மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறசுடேடியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேலிமோனிடே
பேரினம்:
இனம்:
மே. இசுகேபரிகுலம்
இருசொற் பெயரீடு
மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம்
கெல்லர், 1862[1]
வேறு பெயர்கள்
  • பேலிமோன் இசுகேபரிகுலசு கெல்லர், 1862
  • பேலிமோன் தோலிசோடேக்டைலசு கில்ஜெண்டராப், 1879
  • பேலிமோன் துபியசு கெண்டர்சன் & மத்தாய், 1910

மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம் (Macrobrachium scabriculum) என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் பரவலாகக் காணப்படும் நன்னீர் இறால் ஆகும்.

விளக்கம்[தொகு]

மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம் என்பது இந்தோ-பசிபிக் பகுதியில் பரவலாக காணப்படும் நன்னீர் இறால் ஆகும். இது மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சார்ந்தது. இந்த இறால் கோதா நதி இறால் என்றும் அழைக்கப்படுகிறது.[2]

பரம்பல்[தொகு]

மேக்ரோபிராக்கியம் இசுகேபரிகுலம் இலங்கையிலும் தென்னிந்தியாவின் சில இடங்களிலிருந்தும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் அறியப்படும் ஒரு பரவலான சிற்றினமாகும். இது பிலிப்பீன்சின் கிழக்குப் பகுதிவரை காணப்படுகிறது.[3][4][5] இந்த இறால் இந்தியாவில் பலபகுதிகளில் உள்ள ஆறுகளில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[6]

உயிரியல்[தொகு]

ஆண் இறால்களின் உடலின் மொத்த நீளம் சுமார் 6.5 செ. மீ. ஆக இருக்கும். இது பெண் இறாலில் சுமார் 5 ஆகும். ஆண்களின் இரண்டாவது மார்புக்காலில் ஒரு வகையான உரோமங்கள் காணப்படுகின்றன. மே. இசுகேபரிகுலம் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் அளவு சிறியதாக, பழுப்பு நிறத்தில், நீள்வட்ட வடிவில் உள்ளன.[7] முட்டையிலிருந்து வெளிவரும் இளம் உயிரிகள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்வதற்காக உப்பு நீருக்கு (கழிமுகம்) இடம்பெயர்கின்றன.[8] வளர்ச்சியடைந்த உயிரிகள் பின்னர் ஆற்றின் மேற்பகுதிக்கு இடம் பெயருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Heller C. 1862. Neue Crustaceen, gesammelt whrend der Weltumseglung der k. k. Fregatte Novara. Zweiter vorlufi ger Bericht. Verhandl. Zool.-Bot. Ges. Wien. 12:519–528.
  2. "ADW: Macrobrachium scabriculum: CLASSIFICATION". animaldiversity.org.
  3. Henderson J. R., Matthai G., 1910. On certain species of Palaemon from south India. Rec. Indian Mus., 4: 277-305.
  4. Wowor D., Choy S. C., 2001. The freshwater prawns of the genus Macrobrachium Bate, 1968 (Crustacea: Decapoda: Palaemonidae) from Brunei Darussalam. Raffles Bull. Zool., 49: 269-289.
  5. Cai Y., Ng P. K. L., 2002. The freshwater palaemonid prawns (Crustacea: Decapoda: Caridea) of Myanmar. Hydrobiologia, 487: 59-83.
  6. Padhye, S. M., & Ghate, H. V. (2015). Authentic record of a palaemonid prawn, Macrobrachium scabriculum (Heller, 1862) (Decapoda, Palaemonidae), from Maharashtra, India, Crustaceana, 88(9), 1049-1054. doi: https://doi.org/10.1163/15685403-00003469
  7. Jalihal, D. R.; Shenoy, S.; Sankolli, K. N. (1988). "Freshwater prawns of the genus Macrobrachium Bate, 1868 (Crustacea, Decapoda, Palaemonidae) from Karnataka, India". Records of the Zoological Survey of India 112. http://faunaofindia.nic.in/PDFVolumes/occpapers/112/index.pdf. 
  8. "Macrobrachium scabriculum". Aquarium Glaser GmbH. December 18, 2017.