் தெற்கு சுவரில் பதிக்கப்பட்ட நீரூற்று 18 நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏக்கர் கவர்னர் சுலைமான் பாஷா காலத்தில் கட்டப்பட்டது.[1].பெரும்பாலான தற்போதைய பள்ளிவாசல் ஒட்டோமான் பேரரசின் காசா மற்றும் ஜாபா கவர்னர் முகமது அபு-அபு-நபுட் அவர்களால் 1812 ஆண்டில் கட்டப்பட்டது. பெரிய செவ்வக பிரார்த்தனை மண்டபத்தில் இரண்டு பெரிய ஆழமற்ற குவிமாடங்கள் உள்ளன.அதன் அருகில் மெல்லிய மினார் உள்ளது.[1][2]

அமைவிடம்

[தொகு]
பள்ளிவாசல் மினார்

மகமூதியா பள்ளிவாசல் பழைய ஜாபா நகர வடகிழக்கு மூலையில் உள்ளது.19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், ஜாபா பள்ளிவாசல் சுவர்கள் தகர்க்கப்பட்டன.பின் 20 ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப் பட்டது.இன்று, பள்ளிவாசல் வெளிப்புற சுவர்களில் பெரும்பாலும் கடைகள் உள்ளன.பிரார்த்தனை மண்டபத்தில் இரண்டு மேலோட்டமான குவிமாடங்கள் மற்றும் துணை குவிமாடம் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து தெரியும். பழைய ஜாபா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உயரமான மினார் உடைய நிழல் பிரதானமானதாக அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Al-Mahmudiyya Mosque பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம் Archnet Digital Library.
  2. Dumper, Stanley, and Abu-Lughod, 2007, p.202.

புத்தக ஆதாரங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mahmoudiya mosque in Jaffa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Dumper, Michael; Stanley, Bruce E.; Abu-Lughod, Janet L. (2007), Cities of the Middle East and North Africa: A Historical Encyclopedia, ABC-CLIO, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781576079195
  • Kana`an, Ruba (2001), Waqf, Architecture, and Political Self-Fashioning: The Construction of the Great Mosque of Jaffa by Muhammad Aga Abu Nabbut. பரணிடப்பட்டது 2011-06-04 at the வந்தவழி இயந்திரம் In Muqarnas XVIII: An Annual on Islamic Art and Architecture. Gülru Necipoglu (ed.). Leiden: E.J. Brill. (.htlm link)