உள்ளடக்கத்துக்குச் செல்

யங்கோன் பிரதேசம்

ஆள்கூறுகள்: 17°0′N 96°10′E / 17.000°N 96.167°E / 17.000; 96.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யங்கோன் பிரதேசம்
ရန်ကုန်တိုင်းဒေသကြီး
மியான்மரின் மாநிலம்
யங்கோன் பிரதேச அதிகாரப்பூர்வ சின்னம்
கொடி
Location of Yangon Region in Myanmar
Location of Yangon Region in Myanmar
ஆள்கூறுகள்: 17°0′N 96°10′E / 17.000°N 96.167°E / 17.000; 96.167
மியான்மரின் மாநிலம்கீழ் மியான்மர்
தலைநகரம்யங்கோன்
அரசு
 • LegislatureYangon Region Hluttaw
பரப்பளவு
 • மொத்தம்10,276.7 km2 (3,967.9 sq mi)
 • பரப்பளவு தரவரிசைபரப்பளவின்படி மியான்மரின் நிர்வாகப் பிரிவுகளுள் 14 ஆவது நிலை
மக்கள்தொகை
 (2014 மக்கட்தொகை)[1]
 • மொத்தம்73,60,703
 • தரவரிசை1st
 • அடர்த்தி720/km2 (1,900/sq mi)
வகைப்பாடு
 • இனக்குழுக்கள்பாமர், காரென், ராகைன், சீனர்கள், இந்தியர்கள், மான்
 • சமயம்பௌத்தம், கிறிஸ்தவம், இந்து சமயம், இசுலாம்
நேர வலயம்ஒசநே+06:30 (MST)
ஐஎசுஓ 3166 குறியீடுMM-06
எழுத்தறிவு விகிதம் (2014)96.6%[2]
இணையதளம்eyangon.gov.mm

யங்கோன் பிரதேசம் (Yangon Region, முன்னர் ரங்கூன் பகுதி) மியான்மரின் ஒரு நிர்வாக பிரிவுப் பிராந்தியம் அல்லது மாநிலமாகும். இது கீழ் மியான்மரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி வடக்கு மற்றும் கிழக்கில் பாகோ பகுதியையும், தெற்கே மார்டாபன் வளைகுடாவையும், மேற்கில் அயெய்வரிடி பகுதியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

யங்கோன் மாநிலத்தின் தலைநகரமான யங்கோன் நகரம் முன்னாள் தேசிய தலைநகரமாகவும், நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது. நாட்டின் மிக நன்கு வளர்ச்சியடைந்த பகுதியாகவும் பிரதான சர்வதேச நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த மாநிலத்தின் பரப்பளவு 10,170 கிமீ (3,930 சதுர மைல்). 10,170 km2 (3,930 sq mi).[3]

வரலாறு

[தொகு]

வரலாற்று ரீதியாக இப்பகுதி முழுவதும் மொன் இன மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. அரசியல் ரீதியாக, இந்தப் பகுதி 1057 ஆண்டுக்கு முன்னதாக மொன் இராச்சியங்களால் கட்டுப்படுத்தப்பட்டது. 1057 ஆண்டுக்குப் பின்னர், சில விதிவிலக்குகளுடன், வடக்கில் பர்மன் இராச்சியங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டுகள் வரையும் (1287-1539) 18 ஆம் நூற்றாண்டில் சிறிது காலமும் (1740-1757), இந்தப் பிராந்தியத்தின் கட்டுப்பாடு பகோ அடிப்படையிலான மொன் இராச்சியத்தின் வசம் திரும்பியது. தான்லின் (சிரியாம்) மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் 1599 முதல் 1613 ஆண்டு வரை போர்த்துகீசியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.[4] பல நூற்றாண்டுகளாக, கீழ் மியான்மரில் 18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை மிக முக்கிய துறைமுக நகரமாக தன்லின் விளங்கியது. பின்னாளில் மன்னர் ஆலாங்பாயா ஆற்றின் ஓரத்தில், டகான் என்ற பெயரில் அமைந்த மிகப்பெரிய சவேடகன் அடுக்குத் தூபி அருகே ஒரு சிறிய கிராமத்தைத் தேர்ந்தெடுத்து விரிவுபடுத்திய பின்னர் தன்லினின் புகழ் குறையத் தொடங்கியது.[5]

