ஆங் சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங் சான்
Aung San
பெப்ரவரி 13, 1915ஜூலை 19, 1947
Aung San color portrait.jpg
ஆங் சான்
பிறந்த இடம் பர்மா
இறந்த இடம் ரங்கூன், பர்மா
சார்பு பர்மா தேசிய இராணுவம்
பாசிசத்துக்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி
தரம் மேஜர் ஜெனரல்
சமர்/போர்கள் இரண்டாம் உலகப் போர்

ஜெனரல் ஆங் சான் (Aung San; பெப்ரவரி 13 1915ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர், தேசியவாதி, இராணுவ மேஜர், மற்றும் அரசியல்வாதி ஆவார்.

ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26, 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார். பர்மிய மக்களால் "போகியோக்" (ஜெனரல்), என அன்புடன் அழைக்கப்படும் இவரின் பெயர் இன்றும் பர்மிய அரசியலில் பேசப்படும் ஒருவர்.

ஆங் சான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் எதிர்க்கட்சித் தலைவியுமான ஆங் சான் சூ கீயின் தந்தையாவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_சான்&oldid=2090869" இருந்து மீள்விக்கப்பட்டது