உள்ளடக்கத்துக்குச் செல்

ம. திருமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம.திருமலை

முனைவர் ம. திருமலை (பி.1953)[1], மேனாள் துணைவேந்தர், தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.

பிறப்பு

[தொகு]

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். [2]

கல்வி

[தொகு]

இவர் மதுரை மாவட்டம், சோழவந்தானில் பள்ளிப் படிப்பையும், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயகாந்தன், தகழி சிவசங்கரன் பிள்ளை நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது மேற்பார்வையில் 30 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். [1]

பணி

[தொகு]

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர், நூல் விமர்சன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச்சிறப்பு அலுவலர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 31 ஆண்டுகள் அங்கு பணியாறறியுள்ளார். [2] அப்பல்கலைக்கழகத்தின் தமிழியற் புலத்தில் உள்ள ஒப்பிலக்கியத்துறையில் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். [1] பிப்ரவரி 10 2012 முதல் பிப்ரவரி 9 2015 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.

நூல்கள்

[தொகு]

நவீன இலக்கிய விமர்சன ஆய்வு நூல்கள் உள்ளிட்ட 26 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகுகின்ற இவருடைய உத்தியானது இலக்கியவாதிகளால் ரசிக்கப்படுவதாகும். [2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._திருமலை&oldid=4087773" இலிருந்து மீள்விக்கப்பட்டது