உள்ளடக்கத்துக்குச் செல்

யூபிலி (கிறித்தவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூபிலி அல்லது புனித ஆண்டு என்பது கிறித்தவத்திலும் யூதத்திலும் சிறப்பு ஆண்டாகும். இதில் பாவம் போக்கவும், பாவ தண்டனை நீக்கவும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். விவிலியத்தின் லேவியர் நூல் இவ்வகை யூபிலி ஆண்டு ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடவும், இவாண்டில் நாட்டில் வாழும் அடிமைகள் மற்றும் கைதிகளுக்கு தன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும், கடவுளின் இரக்கம் நிறைவாகப் பெறப்படும் ஆண்டாகவும் அது இருக்கும் எனவும் விவிலியம் குறிக்கின்றது.[1] விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளின்படி யூதர்கள் தங்களின் கோத்திரங்களின்படி இசுரேலில் வாழ்ந்தால் மட்டுமே இதனை கடைபிடிக்க இயலும். ஆதலால் சுமார் கி.மு 600இல் ரூபன், காட் மற்றும் மனாசே கோத்திரங்களின் சிறைபிடிப்புக்குப் பின்பு இதனைக் கடைபிடிப்பது இயலாமல் போயிற்று.[2]

கிறித்தவத்தில் இம்மரபினை கி.பி. 1300இல். திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ் தொடங்கினார். அன்று முதல் 25 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலியும், தேவைக்கேற்ப சிறப்பு யூபிலியும் கொண்டாடப்படுகின்றது. கத்தோலிக்கர் இவ்வகை ஆண்டுகளில் புனித இடங்களுக்கு, சிறப்பாக உரோமை நகருக்கு திருப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.

யூபிலி ஆண்டுகளின் பட்டியல்

[தொகு]
  1. 1300 : திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸ்
  2. 1350 : திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட்
  3. 1390 : திருத்தந்தை ஆறாம் அர்பனால் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸால் நடத்தப்பட்டது
  4. 1400 : திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ்
  5. 1423 : திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்
  6. 1450 : திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலாஸ்
  7. 1475 : திருத்தந்தை இரண்டாம் பவுலால் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸால் நடத்தப்பட்டது
  8. 1500 : திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர்
  9. 1525 : திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்
  10. 1550 : திருத்தந்தை மூன்றாம் பவுலால் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தை மூன்றாம் ஜூலியுஸால் நடத்தப்பட்டது
  11. 1575 : திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
  12. 1600 : திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்
  13. 1625 : திருத்தந்தை எட்டாம் அர்பன்
  14. 1650 : திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்
  15. 1675 : திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
  16. 1700 : திருத்தந்தை பன்னிரண்டாம் இன்னசெண்டால் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்டால் நடத்தப்பட்டது
  17. 1725 : திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
  18. 1750 : திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்
  19. 1775 : திருத்தந்தை பதினான்காம் கிளமெண்டால் அறிவிக்கப்பட்டு, திருத்தந்தை ஆறாம் பயஸால் நடத்தப்பட்டது
  20. 1825 : திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ
  21. 1875 : திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (without great solemnity)
  22. 1900 : திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
  23. 1925 : திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
  24. 1933 : திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
  25. 1950 : திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
  26. 1966 : திருத்தந்தை ஆறாம் பவுல்
  27. 1975 : திருத்தந்தை ஆறாம் பவுல்
  28. 1983 : திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
  29. 2000 : திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
  30. 2016 : திருத்தந்தை பிரான்சிசு[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. லேவியர் 25:8-13
  2. Yovel | Yovel | Jubilee Year
  3. "திருத்தந்தை பிரான்சிசுannounces Extraordinary Jubilee Year". Archived from the original on 2015-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபிலி_(கிறித்தவம்)&oldid=3569326" இலிருந்து மீள்விக்கப்பட்டது