யும்தாங் மலர்களின் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யும்தாங் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயம்
Yumthang Valley of Flowers sanctuary

சிக்கிம் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயம்
சிக்கிம் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயத்தின் தோற்றம்
சிக்கிம் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயத்தின் தோற்றம்
அடைபெயர்(கள்): சிக்கிம் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Sikkim" does not exist.இந்தியா சிக்கிம்மில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°49′36″N 88°41′45″E / 27.8268°N 88.6959°E / 27.8268; 88.6959ஆள்கூற்று: 27°49′36″N 88°41′45″E / 27.8268°N 88.6959°E / 27.8268; 88.6959
நாடு இந்தியா
மாநிலம்சிக்கிம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுஎசு.கே

யும்தாங் மலர்களின் பள்ளத்தாக்கு (Yumthang Valley) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திலுள்ள வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் காணப்படும் ஓர் இயற்கை சரணாலயம் ஆகும். சிக்கிம் பள்ளத்தாக்கின் மலர்கள் சரணாலயம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இமயமலையால் சூழப்பட்ட இச்சரணாலயத்தில் ஆறுகள், வெப்ப நீரூற்றுகள், காட்டெருமைகள், புற்கள் நிறைந்த பசும்புல் மேய்ச்சல் நிலங்கள் என இயற்கை சூழ்ந்து கிடக்கிறது. மாநிலத் தலைநகரான காங்டாக் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு மேலே 3,564 மீட்டர் (11,693 அடி) உயரத்தில் இச்சரணாலயம் அமைந்துள்ளது [1][2][3][4].

பொதுவாக மலர்கள் பள்ளத்தாக்கு என்ற பெயரில் இச்சரணாலயம் பிரபலமாக அறியப்படுகிறது [5]. சிங்பா ரோடொடெண்ட்ரான் சரணாலயம் இப்பள்ளத்தாக்கில்தான் உள்ளது. இம்மாநிலத்திற்கே உரிய சிறப்புவகை மரமான ரோடோடெண்ட்ரான் மரம் 24 வகைகளில் இங்குள்ளன. பிப்ரவரியின் பிற்பகுதியிலிருந்து சூன் மாத நடுப்பகுதி வரை இங்கு பூக்கும் காலமாகும். இக்காலத்தில் எண்ணற்ற மலர்கள் வண்ணமயமாகப் பூத்துக் குலுங்கி பள்ளத்தாக்கை வானவில்லைப் போன்ற கம்பளத்தால் அலங்கரிக்கும் [6]. டீசுட்டா ஆற்றின் ஒரு கிளை நதி பள்ளத்தாக்கையும் அருகில் உள்ள லாசங்கு நகரத்தையும் கடந்து பாய்கிறது. டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே பனிச்சரிவு காரணமாக யும்தாங் மூடப்படுகிறது. பள்ளத்தாக்கில் ஒரு சூடான வசந்த காலமும் இருக்கிறது.

வனத்துறைக்கு சொந்தமான ஒரேயொரு தங்கும் விடுதி மட்டுமே இங்கிருக்கும் நிரந்தரமான குடியிருப்புப் பகுதியாகும். வசந்தகால மாதங்களில் இப்பகுதியில் காணப்படும் ரோடோடெண்ட்ரான் மரங்கள், பிரிமுலாசியே குடும்பத்தைச் சேர்ந்த பிரிமுலாசுகள், பாப்பீக்கள், ஐரிசு தாவரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கும். கோடை கால மாதங்களில் கிராமவாசிகள் மேய்ச்சலுக்காக பள்ளத்தாக்கின் உயரத்திற்கு தங்கள் கால்நடைகளை ஓட்டிவருகிறார்கள் [7]. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளின் வருகையால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் சாத்தியம் உள்ளது. பள்ளத்தாக்கில் பனிச்சறுக்கு விளையாட்டும் நடத்தப்படுகிறது [8][9].

சாலை வழிப் பயணம்[தொகு]

யும்தாங்கில் முரட்டுத்தனமாக தோன்றும் இமயமலைத் தொடர்

காங்டாக்கிலிருந்து சுற்றுலா பயணிகள் தனி வாகனம் அல்லது பகிர்வு வாகனம் மூலம் அருகில் மக்கள் வசிக்கும் கிராமமான லாசங்கிற்கு சென்றடையலாம். இங்கு இரவில் தங்கிவிட்டு பின்னர் யும்தாங் பள்ளத்தாக்கை நோக்கி பயணிக்கலாம். யும்தாங்கிற்கு நேரடிப் பயணம் எளிதானது அல்ல, ஏனெனில் சாலைகள் பொதுவாக பனிமூட்டமாக இருக்கும். மாலை 5.30 மணிக்குள்ளாகவே இருட்டு வந்துவிடும். லாசங்கில் இருந்து சுமார் இரண்டு மணிநேர பயணத்திற்கு பின்னரே பள்ளத்தாக்கை அடைய முடியும். இது காங்க்டாக்கில் இருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://northbengaltourism.com/yumthang/
  2. http://www.mytourideas.com/yumthang-valley.php
  3. http://sikkim.nic.in/sws/lak_yum.htm
  4. http://www.east-himalaya.com/sikkim/yumthang.htm
  5. "Archived copy". மூல முகவரியிலிருந்து January 10, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 17, 2013.
  6. Yumthang bloom season
  7. Choudhury, A.U. (2011). Tourism pressure on high elevation IBAs. Mistnet 12(1): 11-12.
  8. [1]
  9. "Archived copy". மூல முகவரியிலிருந்து November 27, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 13, 2013.

புற இணைப்புகள்[தொகு]