மோனிகா பேடி
மோனிகா பேடி Monica Bedi | |
---|---|
![]() 8வது ஆப் கி ஆவாசு ஊட்க சிறப்புஅ விருதுகள், 2013ல் பேடி | |
பிறப்பு | 18 சனவரி 1975[1][2] சப்பேவால், ஹோஷியார்பூர், பஞ்சாப், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1994–2017 |
துணைவர் | அபு சலீம் (1999–2007)[3] |
மோனிகா பேடி (Monica Bedi)(பிறப்பு 18 சனவரி 1975) என்பவர் இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் 1990களின் நடுப்பகுதியில் இந்தித் திரைப்படங்களில் அறிமுகமானார். மோனிகாவின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் பியார் இஷ்க் அவுர் மொஹபத் மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகியவை அடங்கும். இவர் பிக் பாஸ் 2 மற்றும் ஜலக் திக்லா ஜா 2 ஆகியவற்றில் பங்கேற்பதற்காகவும், ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சரஸ்வதிச்சந்திராவில் குமான் கவுர் வியாசாகவும் நடித்துள்ளார் .
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
பேடி பஞ்சாபி ஆவார். இவர் பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள சபேவால் கிராமத்தில் பிரேம் குமார் பேடி மற்றும் சகுந்தலா பேடி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் 1979-ல் நோர்வேயின் டிராம்மனுக்கு குடிபெயர்ந்தனர். பேடி, 1995-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார்
சிறைத்தண்டனை[தொகு]
செப்டம்பர் 2002-ல், பேடி மற்றும் அபு சலேம், ஒரு இந்தியக் கும்பல் கைது செய்யப்பட்டு, பின்னர் போர்ச்சுகலில் போலி ஆவணங்கள் மூலம் நாட்டிற்குள் நுழைந்ததற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தனர்.[4] 2006ஆம் ஆண்டில், கற்பனையான பெயரில் கடவுச்சீட்டு வாங்கியதற்காக பேடியை இந்திய நீதிமன்றம் தண்டித்தது.[5] நவம்பர் 2010-ல், இந்திய உச்ச நீதிமன்றம் இவரது தண்டனையை உறுதிசெய்தது. ஆனால் சிறைத் தண்டனையைப் பேடி ஏற்கனவே அனுபவித்த காலத்திற்குக் குறைத்தது.[6][7] பாலிவுட்டில் மோனிகா பேடிக்காக அபு தனது குற்றவியல் தொடர்பினைப் பயன்படுத்தி நடித்ததாகப் பத்திரிகைகள் உட்பட பல்வேறு செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
தொழில்[தொகு]
டி. ராமா நாயுடு தயாரித்த தெலுங்கு மொழித் திரைப்படமான தாஜ்மகாலில் (1995) பேடிக்கு முதல் பாத்திரம் கிடைத்தது. ராமா நாயுடு இவரை சிவய்யா மற்றும் ஸ்பீட் டான்சர் படங்களிலும் நடிக்க வைத்தார்.[8] 1995ஆம் ஆண்டு சுரக்ஷா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பேடி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2-ல் பங்கேற்றார்.[9] ஜலக் திக்லா ஜா 3 மற்றும் தேசி கேர்ள் ஆகிய தொடர்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
யுனிவர்சல் மியூசிக்கில் ஒரு ஆன்மீக இசைத் தொகுப்பிற்காக "ஏகோன்கர்" பாடல்களைப் பாடினார்.[10]
ஹர்ஜித் சிங் ரிக்கி இயக்கிய பஞ்சாபி திரைப்படமான சிர்பியர் (2012)-ல் பேடி நடித்தார்.
2013 முதல் 2014 வரை, ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சரஸ்வதிச்சந்திராவில் பேடி கும்மானாக எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The tale of Monica Bedi". The Times of India. 16 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "जेलर पर लगा था इस एक्ट्रेस के बाथरूम में कैमरे लगाने के आरोप, अंडरवर्ल्ड डॉन से भी जुड़ा नाम" (in hi). Rajasthan Patrika. 19 January 2020. https://www.patrika.com/bollywood-news/birthday-special-know-unknown-facts-about-monica-bedi-5665318/.
- ↑ Bedi, Aneesha (3 July 2015). "I am happy for him, says Abu Salem's ex-partner Monica Bedi on his impending marriage" (in en). Hindustan Times. Archived from the original on 13 பிப்ரவரி 2021. https://web.archive.org/web/20210213021347/https://www.hindustantimes.com/india/i-am-happy-for-him-says-abu-salem-s-ex-partner-monica-bedi-on-his-impending-marriage/story-IXPuSOnhBwVKQqu069TSsM.html.
- ↑ "The tale of Monica Bedi". The Times of India. 10 August 2005. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Top 10 Celebrities and Their Run-ins With the Law". The New Indian Express. 25 February 2016. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Fake Passport Case: SC Upholds Bedi's Conviction". Outlook. 9 November 2010. 2 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Supreme Court upholds Monica Bedi's conviction in fake passport case". Daily News and Analysis. 9 November 2010. 27 September 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Monica Bedi makes Telugu producers wary". The Times of India. 11 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ IANS (6 September 2008). "Monica Bedi bids adieu to Bigg Boss". Sify. 22 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Monica Bedi turns singer!". The Times of India. 11 April 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2013 அன்று பார்க்கப்பட்டது.