முதல் ஆங்கிலோ-பர்மிய போரில் (1824-1826) ஆங்கிலேயர் முதன்முதலாக யங்கோனைக் கைப்பற்றினர், ஆனால் போருக்குப் பிறகு பர்மாவின் நிர்வாகத்தைத் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. பிரித்தானியப் பேரரசு இரண்டாம் ஆங்கில-பர்மிய போரில் 1852 ஆம் ஆண்டில் யங்கோன் மற்றும் கீழ் பர்மாவை கைப்பற்றியது. பின்னர் பர்மாவின் வர்த்தக மற்றும் அரசியல் மையமாக யங்கோன் நகரை மாற்றியது. யங்கோன், பிரித்தானிய பர்மா மற்றும் ஹந்தாவாடி மாகாணத்தின் தலைநகரமாகவும் இருந்தது, இப்பகுதி இன்று யங்கோன் மற்றும் பகோ பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. பிரித்தானிய பர்மிய அரசு வேலைசெய்வதற்காக இந்தியாவில் இருந்து தொழிலாளர்களையும் மற்றும் பொது ஊழியர்களையும் யங்கோனிற்கு அழைத்து வந்தது. பின்னாளில் 1930 ஆண்டில் யங்கோன் முழுவதும் இந்தியர்களால் நிறைந்திருந்தது மேலும் பர்மியர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாக குறைந்து விட்டது. முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு இடையில், யங்கோன் நகரம் பர்மிய தேசியவாத இயக்கத்தின் மையமாக இருந்தது. ஆங் சான், யு நு, ஊ தாண்ட் மற்றும் நீ வின் போன்ற பல எதிர்கால பர்மிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தனர்.[6] யங்கோன் பிராந்தியம் ஏப்ரல் 1942 முதல் மே 1945 வரை சப்பானின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது.

சனவரி 1948 ஆண்டில் மியன்மார் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றப் பிறகு, ஹந்தாவாடி மாகாணமானது அதன் தலைநகரமாக யங்கோனைக் கொண்டு பெகு (பகோ) பிரிவு என மறுபெயரிடப்பட்டது. 1964 ஆம் ஆண்டில், யங்கோன் மாகாணம் பகோ மாகாணத்திலிருந்து பிரிந்தது. பகோ மாகாணத்தின் தலைநகர் யங்கோன்னில் இருந்து பகோவிற்கு மாற்றப்பட்டது. சூன் 1974 ஆண்டில், ஹந்தாவாடி மற்றும் ஹம்வாபி நகரங்கள் பகோ பிரிவிலிருந்து யங்கோன் பிரிவுக்கு மாற்றப்பட்டன.[7]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.
  2. The Union Report: Census Report Volume 2. The 2014 Myanmar Population and Housing Census. Nay Pyi Taw: Ministry of Immigration and Population. 2015. p. 12.
  3. "Yangon Division". Bookrags.com. பார்க்கப்பட்ட நாள் 2008-12-25.
  4. Maung Htin Aung (1967). A History of Burma. New York and London: Columbia University Press.
  5. "History of Yangon". Myanmar's Net. Archived from the original on 2008-09-21. பார்க்கப்பட்ட நாள் 2008-12-25.
  6. Thant Myint-U (2006). The River of Lost Footsteps, Histories of Burma. New York: Farrar, Straus and Giroux. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-374-16342-6.
  7. "Myanmar Divisions". Statoids. பார்க்கப்பட்ட நாள் 2009-04-10.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யங்கோன்_பிரதேசம்&oldid=3925612" இலிருந்து மீள்விக்கப்பட்டது