கேமில் கெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேமில் கெல்லர் (Camill Heller)(26 செப்டம்பர் 1823 - 25 பிப்ரவரி 1917) என்பவர் விலங்கியல் மற்றும் உடற்கூறியல் நிபுணர் ஆவார் .

கெல்லர் தற்போது செக் குடியரசில் உள்ள போகிமியாவின் தெப்லிட்சில் உள்ள சோபோசில்பெனில் பிறந்தார். இவர் வியன்னாவில் 1849-ல் மருத்துவ ஆய்வுகள் குறித்து முனைவர் பட்டம் பெற்றார்.[1] கெல்லர் விலங்கியல் மற்றும் உடற்கூறியல் ஒப்பீட்டுத் துறைப் பேராசிரியராக போலந்தில் உள்ள கிராகோவில் பல்கலைக்கழகத்தில் 1858 முதல் 1863 வரையும் பின்னர் தனது ஓய்வு வரை (4894) ஆஸ்திரியாவில் உள்ள இன்ஸ்பிரக்கில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

கெல்லர் ஓடுடைய கணுக்காலிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தபோதிலும், பிரையோசூவா, முட்தோலி, கடற்சிலந்தி மற்றும் கடற்குடுவைகளிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hans G. Hansson. "Dr. Camill Heller". Biographical Etymology of Marine Organism Names. Göteborgs Universitet. Archived from the original on 2012-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமில்_கெல்லர்&oldid=3349300" இலிருந்து மீள்விக்கப்பட்டது