மொகிந்தர் சிங் கேபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொகிந்தர் சிங் கேபீ
Mohinder Singh Kaypee
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009 - 2014
பின்னவர்சந்தோக் சிங் சவுத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 நவம்பர் 1956 (1956-11-07) (அகவை 67)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்தர்சன் சிங் கேபீ

மொகிந்தர் சிங் கேபி (Mohinder Singh Kaypee) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மொகிந்தர் சிங் கேபி ஒரு தலித் குடும்பத்தில் தர்சன் சிங் கேபி மற்றும் கரண் கவுர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 1992 ஆம் ஆண்டில் காலிசுதானி போராளிகளால் கொல்லப்பட்டார் [1]

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார்.

அரசியல்[தொகு]

  • 2009 ஆம் ஆண்டில் இவர் சலந்தர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.[2] ஆனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஓசியார்பூர் தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் விச்சய் சாம்ப்லாவிடம் தோல்வியடைந்தார்.
  • மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டில் விளையாட்டு மற்றும் இளைஞர்களுக்கான மாநில அமைச்சராக இருந்தார்.[3]
  • பஞ்சாப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவராகவும் இருந்தார்.[4]
  • பஞ்சாப் மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சி வாரியத்தின் தலைவராக இருந்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Is it end of the road for politically powerful Dalit clans of Doaba?" (in ஆங்கிலம்). 2017-03-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  2. "Humble, but encore unlikely". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  3. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. Service, Tribune News. "Chaudhary tries to pacify ex-MP Kaypee". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  5. Service, Tribune News. "Once Tech Edu Minister, Kaypee settles for chairman of its board". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகிந்தர்_சிங்_கேபி&oldid=3826259" இலிருந்து மீள்விக்கப்பட்டது