மராக் யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மராக் யு
မြောက်‌ဦးမြို့
சிதி-தாங் தூபியில் இருந்து மராக் யு
சிதி-தாங் தூபியில் இருந்து மராக் யு
ஆள்கூறுகள்: 20°35′45.90″N 93°11′38.58″E / 20.5960833°N 93.1940500°E / 20.5960833; 93.1940500ஆள்கூறுகள்: 20°35′45.90″N 93°11′38.58″E / 20.5960833°N 93.1940500°E / 20.5960833; 93.1940500
நாடு மியான்மர்
பகுதிராகினி மாநிலம்
மாவட்டம்மராக் யு
நகரம்மராக் யு நகரம், மியான்மர்
உருவான ஆண்டு16 நவம்பர் 1430
மக்கள்தொகை (
2014 மக்கள் தொகை கணக்கின் படி)
1,89,630[1]
நேர வலயம்MMT (ஒசநே+6.30)


மராக் யு என்பது மிகத் தொன்மையான ஒரு நகரம், இந்த நகரம் மியான்மரில் உள்ள வடக்கு ராகினி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பழமையான நகரம். இதற்கு முன்னால் மயோஹங் என்றழைக்கப்பட்டுள்ளது. இது மராக் யு டவுன்ஷிப்பின் தலைநகரமாகும். மேலும் 1430 ஆண்டு முதல் 1785 ஆண்டு வரை, இது மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த ராகினி (அராக்கனீஸ்) இராச்சியம் என்ற மராக் யு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது.

புவியியல்[தொகு]

மராக் யு நகரம் கலாடன் ஆற்றில் இருந்து கிட்டதட்ட 11 கிமீ கிழக்காக அதன் சிறு கிளை நதி அமைந்திருக்கும் பகுதியில் உள்ளது. இந்த நகரம், கலாடனின் தரை மண்டலத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ராகினி யோமாவின் சிறிய பகுதி மீது அமைந்துள்ளது. இதனால், சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மலைப்பாங்கான நிலப்பரப்பு, சதுப்பு நிலங்கள், ஏரிகள் மற்றும் ஏராளமான ஏரிகள் உள்ளன.

காலநிலை[தொகு]

மராக் யு நகரம் மற்றப் ராகினி மாநிலத்தில் உள்ள பகுதிகள் போல கடற்கரை ஒட்டி இருப்பதால் இதன் வெப்பநிலை ஒரு கடற்கரை வெப்பமண்டல பருவ மழைக்காடு பகுதியில் உள்ளது. இந்த நகரம் தென்மேற்கு பருவமழை மூலம் ஒரு வருடத்தில் பெரும் மழையின் அளவு சுமார் 1200 மில்லிமீட்டர் (47 அங்குலம்) பெறுகிறது, இதனால் இந்தப் பகுதி மியான்மரில் மிக ஈரப்பதமான பகுதிகளில் ஒன்றாகும். [2] மழைக்காலம் பொதுவாக மே மாதத்தில் தொடங்கி அக்டோபர் மத்தியில் முடிவடைகிறது. [3]

மராக் யு வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ள போதிலும், வடகிழக்கு பருவ மழையால் குறைந்த வெப்பநிலையை அடைகிறது. குளிர்கால பருவத்தில் அக்டோபரிலிருந்து மார்ச் வரை, வெப்பநிலை 13 °C (55 °F) வரை குறையும். [4] இந்தப் பருவம் மியான்மரின் சுற்றுலா பருவத்தோடு ஒத்துள்ளது.

சொல்லிலக்கணம்[தொகு]

சில ராகினி அறிஞர்கள் மராக் யு என்பதன் பொருள் தொன்மையான அரக்கனீஸ் மொழியில் முதல் சாதனை என்று கூறுகிறார்கள். இது அரக்கனீஸ் கதையை அடிப்படையாகக் கொண்டது, 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பியுவால் படையெடுப்பு ஒன்றை மரோ இளவரசன், பாய் பரு மூலம் அரக்கனீசால் அழிக்க முடிந்தது. பியு படையெடுப்பாளர்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இளவரசர் தனது தந்தையை சூழ்ச்சியால் கொன்று ஆட்சியை கைப்பற்றிய தனது மாமாவை வெண்று மகுடம் சூட்டிக்கொண்டார். இது அவரின் முதல் சாதனையாக கருதப்பட்டதால் இந்நகரத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது. [5]

புராணக்கதை[தொகு]

பர்மிய புராணக்கதைகளில் மராக் யு பெயர்காரணம் வேறு விதமாக கூறப்பட்டுள்ளது, ஒரு தனிமையில் வாழ்ந்த பெண் குரங்கு ஒரு மயிலை சந்தித்து அதனோடு வாழத் தொடங்கியது. அதன் மூலம் ஒரு முட்டையை ஈன்றது. அந்த முட்டையில் இருந்து ஒரு மகன் தோன்றினார். அவன் ஒரு வலிமைமிக்க இளவரசன் ஆக வளர்ந்தார். அவர் அங்குள்ள காட்டை அழித்து மராக் யு நகரத்தை உருவாக்கினார். இதன் படி மராக் யு என்றால் குரங்கின் முட்டை என்பது பொருள். [6]

வரலாறு[தொகு]

1433 ஆம் ஆண்டில், மன்னர் மின் சாவ் மோன், மராக் யு வை நிறுவி, ஒன்றுபட்ட அராக்கனீஸ் இராச்சியத்தின் கடைசி தலைநகரமாக உருவாக்கினார். பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த நகரம் 160,000 மக்கள் வாழும் நகரமாக இருந்தது [7] 1784 ஆண்டில் பர்மா கோன்பாங் வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றும் வரை மராக் யு நகரம் மராக் யு இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்நகரம் மயோஹங் என்றழக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mrauk-U (District, Myanmar) - Population Statistics and Location in Maps and Charts". www.citypopulation.de (in ஆங்கிலம்). 19 January 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://media.lonelyplanet.com/shop/pdfs/744-Myanmar__Burma__-_Western_Myanmar__Chapter_.pdf
  3. http://www.journeysmyanmar.com/rain_fall.htm
  4. http://www.journeysmyanmar.com/temperature.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2011-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2011-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-07-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மராக்_யு&oldid=3361049" இருந்து மீள்விக்கப்பட்டது