உள்ளடக்கத்துக்குச் செல்

சிதி-தாங் கோவில்

ஆள்கூறுகள்: 20°35′51″N 93°11′35″E / 20.59750°N 93.19306°E / 20.59750; 93.19306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதி-தாங் கோவில்
வெற்றிக்கான கோவில்
சிதி-தாங் கோவில்
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்20°35′51″N 93°11′35″E / 20.59750°N 93.19306°E / 20.59750; 93.19306
சமயம்தேரவாத பௌத்தம், பௌத்தம்

சிதி-தாங் கோவில் பர்மாவின் (மியான்மர்) இராகினி மாநிலம், மராக் யு நகரத்தில் உள்ளது. இந்தக் கோவிலை வெற்றியின் கோவில் என்றும் 80,000 புத்தர் உருவங்கள் கொண்ட கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிதத்தாங் என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

வங்காளத்தை வென்றதன் நினைவாக மன்னர் மின் பார்ரால் 1535-1536 ஆண்டுகளில் இந்தக் கோவிலை கட்டினார். மேலும் இந்தக் கோவில் மன்னரின் அரண்மனைக்கு வடக்கே போகோங் மலையில் மேற்கு முகப்பகுதியில் மற்றும் அன்டா-தின் கோயிலுக்கு அருகில் உள்ளது.

பர்மாவில் காணப்படும் பல பௌத்த கோயில்களில் இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது: ஒரு மத்திய மணி வடிவ தூபி, நான்கு மூலைகளிலும் சிறிய தூபிகள், அவற்றைச் சுற்றிளும் பல சிறிய தூபிகளாலும் நிறைந்துள்ளது.கோவிலின் கிழக்கே, அண்மையில் (சுமார் 75 ஆண்டு பழமையானது) தொடர்ச்சியான மாடிப் படிகளும், தசாங்ளும் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளது.

கோயிலின் மையத்தில் ஒரு மைய மண்டபம் உள்ளது, இது எளிதில் செல்லும் வகையில் உள்ளது. நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகள் முக்கிய மண்டபத்தில் உள்ளன, அவற்றில் சில அசல் நிலைகளிலும், மற்றவைகள் அருகிலுள்ள அகழ்வாராய்ச்சி களங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை. இருப்பினும், சிதி-தாங்கின் மிக முக்கியமான அம்சம் மைய மண்டபம் அல்ல, மாறாக பிரதான மண்டபத்தை சுற்றிலும் வளைவாக உள்ள மூன்று அடுக்குகள் போன்ற தாழ்வாரங்கள் தான் முக்கிய அம்சமாகும். ஏனென்றால் ஒவ்வொரு வளையங்களிலும் எண்ணிலடங்கா புத்தர் சிலைகளும், போதிசாதுக்கள், ஆன்மீக தலத்தின் மன்னர்கள், காவல் காக்கும் வீரர்கள், 550 ஜாதகாஸ், அரக்கனீஸ் கலாச்சாரம் மற்றும் உண்மையான மற்றும் கற்பனை விலங்குகள் போன்ற அறிய தொண்மையான தொகுப்புகளை பார்க்க முடியும்.

சிதி-தாங் கோவில் மராக் யு நகரின் முக்கிய இடமாகவும் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. மேலும் இந்தக் கோவிலின் அருகில் புகழ்பெற்ற ஹடுக்கன்தீன் கோவில் உள்ளது.

கட்டிடக்கலை

[தொகு]

இந்தக் கோவில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. இதன் கட்டிட அமைப்பை பார்க்கும் போது ஒரு பெரிய பதுங்கு குழி போன்ற தோற்றும் கொண்டதாக உள்ளது, அது போரின் போது ஒரு புகலிடமாகவும் மற்ற நேரங்களில் வழிபாட்டுத் தலமாகவும் பயன்படுத்தப்பட்டது என தொல்லியல் வல்லுநர்கள் நம்புவதற்கு வழிவகுத்தனர். அதன் கட்டிடக்கலை, குறிப்பாக தூபி போன்ற அதன் கோபுரம் 16 ஆம் நூற்றாண்டு வங்காளம் (இன்றைய பங்களாதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம்) பாணியை ஒத்திருக்கிறது.[1]

வானிலை சேதம்

[தொகு]

மராக் யு நகரம் கடற்கரை அருகில் வெப்பமண்டல பருவ மழைப் பகுதியில் இருப்பதன் காரணமாக, அதன் கோயில்களில் பெரும்பாலானவை பருவ மழையினால் சேதமடைந்துள்ளன. 2003 ஆம் ஆண்டில் மத்திய தூபிப் பகுதியில் மழை நீர் கசிவு தொடங்கியது, இரண்டு அறைகளில் இருந்த தொன்மையான சில சிலைகளை கரைத்துவிட்டது. மேலும் பாதிப்பை தடுக்க, உள்ளூர் தொல்பொருள் துறை அவசரமாக தூபிகளின் மீது கான்கிரீட் கலவையை ஊற்றினர். இந்த வழிமுறையால் மற்ற சிலைகள் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டது, ஆனால் இது கோவிலின் வெளிப்புற தோற்றத்தையும் மாற்றிவிட்டது, தூபியின் பெரும்பகுதி வடக்கு அரக்கானியை மையமாகக் கொண்டதாக மாறியது.

புகைப்பட தொகுப்பு

[தொகு]


மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதி-தாங்_கோவில்&oldid=3499106" இலிருந்து மீள்விக்கப்பட்டது